பெரும்பாலும் மலை சார்ந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்படும் விளைபயிர்களை காட்டு விலங்குகள் சிலநேரம் நாசம் செய்துவிடும். அவற்றைத் தடுப்பதற்காக விவசாயிகள் பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர், எதைப்பற்றியும் கவலைப்படாமல் காட்டு விலங்குகளை நிலத்திற்குள் வராமல் தடுக்க மின்சார வேலிகளை அமைக்கிறார்கள். இப்படி விலங்குகளுக்காக வைக்கப்படும் மின்வேலிகள் தொடர்ந்து அப்பாவி மனிதர்களின் உயிர்களை எடுத்து வருகின்றன. இப்படிப்பட்ட கொடூரங்கள் பரவலாகத் தொடர்வதுதான் கவலையை ஏற்படுதுகிறது.

ee

கடந்த வாரம் கள்ளக்குறிச்சி மாவட்டம் காடியார் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது ராதா கிருஷ்ணனும், இவரது மனைவி அன்ன பூரணியும் இவர்களது மகன் சந்தோஷ்குமா ரும் தங்கள் கரும்பு வயல் பகுதியில் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்கள்.

விபரீதம் தெரியாமல் இந்த மூவரையும் தேடிவந்த அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, திருக்கோவிலூர் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் அந்த பயங்கரம் தெரியவந்தது.

மேலபழங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, அவரது மனைவியின் நாவம் மாள், மகன் தாமரைச்செல்வன் ஆகிய மூவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

ee

Advertisment

கைதானவர்களோ "நாங்கள் மிருகங்களுக் காக மின்வேலி அமைத்திருந்தோம். பக்கத்து வயலைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் குடும்பத் தினர் மூவரும் தங்கள் வயலுக்கு செல்லும் போது, மின்சார வேலியில் சிக்கிப் பலியாகி விட்டார்கள். இதை மறுநாள்தான் நாங்கள் பார்த்து அதிர்ந்து போனோம். உடனடியாக மின்வேலியை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு எதுவும் நடக்காதது போல் சென்றுவிட் டோம். இப்போது சிக்கிக் கொண்டோம்” என்ற ரீதியில் புலம்பினார்களாம். இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் சாத் தப்பாடியை சேர்ந்த சக்திவேல் என்பவர், தன் நிலத்தில் மின்சார வேலி அமைத்திருந்தார். பக்கத்து வயல்காரர் கருப்பசாமி என்பவர் தெரியாத்தனமாக இந்த வேலியில் சிக்கி உயிரிழந் தார். சக்திவேலை போலீசார் கைது செய்திருக் கிறார்கள். மேலும், ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் இவர் குத்தகை விவ சாயம் செய்து வருகிறார். அதில் காட்டு விலங்கை கட்டுப்படுத்த மின்சார வேலி அமைத்துள்ளார். கொடுமை என்னவென்றால், தன் உறவினரான வெங்கடேசன் என்பவரோடு வேலியை அமைத்த ஜெயக்குமாரும் சிக்கி உயிரிழந்ததுதான். இதுகுறித் தும் விசாரணை நடந்து வருகிறது. இதேபோல் கடலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வினீத் என்ற இளைஞர் தங்கள் நிலத்தில் இருந்த மரத்தில் பழம் பறிக்க சென்றபோது, பக்கத்து வயலில் மின்சார வேலி அமைத்திருந்தது தெரியாமல் அதில் சிக்கி உயிரிழந்தார்.

இப்படி தினசரி விலைமதிப்பற்ற மனித உயிர்களும் மின்வேலிகளுக்கு பலியாவது போல், வன விலங்கினங்களும் அநியாயமாய் உயிரிழந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக,தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்மையில் மின்சார வேலியில் சிக்கி ஓர் ஆண் யானை, இரண்டு பெண் யானை உட்பட மூன்று யானைகள் உயிரிழந்தன. பாலக் கோடு அருகே கணவனஹள்ளி கிராமத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில் வித்தியாசமான உறுமல் சத்தம் கேட்டுள்ளது. பொதுமக்கள் அப்பகுதிக்குச் சென்று பார்த்துள்ளனர் அங்கே சிறுத்தை ஒன்று கழுத்தில் இரும்பு கம்பி மாட்டி கழுத்து இறுகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அது குறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்தனர். மீட்கப்பட்ட சிறுத்தை இரவோடு இரவாக ஓகேனக்கல் சின்னாறு வனப் பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. வனவிலங்குகளுக்கு போடப்பட்ட மின்சார வேலியில் சிறுத்தை சிக்கியதா அல்லது மிருகங்களை வேட்டையாடும் கும்பல் வைத்த கம்பியில் அது சிக்கியதா என்பது குறித்து, போலீசாரும் வனத்துறையினரும் விசாரணை நடத்திவரு கிறார்கள். பொதுவாக மனிதர்களுக்கு உள்ள அதே உரிமைகள் விலங்குகளுக்கும் உண்டு. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது போல விலங்குகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்” லிஎன தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இதை எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

