ஊழல் செய்த அதி காரியைக் காப்பாற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள். அதற்கு ஊழல் கண்காணிப்பு தடுப்புப் பிரிவு துணை போகிறது எனக் குற்றம்சாட்டி, பிரதமர் அலுவல கம் முதல் முதலமைச்சர் அலு வலகம் வரை புகார் அனுப்பி யுள்ளனர்.
தமிழ்நாடு சமூகநலத் துறை இணை இயக்குநராக சென்னை பனகல் மாளிகையில் உள்ள அலுவலகத்தில் பணி யாற்றுபவர் ரேவதி. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச் சித் திட்ட மாவட்ட அலு வலகம் உள் ளது. அங்குள்ள மாவட்ட அதிகாரியைத் தொடர்பு கொண்டு, "திட்டத்தில் ஊழல் செய் திருக்கறதா உங்கமேல புகார் வந்தி ருக்கு. விசா ரணைக்கு சென்னைக்கு வாங்க" என அழைத்து, "புகாரை ஒண்ணுமில் லாம செய்றேன். இன்னாரைப் பாருங்க'' எனப் பெயரைச் சொல்வாராம். அந்த புரோக்கர் களும் மாவட்டத்துக்குத் தகுந்தாற்போல் பேரம்பேசி அமவுண்ட் வாங்கியுள்ளார்கள்.
இப்படி சேலம், நெல்லை, தேனி, நாகை மாவட்ட அதி காரிகளிடம் லட்சங்களில் பணம் வாங்கியவர்கள், அதனைப் பெரும்பாலும் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைன் ட்ரான்ஸ்பர் மூலமாக ரேவதி வங்கிக் கணக்குக்கு அனுப்பி யுள்ளனர். ஒருகட்டத்தில் ரேவதியே போலி யாக பெட்டி ஷன் தயாரித்து புகார் வந்திருப்ப தாக மாவட்ட அதிகாரிகளை மிரட்டி புரோக்கர்கள் மூலமாக பணம் வாங்கு வதைத் தெரிந்துகொண்டு, இதுகுறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பியுள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் விஜிலென்ஸ் டி.எஸ்.பி. யுவராஜ், ரேவதி மற்றும் புரோக் கர்கள் ராஜ்குமார், காளிசரண், பாபு, விநாயகமூர்த்தி, ஆண்ட்ரூ, கோவிந்தராஜன் என 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
ஆனால் அவ்வழக்கில் இது வரை மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையென்று பா.ஜ.க. வழக்கறிஞர் திருச்செந்தூர் முத்துகணேஷ் புகாரளித்துள் ளார். அவர் நம்மிடம், "மத்திய, மாநில அரசுகளின் நிதி மூல மாகப் பல்வேறு நலத்திட்டங் களை சமூகநலத்துறை செயல் படுத்துகிறது. இத்துறையில் பல் வேறு முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வருகிறது. இணைஇயக்குநர் ரேவதி, அதிகாரிகள் மீது போலி யாகப் புகார்களைத் தயார் செய்து, மிரட்டி பணம் வாங்கி யது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளது விஜிலென்ஸ். அதே போல், ரேவதி தனது சகோதரி பெயரில் கோவில்பட்டியிலும், தனது மகள் பெயரில் சென்னை யிலும் முதியோர் இல்லங்களை நடத்துவதாகத் தெரிகிறது. இது சட்டப்படி தவறு. இதுகுறித் தெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்குக் காரணம், ரேவதியின் கணவர் சொக்கலிங்கம் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி. ரேவதியின் சம்பந்தி முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவர்கள்தான் மேல் நடவடிக்கை எடுக்காதபடி தடுக்கிறார்கள். எனவே புகார் அனுப்பியுள்ளேன். இனியும் நடவடிக்கையில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன்'' என்றார்.
சமூகம் பெரிய இடம்தான் போல!