காவல்துறையின் அநீதியால் பாதிக்கப்பட்ட ஒருவர் நீதிகேட்டு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்ததுடன், இந்த அநீதியை வெளியே கொண்டு வரவேண்டும் என நக்கீரனைத் தொடர்புகொண்டார். என்ன பிரச்சனை எனக் கேட்டோம்.

"என்னோட பெயர் சங்கர். சென்னைக்கடுத்த திருநின்றவூர்ல குடும்பத்தோடு இருக்கிறேன். என் மைத்துனர் வைத்தீஸ்வரனுடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுரோடு அருகே (அரோவா ரெடிமிக்ஸ்) காங்கிரீட் கலவை தயாரிக்கும் நிறுவனத்துல இருந்து மொத்த மாக காங்கிரீட் பெற்று எங்கள் எம்.கே.எஸ். நிறுவனம், எஸ்.ஜி.ஏ. கன்ஸ்ட்ரக்சன் என்ற கட்டுமானம் செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பிவிடும். எங்கள் வங்கி கணக்கிற்கு கமிஷனை அரோவா நிறுவனம் அனுப்பிவைக்கும்.

jail

Advertisment

இந்தநிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு வரை நாங் கள் சப்ளை செய்த கான்கிரீட் ஆர்டருக்கான ரூபாய் 6,30,000 கமிஷன் தொகையை கொரோனா தொற்றைக் காரணம் காட்டி தாமதம் செய்துவந்தனர். பலமுறை அலைந்தபின் ரூபாய் 1,40,000 மட்டும் கொடுத்தனர். நாங் கள் காங்கிரீட் சப்ளை செய்தபோது இருந்த மேலாளர் அருள் வேறு இடத்திற்கு வேலைக்குச் சென்று விட்டதால் பாக்கித் தொகையை புதிய மேலாளர் சுரேந்தரிடம் அணுகிக் கேட்டோம். கடந்த 04-12-2021-ல் 20,000 ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு பாக்கித் தொகையான 4,90,000 ரூபாயை அடுத்த மாதம் கொடுப்ப தாகக் கூறினார்.

ffஅதன்படி ஜனவரி 5-ஆம் தேதி நானும் என் மைத்துனர் வைதீஸ்வரனும் அரோவா நிறுவனத்திற்கு நேரில் சென்றோம். நிலுவைத் தொகைபற்றி சூப்பர்வைசர் ராஜேஷிடம் பேசினோம். சற்று காத்திருக்கச் சொல்லி விட்டுப் போனார். அப்போது மேலாளர் சுரேந்தர், ராஜேஷ் செல்போனில் என்னிடம் பேசினார். நிலுவைத் தொகை யைப் பற்றி கேட்டேன். அதற்கு அவர், "டேய் நாய்களா... பணமெல்லாம் ஒண்ணும் கொடுக்கமுடியாது. மீறி பணம் கேட்டா... அந்த பணத்தை போலீஸ் கிட்ட கொடுத்து உங்கள உள்ள தூக்கி வைச்சிடு வோம்''’என்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்றுநேரத்தில் சீருடையில் இரண்டு போலீஸ்காரங்க வந்தாங்க. அருகிலிருந்த வெங்கல் காவல்நிலை யத்திற்கு கூட்டிட்டுப் போனாங்க. போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெயக்குமார், "டேய் கம்பெனில போயி மாமுல் கேட்கிறீங்களா..? மேனேஜர் சுரேந்தர் புகார் கொடுத் திருக்காரு. கேஸ் போடறேன். ரெண்டு பேரும் ஜெயிலுக்கு போங்க''” என்றார்.

உடனே நாங்கள் சப்ளை செய்த மெட்டீரியல் விவரம், பணப் பரிமாற்ற விவரங்கள் எல்லாத்தையும் காட்டினோம். இன்னும் சந்தேகம் இருந்தால் சி.சி.டி.வி. பதிவுகளைப் பார்க்கச் சொன்னேன். சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் எங்களை மீண்டும் அழைத்துக்கொண்டு ஆரோவ் நிறுவனத்திற்கே சென் றார். விசாரித்துவிட்டு வெங்கல் ஸ்டேசனுக்கு அழைச்சிக்கிட்டுப் போயிட்டு 294 இ, 341, 506(1), 384 நாலு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில அடைச் சிட்டாங்க. அந்த நிறுவனத்துல பணத்தை வாங்கிட்டு பொய் வழக்கு போட்டுட்டாங்க.

