மேற்குத்தொடர்ச்சி மலையில் தமிழக -கர்நாடக -கேரள எல்லைகளில் இயற்கையின் வாழ்விடமாக இயங்கிக்கொண்டிருக்கிறது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். பன்னாரியை கடந்து சென்றால் திம்பம், ஆசனூர், தலமலை, தாளவாடி, அரேபாளையம், கேர்மாளம், கடம்பூர் மலை பகுதியுடன் பர்கூர், விளாங்கோம்பை என நீள்கிறது. அதேபோல் பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமராட்டா, சிறுமுகை என தொடர்கிறது. காட்டு யானைகள், புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, மான், காட்டுப் பன்றி, காட்டெருமை என வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

e

அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் வன விலங்குகள் அவ்வப்போது, காடுகளை யொட்டிய பழங்குடி மக்களின் விவசாய நிலங் களுக்கு வந்து விவசாய பயிற்களை சேதப்படுத்து வதும் உண்டு. இதில் குறிப்பாக காட்டு யானைகள்தான் அதிக சேதத்தை உருவாக்கி விட்டு சென்று விடுகிறது.

விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்து வதால் தோட்டத்தை சுற்றி விவசாயிகள் பலர் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர், இந்த நிலையில் 23-ந் தேதி இரவு கொங்கர் பாளையத்தில் கார்த்தி கேயன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் 35 வயது ஆண் யானை ஒன்று மின்வேலியில் சிக்கி பரிதாப மாக இறந்துவிட்டது.

Advertisment

e

அதேபோல் பவானிசாகர் வனப்பகுதியான கராச்சிகொரை என்னுமிடத்தில் ராஜன் என்பவருக்கு சொந்தமான ஒன்றை ஏக்கர் நிலத் தில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. இது வனப் பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் தோட்டத் தைச் சுற்றி, ராஜன் வன விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்க மின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில் 25-ந் தேதி இரவு அவரது தோட்டத்துக்கு செல்ல முயன்ற ஆண்யானை எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கி இறந்து விட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் வனத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வன விலங்குகள் விவசாய தோட்டத்திற்குள் வரமால் இருக்க கம்பிவேலி அமைக்கலாம்... அதை தொட்டால் லேசாக ஷாக் அடிக்கும் அளவுக்கு மிக குறைவான மின்சாரம்தான் பாய்ச்ச வேண்டும். ஆனால் குறைவான அளவு மின்சார கம்பிகளை யானைகள் பிடுங்கிவிடுகிறது என்பதால் கம்பியைத் தொட்டால் மின்சாரம் உடலில் பாயும் அளவுக்கு ஹைவோல்ட் அதிக மின்சாரம் பாய்ச்சுவதால் காட்டுயானைகள் நிகழ்விடத்திலேயே மின்சாரம் பாய்ந்து துடி துடித்து இறந்து விடுகிறது. ஆண்டுக்கு 30 முதல் 50 யானைகள் இப்படி பலியாகின்றன என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்களும் வன ஊழியர்களும்.

Advertisment

யானைகள் விளைநிலங்களில் ஊடுருவாமல் தடுக்க சுற்றிலும் அகழி அமைக்கலாம் அல்லது மாற்று திட்டத்தை வனத்துறையினர்தான் செயல்படுத்த வேண்டும்.

c