"மாஸ்டர்'’ படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனை நாயகனாக வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் படம் "விக்ரம்'. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என மூவரும் மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் இணையத்திலும் வைரலாகி யது. சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கமல்ஹாசன் கவனம் செலுத்திக்கொண்டிருந்த வேளையில், இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகளில் இயக்குநர் லோகேஷ் கனக ராஜ் ஈடுபட்டுவந்தார். அதன்பிறகு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாகப் படத்தின் பணிகளை முழுவீச்சில் தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டது.

kk

தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பைத் துவக்கியுள்ளது படக்குழு. இந்நிலையில், "விக்ரம்' படத்தில் நடிகர் கமல்ஹாசன் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள் ளது. ஏற் கனவே "ராஜ பார்வை'’ படத்தில் கண் பார்வையற்ற மாற் றுத் திறனாளியாக கமல்ஹாசன் நடித் திருந்தது குறிப்பிடத் தக்கது.

Advertisment

ழுத்துத்துறையில் பல அங்கீ காரங்களைப் பெற்ற எழுத்தாளர் அஜயன் பாலா, கடந்த சில ஆண்டு களாக திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என சினிமாவிலும் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். "சித்திரம் பேசுதடி', kk"மதராசப்பட்டினம்' உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குந ராக பணியாற்றிய இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு "சென்னையில் ஒரு நாள்' படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக மாறினார். அதன்பின்னர் பல படங்களுக்கு திரைக்கதை எழுதிய இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு வெளி யான "6 அத்தியாயம்' என்ற ஆந்தாலஜி படம் மூலம் இயக்குநராக அறிமுக மானார். இந்நிலையில், நீண்ட இடை வெளிக்குப் பின்னர் அவர் இயக்கத்தில் "லவ் புல்லட்' என்ற மினி வெப் சீரிஸ் வெளியாகி தற்போது வரவேற்பைப் பெற்றுள்ளது. நாயகன் சினிமாஸ் நிறுவனம் மற்றும் தமிழ்ச்செல்வன் இணைந்து தயாரித்துள்ள இது "மூவிவுட்' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 10 முதல் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய மூன்று எபிசோடுகளை உள்ளடக்கியதாக முதல் சீசன் இருக்கும் எனவும், விரைவில் இதன் அடுத்தடுத்த சீசன்கள் வெளி யாகும் எனவும் இயக்குநர் அஜயன் பாலா தெரிவித்துள்ளார். மேலும், நகைச்சுவை கலந்த விறுவிறு தொடராக இது இருக்குமென இயக்குநர் தெரிவித்துள் ளார்.

Advertisment

____________________

வாட்ஸ் அப் with ஜோஜூ ஜார்ஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான படம் "ஜகமே தந்திரம்'. இதில் தனுஷுக்கு இணையாக தனது நடிப்பின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ். 90-களின் தொடக்கத்திலிருந்து சினிமாவில் வாய்ப்புக்காகப் போராடிய இவருக்கு, 1995-ஆம் ஆண்டு திரையில் தோன்ற முதன்முத லாக வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் சில படங்களில் நடித்த அவருக்கு முதன்முதலாகத் திரையில் வசனம் பேசி நடிக்கக்கூடிய ஒரு கதாபாத்திரம் கிடைத்தது 2000-ஆவது ஆண்டில்தான். அன்றிலிருந்து பல்வேறு சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று மலையாள சினிமாவின் முக்கியமான நடிகராக மாறியிருக்கக்கூடிய அவரிடம், தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுபவம் குறித்துக் கேட்டோம்.

cc

"ஜகமே தந்திரம்' வாய்ப்பு குறித்து கேட்கையில், "நிஜமா சொல்லணும்னா அது ஒரு லாட்டரி. அவ்ளோதான். பெரிய பெரிய ஆர்டிஸ்ட்கள் எல்லாரையும் இந்த கேரக்டருக்காக பாத்துருக்காங்க. கடைசியா எனக்கு மாட்டிக்கிச்சு. நான் நடிச்ச "சோழா', "ஜோசப்' படங்கள் எல்லாம் கார்த்திக் சுப்புராஜ் பாத்துருக்கார். அப்புறம் என்ன ஆடிஷன் கூப்பிட்டார். ஆடிஷனுக்கு அப்புறம் சிவதாஸ் கேரக்டர் ஃபிக்ஸ் ஆச்சு. அதுல என் நடிப்பை பாராட்டி நிறைய மெசேஜ் வருது. மலையாளத்துல எனக்குன்னு ஒரு இடம் இருக்கு. ஆனால் தமிழ்-ல இதுதான் முதல் படம். இந்த மாதிரி முதல் படத்துக்கே மணிரத்னம், ரஜினி-ன்னு எல்லாரும் வாழ்த்துக்கள் சொன்னாங்க. இதவிட வேற என்ன வேணும். இதுக்கெல்லாம் கார்த்திக் சுப்புராஜ்தான் காரணம்.

அதேபோல, தனுஷும் ரொம்ப உதவினார். வயசுல தனுஷ் என்னைவிட சின்னவர், ஆனால், எக்ஸ்பீரியன்ஸ்ல எனக்கு சீனியர். அவர் கூட நடிக்க ரொம்ப நல்லா இருந்துச்சு. இந்தப் படத்துல நடிச்சதுக்கு, எல்லா அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இவங்க எல்லாருக்கும் நன்றி சொல்லணும். ஏன்னா நான் தமிழ் சினிமாவுக்கு புதுசுதான், எனக்கு அந்த கேரக்டர் எப்படி இருக்கணும்-னு தெரியும். ஆனால், அத நல்லா நடிக்கிறதுக்கான இடத்தை உருவாக்கி கொடுத்தது அவங்க எல்லாரும்தான். சிவதாஸ் கேரக்டர் என்னோட மனசுக்கு நெருக்கமான ஒரு கேரக்டர். இந்தப் படத்துல என் நடிப்பை பாராட்டி நிறைய மெசேஜ் வருது. என்னால முடிஞ்ச அளவுக்கு எல்லாத்துக்கும் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன்'' என்றார் மகிழ்ச்சியுடன். இதே கலந்துரையாடலில், எந்த தமிழ் படத்தின் மலையாள ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்கையில், " நிறைய படங்கள் இருக்கு. குறிப்பா "96' படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசை'' என்றார்.