அமலாக்கத்துறை ரெய்டுகளால் தலைமறைவாகிப் போயிருந்த மணல் மாபியா, கடந்த 17ம் தேதி முதல் ஆக்டிவாக திரும்பவும் வந்துவிட்டது. மொத்தம் 28 இடங்கள். அதில் 6 ஆற்று மணல் குவாரிகள், ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் வீடுகள், சேப்பாக்கத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகம் எனப் பாய்ந்த அமலாக்கத்துறை, 15 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் மற்றும் பணம் நகைகள் கைப்பற்றப்பட்டதாக அறிவித்த அறிக்கையின் ஈரம் காய்வதற்கு முன்பே தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளை மறுபடியும் தொடங்கிவிட்டது.
தமிழ்நாட்டிலிருந்து மணலையும் கல்லை யும் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாநி லம் கேரளா. கேரளாவிற்கு அதிக கனிம வளங் களை அனுப்பும் மாநில மான கோவை மாவட்டத் தில் கனிம வளத்துறை அசிஸ்டென்ட் டைரக்ட ராக இருப்பவர் சசிகுமார். அவருக்கு உதவியாளராக இருப்பவர் மாரியப்பன். கோவை எஸ்.பி.யாக இருப்பவர் பத்ரிநாராயணன். ஐ.ஜி.யாக இருப்பவர் பவானீஸ்வரி. இவர்கள் நாலுபேரையும் மேப்படி ஆட்கள் சந்தித்தார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/karikalan_6.jpg)
“அமைச்சர் துரை முருகன் மறுபடியும் கனிம வளங்களை கேரளாவிற்கு அனுப்பும் வேலைகளை பார்க்கச் சொல்லியுள்ளார். அமலாக்கத்துறை ரெய்டு களினால் ஒட்டுமொத்தமாக கனிம வள ஆபரேஷன்கள் நின்றுபோய்விட்டன. இதனால் தமிழகத்திலும் கேரளாவிலும் கர்நாடகாவிலும் மணல் ஜல்லி விலை உயர்ந்துவிட்டது. அதனால் உடனடியாக இவற்றை வெட்டி எடுத்து அனுப்பினால் அதிக லாபம் கிடைக்கும்” என்று கரிகாலன் ஆட்கள் சொல்ல, கோவையில் உள்ள 120 கல்குவாரி களிலும் ஏகப்பட்ட வெடிகள் வெடித்துச் சிதற ஆரம்பித்தன.
ஒவ்வொரு யூனிட் கற்களுக்கும் 500 ரூபாய் கரிகாலன் டீமிற்கு மாமூலாகக் கொடுக்க வேண்டும் என ரேட் பேசி முடிக்கப்பட்டது.
பல டயர் பொருத்திய நீளமான லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவை நோக்கிப் போக ஆரம்பித்துள்ளன. இதே நிலைமைதான் கர்நாடகாவின் எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியிலும். கர்நாடகாவை நோக்கி தடையில்லாமல் கனிம வளங் கள் சென்று கொண்டிருக் கின்றன. தமிழ்நாடு முழுவதும் கல் குவாரிகள், சவுடு மண் எடுக்கும் இடங்கள், அமலாக் கத்துறை ரெய்டுக்குப் போகாத ஆற்று மணல் குவாரிகள் என அனைத்தும் கடந்த 17ம்தேதி முதல் இயங்க ஆரம்பித்து விட்டன. இவற்றையெல்லாம் கண் காணிக்கும் கரிகாலன் குழு தங்களது போன் நம்பர்களை மட்டும் மாற்றிவிட்டனர். "அமலாக்கத்துறை ரெய்டுகளால் கனிமவள கொள்ளையர்களின் போன் நம்பர்களை மட்டும்தான் மாற்ற முடிந்தது' என் கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-09/karikalan-t_1.jpg)