டிசலான தேகம், சிவந்த நிறம், ரத்தசோகை வந்தது போல் வெளிர் முகத் தோடு 23 வயது இளம் பெண், மிரண்ட விழிகளோடு தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்ச மடைந்திருக்கிறார். அவரை ஆறுதல்படுத்தியபின் விசாரிக்க ஆரம்பித்தனர் மகளிர் போலீஸார்.

"எம் பெயர் சாந்தி(பெயர் மாற்றப்பட்டுள் ளது). பி.காம். வரை படிச்சிருக்கேன். இங்குள்ள தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டன்ட்டாக வேலை செய்து வருகிறேன். அப்பா கொண்டரசம் பாளையத்தில் டெய்லராக இருக்கிறார். தம்பி ஒருத்தன் இருக்கான். நான் 5வது படிச்சுட்டு இருக்கும்போது அப்பா, அம்மா ஊருக்கு போனபோது என்னை தங்கராஜு பெரியப்பா வீட்டில் விட்டுட்டு போனாங்க. பெரியம்மாவிற் கும் உடம்பு சரியில்லாததால் அதுக்கப்புறம் நான் அடிக்கடி அங்க போவேன். இப்படி இருக்கும் போதுதான் பெரியப்பா அப்படி நடந்து கொண்டார். ஒருகட்டத்தில் வலி, வேதனை அதிகமானதால் "இதெல்லாம் வேண்டாம் ப்ளீஸ் விட்டுடுங்க...' பெரியப்பா' எனக் கெஞ்சினாலும் விடவில்லை. இதையே காரணங்காட்டி பிரகாஷ் அண்ணனும் அப்டி நடந்துக்கிட்டான். இதை விட்டு மீள முயற்சித்தாலும் முடியலை. இப்ப இது உயிருக்கே ஆபத்தாகும்னு சொன்னாங்க. அதான் என் உயிரைக் காப்பாத்திக்க புகாரளிக்க வந்திருக்கேன்'' என அப்பெண் சொல்லச் சொல்ல போலீசார் அதிர்ந்தனர்.

ff

திருப்பூர் மாவட்டம் கொண்டரசம் பாளையத்தை சேர்ந்த தங்கராஜும், பிரகாஷும் அடுத்த அரைமணி நேரத்தில் காவல்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். "நாங்க பேசி முடிச்சுக் கிறோம். நீங்க தலையிட வேண்டாம்'' என மகளிர் போலீஸாரிடம் எகிற, செல்லுபடியாகவில்லை. விசாரணை ஆரம்பித்த நிலையில், "எம் பேரு தங்கராஜு. கொண்டரசம்பாளையத்தில்தான் ஜெராக்ஸ் மிஷின் சர்வீஸ் சென்டர் வச்சிருக்கேன். சாந்தி எனக்கு தம்பி மகள். என் வீட்டுக்காரி மாற்றுத்திறனாளியென்பதால் அவளுக்கு உறுதுணையாக, சாந்தி 5-வது படிக்கும்போதே அவளை கூட்டிவந்து வீட்டில் வைத்துக் கொண்டேன். அவ்வப்போது ரூபாயும் கொடுப்பேன். ஏதோ சபலத்தில் நடந்துவிட்டது'' என பாலியல் வல்லுறவுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தான் அவன்.

தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸாரோ, "சொந்த பெரியப்பன், 10 வயசிலிருந்தே அசிங்கமான வேலையை செய்திருக்கின்றான் என்றால், அவனுடைய அண்ணன் மகன் பிரகாஷும், "நீ சித்தப்பாவோட பழகுறது எனக்குத் தெரியும்' என மிரட்டி அனுபவித்திருக்கிறான். சமீபத்தில்தான் பிரகாஷுக்கு திருமணம் நடந்தது. அப்படியிருந்தும் சாந்தியை விடலை. சாந்திக்கு நாட்கள் தள்ளிப் போகவே, கடந்த வாரத்தில் கர்ப்பப் பரிசோதனை கிட் வாங்கி சோதித்து ரிசல்ட் வராதநிலையில். விரக்தியடைந்திருக்கிறாள். அவளின் தோழியின் மூலமாகத்தான் விவகாரம் வெளிவந்துள்ளது. குற்றவாளிகள் இருவரையும் போக்சோவில் கைது செய்துள்ளோம். சாந்திக்கு மருத்துவ கவுன்சிலிங் கொடுத்து அனுப்பியுள் ளோம்'' என்கின்றனர். குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும்!

-ஆதித்யா