"ஹலோ தலைவரே, வரும் நாடாளுமன்றத் தேர்தலை அமைச்சர் உதயநிதி தலைமையில் எதிர்கொள்ள தி.மு.க. தயாராகுது.''”

"முதல்வர் கொஞ்சம் ஓய்வெடுக்கப் போகிறாரா?''’

"அப்படி சொல்ல முடியாதுங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் அவருக்கு தேர்தல் பணிகள் மூலம் அதிக வேலைப் பளுவைத் தந்துவிடக் கூடாது என்று அறிவாலயம் கருதுகிறது. அதனால், அகில இந்திய அளவிலான அரசியல் வியூகங்களை வகுப்பது, கூட்டணிக் கட்சிகள் குறித்துத் தீர்மானிப்பது உள்ளிட்ட ஒருசில முக்கியமான பணிகளை மட்டும் முதல்வர் கவனிப்பாராம். மற்றபடி வேட்பாளர் தேர்வு தொடங்கி, தேர்தல் செலவுகள், பிரச்சாரம், தேர்தல் வியூகங்கள் ஆகிய அனைத்தையும் முதல்வரின் ஆலோசனைப் படி, உதயநிதிதான் இந்தமுறை நிர்வகிக்க இருக்கிறா ராம். இப்படியாக உதயநிதி தலைமையில்தான் தி.மு.க. தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது என்கிறார்கள் அங்குள்ள சீனியர்கள்.''’

"தி.மு.க. கூட்டணியில் இணையும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் குறித்த ஆலோசனைகளும் தி.மு.க.வில் நடக்குதே?''”

Advertisment

rr

"உண்மைதாங்க தலைவரே, இந்த முறை கமலின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவரு கிறது. இது உறுதியாகும் பட்சத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிக்பாஸை கோவையில் நிற்கவைக்கலாம் என்று தி.மு.க. திட்டமிடுகிறதாம். இதன்மூலம், இந்தமுறை அங்கே நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்க நினைக்கும் வானதி சீனிவாசனுக்கு செக் வைக்கலாம் என்பது அறிவா லயத்தின் கணக்கு என்கிறார்கள். அதேநேரம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வானதிக்காக கரன்ஸிக் கட்டுகளை அள்ளியிறைத்து கமலுக்கு எதிராக அவரை ஜெயிக்க வைத்தவர், அ.தி.மு.க. மாஜி மந்திரியான வேலுமணிதான். இந்தமுறை வானதி எம்.பி.யானால் அவருக்கு ஒன்றிய அமைச்சரவையில் சீட் கிடைக்கும் என்று வேலு மணி தரப்பு கருதுகிறதாம். அதனால் இந்தமுறை யும் அவரை வெற்றி பெறவைத்துவிடவேண்டும் என்று நினைக்கும் வேலுமணி தரப்பு, இப்போதே அவருக்காக கரன்ஸிப் பாசனத்தையும் ஆரம்பித்து விட்டதாம். இதை அவதானித்த பிக்பாஸ் கமல், இந்தமுறை கோவையில் போய் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றும், வடசென்னையில் களமிறங்கினால் வெற்றி பெறலாம் என்றும் கருதுகிறாராம்.''”

"சரிப்பா, அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழாவிற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்துக்கிட்டு இருக்கே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, அயோத்தி ராமர்கோவிலின் கட்டுமானப்பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில், ஜனவரி 27-ல் அதை பிரதமர் மோடி திறந்துவைக்கத் திட்ட மிட்டிருக்கிறார். அந்தத் திறப்பு விழாவை உலக அளவில் பரபரப்பாக பேச வைக்கவும் பா.ஜ.க. தரப்பு திட்டமிட்டிருக்கிறது. அதாவது, ஜனவரி 26 குடியரசுத் தினம் வருவதால், அதற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்தியாவுக்கு அழைக்க இருக்கிறார் மோடி. அப்படி வரும் உலகத் தலைவர் களை, ராமர் கோயிலுக்கு வரவழைத்து, அவர் களுக்குச் சுற்றிக்காட்டவும் திட்டங்கள் வகுக்கப் பட்டு வருகின்றன. இதன்மூலம், ராமர் கோயிலின் பெருமையை உலக அளவில் எடுத்துச்செல்லலாம் என்று மோடி நினைக்கிறாராம். இந்தத் திறப்பு விழாவிற்கு பெருமளவில் மக்களைத் திரட்ட நினைக்கும் டெல்லி, இதற்காக நாடுமுழுதிலும் இருந்தும் இலவசமாக ரயிலை இயக்கலாமா என்றும் ஆலோசிக்குதாம்.''”