jail

Advertisment

எங்களிடம் மெட்டீரியல் சப்ளை செய்ததுக்கான அனைத்து ஆவணமும் ஆதாரமும் இருக்கு. எந்த தப்பும் செய்யாமல் 16 நாள் சிறைவாசம். இதுக்கு முன்னாடி எந்த வழக்கும் எங்கள்மீது கிடையாது. எங்களுக்கு நடந்த மனித உரிமை மீறலை வெளிக் கொண்டுவரணும்''”என்றார் கண்ணீர்மல்க. இதுதொடர் பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஜெயக்குமாரிடம் பேசினோம். "ஒரு இடத்தில் பணம் கொடுக்கல்- வாங்கலில் பிரச் சினை இருந்தால், அல்லது தர வில்லை என்றால் காவல்நிலையத் தை அணுகலாம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வாசலில் காரை நிறுத்திவிட்டு மற்ற வண்டிகள் செல்ல வழிவிடாமல் மிரட்டலில் ஈடுபட்டதற் கான பிரிவின் கீழ்தான் வழக்குப் பதிவு செய்துள்ளேன்''’என்றார். "ஆனால் மாமூல் கேட்டு மிரட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதே'' என்ற தற்கு ஆய்வாளரிடம் பதிலில்லை.

தமிழக காவல்துறையை ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாகச் சொல்வார்கள். சில்லறை லாபங்களுக்காக அந்தப் பெருமையை காவல்துறையினர் அடகு வைத்துவிடக் கூடாது.

________________

வெல்லமண்டி நடராஜனின் பதவிக்கு வேட்டு!

ரக உள்ளாட்சித் தேர்தலின் தோல்விக்குப் பிறகு, திருச்சி மாவட்ட அ.தி.மு.க. மூன்றாகப் பிரிக்கப்பட்டபோது, அதுவரை மாநகர் மாவட்டச் செயலாளராக கட்சிக்குள் பவர்ஃபுல்லாக வலம்வந்த எக்ஸ். எம்.பி. பா.குமார், புறநகர் தெற்கு மாவட்டச் ddசெயலாளராக நியமிக்கப்பட்டார். புதிய மாநகர் மாவட்டச் செயலாளராக நிய மிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பொறுப்பிற்கு வந்தவுடனேயே பா.குமாரின் ஆதரவாளர்கள் சிலரின் பதவியைப் பிடுங்கியதால் இருவருக்குமிடையே முட்டிக்கொண் டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட அ.தி.மு.க.வின் 3 மாவட்டச் செயலாளர் களுமே படுதோல்வி அடைந்தனர். அதன் பிறகு, தி.மு.க.விற்கு எதிராகவோ, அமைச்சர் நேருவிற்கு எதிராகவோ யாருமே வாய் திறக்காத நிலையில், வருமானத்திற்கு அதிக மான சொத்து, அமைச்சர் கே.என். நேருவின் தம்பி மறைந்த ராமஜெயத்திற்கு சொந்தமான கேர் கல்லூரி கடனில் இருந்து மீட்கப்பட்ட விவகாரம், பஞ்சப்பூருக்கு அருகில் புதிய பேருந்து நிலையம் கொண்டுவந்த காரணம் எனச் சர்ச்சை கருத்துகளைக் கூறி, சமீபகாலமாக நேருவிற்கு எதிராகdd அரசியல் செய்யத் துவங்கியிருக்கிறார் பா.குமார். குமாரின் அதிரடிப் பேச்சுகள், மாநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு பா.குமார் அடிபோடுகிறாரோ என்று வெல்லமண்டியார் தரப்பில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உள்ளூர் அ.தி.மு.க.வின ரிடம் விசாரித்தபோது, "உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்ட தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப் பட்ட அமைச்சர் கே.என்.நேருவின் வியூ கத்தால்தான் எடப்பாடியாரின் சொந்த வார்டில்கூட அ.தி.மு.க. ஜெயிக்க முடிய வில்லை. இந்நிலையில், நேருவுக்கு எதிராக அரசியல் செய்யவேண்டிய வெல்லமண்டி நடராஜனோ, அமைதியாக இருப்பதோடு, தனது மகன் ஜவஹரை முன்னிலைப்படுத்து வதிலேயே குறியாக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியின் குட்புக்கில் இடம்பெற்றுள்ள பா.குமார், பவர்ஃபுல்லான மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியைப் பெறக்கூடும்'' என்கிறார்கள்.

-துரை.மகேஷ்