ee

Advertisment

இதுமட்டுமா? அண்மையில் கடலூர் மாவட் டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே வனத்துறைக்குச் சொந்தமான காப்பு காட்டுப் பகுதியில் இருந்து ஆலிச்சிக்குடி, இளமங்கலம், கருவேப்பலங்குறிச்சி, உள்ளிட்ட கிராம விவசாய நிலங்களில் விவசாயப் பயிர்களை வனவிலங்குகள் தின்பதோடு நாசம் செய்வதாக அறிந்து அதைத் தடுப்பதற்கு அப்பகுதி விவசாயிகள் மின்சார வேலியை அமைத்துள்ளனர். இந்தத் தகவல் வனத்துறை அலுவலர் ரகுவரன் காதுக் குப் போக, உடனே அவர் தலைமையில் வனத்துறை யினர் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள விவ சாய நிலங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பலர் தங்கள் நிலங்களில் மின் வேலி அமைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதி காரிகள், அந்த மின்சார வேலிகளை அப்புறப்படுத் தியதோடு, விவசாயிகளை அழைத்து காட்டு விலங்குகளை வயலுக்கு வராமல் தடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்படி தான் தடுக்க வேண்டும். இதுபோல் சட்டத்துக்கு புறம்பாக மின்சார வேலி அமைப்பதால் வழிப்போக்கர்கள் அக்கம் பக்கம் வயலைச் சேர்ந்தவர்கள் அதில் சிக்கி இறந்துபோகும் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே இது போன்ற மின்சார வேலி அமைக்கக் கூடாது எனக் கடுமையாக எச்சரித்தனர். இதுகுறித்து எம்.குன்னத்தூர் விவசாயி தம்பிதுரை நம்மிடம், "மலைப்பகுதியை ஒட்டி மட்டுமல்ல, எங்கள் பகுதியில் பெரியமலை கள் கிடையாது. ஆனால் பல இடங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகள் உள்ளன. அதில் வாழும் மான்கள், மயில்கள், காட் டுப் பன்றிகள் போன்றவை விவசாயப் பயிர்களை நாசம் செய்கின்றன என்று மின்சார வேலிகளை அமைக்கிறார்கள். தமிழகம் உட்பட இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களின் வனவிலங்குகளால் விவசா யப் பயிர்கள் சேதப்படுத்தப் படுவதற்கு சில மாநிலங் களில் எளிய வழியில் தீர்வு காணப்பட்டுள்ளது. அதில் அண்ட்ரிஸ் (ஆசஒஉஊதந) எனப்படும் மிகச்சிறந்த பாதுகாப்பான சாதனத்தை கண்டுபிடித்து விவசாய நிலங்களில் அமைத்து வரு கிறார்கள். இதன் மூலம் வனவிலங்குகளுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காமல் காட்டு விலங்குகளிட மிருந்து பயிர்களைப் பாது காக்க முடிகிறது. இந்தக் கருவி அப்பகுதிக்கு வரும் காட்டு விலங்குகளின் நட மாட்டத்தை கண்டறிந்த தும் எச்சரிக்கை ஒலி எழுப் பும். இதைக் கேட்டதும் விலங்குகள் வந்தவழியே காட்டுக்குள் ஓடிவிடும். இதுபோன்ற கருவியை இங்கும் பயன்படுத்தினால் தேவையற்ற விபரீதங் களைத் தடுக்க முடியும்'' ’என்கிறார் அழுத்தமாக.

இதற்கு எடுத்துக்காட்டாக புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் விவசாயி உமா சங்கர் தனது விவசாய நிலத்தை சுற்றி 20 விதமான ஒலிகள் கேட்கக்கூடிய ஸ்பீக்கர் களை ஆங்காங்கே பொருத்தியுள்ளார். இந்த ஸ்பீக்கரில் இருந்து யானை, சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளின் கர்ஜனை ஒலி மற்றும் மான், மயில், காட்டுப்பன்றி, நாய், குரங்கு ஆகியவற்றின் குரல்களை பதிவு செய்து, இரவு நேரங்களில் அவைகளை ஒலிக்கச் செய்துள்ளார். இதற்கான செலவு 6000 ரூபாய்தான் ஆனதாம். ”இதன் மூலம் எங்களது விளைச்சல் வனவிலங்குகளி டம் இருந்து பாதிப்பு இல்லாமல் முழுமையாக கிடைக்கிறது''’என்கிறார் உமாசங்கர்.

சமீபத்தில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரத்தின்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 15 மாநிலங் களில் 1,224 யானைகள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளன. அதேபோல் ஆண்டுதோறும் சராசரியாக 100 விவசாயிகளுக்கு மேல் மின்சார வேலியில் சிக்கி உயிரிழக்கிறார்கள் என்கிறது ஒரு பகீர் புள்ளிவிபரம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஒரு விவசாயி... "விப ரீதங்கள் தொடர்வது தெரிந் தும் கூட ஏன் பலரும் மின்வேலி போன்ற தடுப்பு முறைகளைத் தேடுகிறார்கள் என்றால், விலங்குகளால் ஏற்படும் சேதத்தை இங்கே யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இது போன்ற சேதங் களுக்கு கேரள மாநி லத்தில் இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. அதில் பாதி அளவு கூட தமிழ்நாட்டில் வழங்கப்படுவதில்லை. அதனால்தான் எதை யாவது செய்து விலங்குகளை விரட்டவேண்டும் என்று அவர்கள் ஆபத்தான முறைகளில் இறங்கிவிடுகிறார்கள்''’என்கிறார் ஆதங்கமாக.

மனிதர்களையும் விலங்குகளையும் கொன்றுவரும் மின்வேலி பயங்கரங் களுக்கு இனியாவது முற்றுப்புள்ளி விழுமா?