"ராமர் கோயிலை வைத்து வரும் நாடாளு மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் திட்டத்தையும் பா.ஜ.க. வகுத்து வருகிறதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, இந்திய மக்களை இந்து மதத்தின் பெயரில் ஒன்று திரட்ட விரும்பும் பா.ஜ,க., இந்த ராமர் கோயிலை அதற்கு மூலதனமாக ஆக்க நினைக்கிறது. ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, பல மாநிலங்களில் இருந்தும் அயோத்தி நோக்கி பக்தி ஊர்வலங் களை நடத்தும் முயற்சிகளும் நடக்குது. ராம நாமத்தை பலமாக ஒலிக்கச்செய்வதன் மூலம், நாடாளுமன்றத் தேர்தலை மதரீதியாக எதிர் கொண்டு, அதில் குளிர்காய்வதுதான் பா.ஜ.க.வின் வியூகம். அதுபோல் தமிழகத்தில் பெரியாருக்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்தையும் பா.ஜ.க. அண்ணாமலை, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட் டோர் இப்போதே தொடங்கி இருக்கிறார்கள். இத்தனை நாளாய் எதிரும் புதிருமாக இருந்த இவர்கள் இருவரும் இப்போது கைகோத்திருப் பது பெரியாரிய எதிர்ப்புக்காகவாம். இப்படி பா.ஜ.க. தரப்பு மதவாதத்தைத் தீவிரமாக கையில் எடுத்து வருவதை சிறுபான்மை மக்கள் கவலையோடு கவனித்து வருகிறார்கள்.''”

"அது சரிப்பா, பா.ஜ.க. அண்ணாமலைக்கு எதிரான புகார்கள், காவல்துறையிடம் குவிஞ்சிக் கிட்டே இருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, சிறுகுறு தொழில் தொடங்க, கடன் வாங்கித் தருவதாக பெரும் மோசடியில் ஈடுபட்டு, தன் டீமோடு சிக்கியிருக் கும் முத்துராமன், அந்த தொகையில் பா.ஜ.க. தரப்புக்கு வாரிக்கொடுத்தது பற்றி பகிரங்கமாக பேசிய ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருது. குறிப்பாக, அண்ணாமலையின் பிரச்சாரப் பய ணம் சிவகங்கையில் நடந்தபோது, அண்ணா மலைக்கு ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்ததாக வும், மதுரையில் அவர் பயணம் மேற்கொண்ட போது அவருக்கு 50 லட்ச ரூபாய் கொடுத்ததாக வும் முத்துராமன் அவற்றில் பேசியிருக்கிறார். அதே சமயம், அந்த முத்துராமன் போலீஸில் கொடுத்த வாக்குமூலத்தில் பா.ஜ.க. அண்ணா மலைக்கு மொத்தம் 18 கோடி ரூபாய் வரை அள்ளிக் கொடுத்திருப்பதாக பகீர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம். ஏற்கனவே ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்திலும், மோடி பெயரில் கபடிப் போட்டி நடத்தும் சாக்கில் வசூல் செய்த விவகாரத்திலும் சிக்கியிருக்கும் அண்ணாமலையை, இந்த விவகாரத்திலும் டார்கெட் வைத்திருக்கிறதாம் காவல்துறை. ஆருத்ரா விவகாரத்தில் தான் சரண்டர் ஆக இருப்பதாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் சொல்லியிருக்கும் நிலையில், அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து, தன்னைக் கைதுசெய்துவிடுவார்கள் என்று அண்ணாமலை இப்போது பீதியில் இருக்கிறாராம்.''”

"இந்த நேரத்தில் டெல்லியில் அ.தி.மு.க. சில மூவ்களைச் செய்து வருகிறதே?''”

"தி.மு.க. கூட்டணி வலிமையாக இருந்து வருவதால், அதோடு கைகோத்திருக்கும் காங்கிரஸை எப்படியாவது அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு வந்து விடவேண்டும் என்று, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், எடப்பாடிக்காக டெல்லியில் காய்களை நகர்த்தி வருகிறாராம். அப்படி அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால், அக்கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் 15 சீட்டுகள்வரை ஒதுக்கத் தயார் என்றும் அவர் மூலம் எடப்பாடி தெரிவித்திருக்கிறாராம். இந்த தகவல் ராகுலுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், தி.மு.க.வோடு இதுவரை எங்களுக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை. அப்படி ஏதேனும் எதிர்பாராத வகையில் ஏற்பட்டால், உங்கள் ஆஃபர் பற்றி ஆலோசிக்கிறோம் என சொல்லிவிட்டாராம். இருந்தாலும், எடப்பாடியிடம் நம்பிக்கையுடன் இருங்கள். அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் என்று தெம்பூட்டியிருக்கிறாராம் நீதிபதி.''”

"அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தை எடப்பாடி கூட்டுகிறாரே?''”

"நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொள்வதற்காக கட்சியின் பூத் கமிட்டி களில் இளைஞரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட முக் கிய அணிகளைச் சேர்ந்த நிர்வாகி களை உள்ளடக்கி தலா 25 பேர் இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார் எடப்பாடி. ஆனால், இதில் பல மாவட்டங்களில் மா.செ.க்கள் சொதப்பி வைத் திருக்கிறார்களாம். இதனால் டென்ச னான அவர், மா.செ.க்கள் கூட்டத்தை 21ஆம் தேதி கூட்டவிருக்கிறார். அந்த கூட்டத்திற்கு பூத் கமிட்டியின் பட்டிய லோடு வரவேண்டும் என்று மா.செ.க் களுக்கு அவர் கட்டளையிட்டிருக்கிறார்.''

11

"இதற்கிடையே, ஓ.பி.எஸ்., தினகரன் முகாம்களில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களை அ.தி.மு.க. பக்கம் இழுத்து வரவேண்டும் என்று அண்மை யில் அவர்களுக்கு அசைன்மெண்ட் கொடுத்திருந்தார். அது குறித்தும் இந்தக் கூட்டத்தில் கேட்கவிருக்கிறாராம். வாக்காளர்கள் பட்டியலை கண்காணிப் பதிலும் அவர்கள் ஈடுபடவேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் அவர் அறிவுறுத்தவிருக்கிறார் என்கிறார்கள்.''”

"டாஸ்மாக் விவகாரத்தில் மேலிடம் அதிருப்தி மனநிலையில் இருக்கிறதாமே?''”

"டாஸ்மாக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்தபோது, அவர் உருவாக்கிய கரூர் கம்பெனிதான் அதை எல்லா வகையிலும் ஆட்டிப் படைத்தது. அந்தக் கம்பெனி வைப்பதுதான் அங்கே சட்டமாகவும் இருந்தது. பார்கள் ஒதுக் கீடு செய்வது தொடங்கி, சட்டவிரோத பார்களை நடத்துவது வரை பல கோடிகளை வசூலித்துக் கொடுத்தது அந்த கரூர் கம்பெனி கேங். அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில், டாஸ்மாக் துறை செந்தில் பாலாஜியிடமிருந்து எடுத்து, அமைச்சர் முத்துச்சாமியிடம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கரூர் கம்பெனியும் செயலிழந்துவிட்டது. எனவே அதிருப்தி மனநிலையில் இருக்கும் மேலிடம், மீண்டும் அந்த கரூர் கேங்கிற்கு உயிர் கொடுத்து களத்தில் இறக்கிவிடலாமா? என்று ஆலோசிக்கிறதாம்.''”

"முக்கிய அமைச்சர் துறை பற்றியும் சலசலப்பு எழுதிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, அந்த துறையில் அண் மையில் 500 பணி நியமனங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் 20 சத பணியிடங்கள், ஆளுங்கட்சி மா.செ.க்களின் பரிந்துரைப்படி நிரப்பட்டி ருக்கிறதாம். மற்ற பணியிடங்களில் அமைச்சர் தரப்பின் விருப்பப்படியே நியமனங்கள் நடந்திருக் கின்றன என்கிறார்கள். இந்தப் பணியிடங்கள் ஒவ்வொன்றிலும் தலா ரூபாய் 10 லட்சம் வரை பரிந்துரைத்தவர்கள் பெற்றிருப்பதாக பரபர டாக் அடிபட்டு வருகிறது.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். கொடநாடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், தங்களுக்குள் பல்வேறு ரகசியங்களைப் பேசிய உரையாடல் அடங்கிய ஒரு பென் டிரைவ், சி.பி.சி.ஐ.டி. டீமுக்குக் கிடைத்திருக்கிறது. அதில் அதிர்ச்சியூட்டும் பல புதிய தகவல்கள் அடங்கியிருக்கின்றன என்கிறார்கள் அதிகாரிகள்.''”

____________

இறுதிச் சுற்று!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அருமநல்லூர் சந்திப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையினை காங்கிரஸ் கட்சியினரே பராமரிப்பு செய்தும் வருகின்றனர். இந்நிலையில் 13ஆம் தேதி திங்கள்கிழமை காலை, அச்சிலையின் தலைப்பகுதியானது துண்டிக்கப்பட்டிருப்பதை பார்த்து அப்பகுதியினர் அதிர்ச்சி யடைந்தனர். மேலும் இது குறித்த தகவல் பரவிய நிலையில்... அப்பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், எம்.பி., விஜய்வசந்த் உள்ளிட்டோர் கூடத்தொடங்கினர்.

இது குறித்தான புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராஜீவ் காந்தியின் தலை துண்டிக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து மாயமாகியதற்கு காரணம், அப்பகுதியில் மது போதையில் சுற்றித் திரிந்த சங்கிகள் குறித்தான தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

-நாகேந்திரன்