த்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு சாதகமான பல்வேறு அம்சங்களைச் சட்டமாக்கி வந்தது. அதற்கு பிரதிபலனாக, கார்ப்பரேட் நிறுவனங் களிடமிருந்து தேர்தல் நிதிகளை வாரிக்குவிப்ப தற்காகக் கொண்டுவரப் பட்ட தில்லாலங்கடி தான் தேர்தல் பத்திரங் கள் திட்டத்தில் திருத்தம். இதன்படி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங் கும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கத் தேவையில்லை என்ற சட்டத்திருத்தம் கடந்த 2018-ல் கொண்டுவரப் பட்டது. இத்திட்டம் ஊழலுக்கே வழிவகுக்கு மென்று எதிர்க்கட்சிகள் எதிர்த்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில சமூக நல அமைப்புகள் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

ee

இந்த வழக்கில், பிப்ரவரி 15, வியாழனன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது என்றும், உடனே இதனை நிறுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டது. தேர்தல் பத்திரங்கள் திட்டமானது, தகவல் அறியும் உரிமைச் சட் டத்துக்கு எதிராக இருப்ப தாகவும் குறிப்பிட்டது. மேலும், இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கிய நிறுவனங்கள், நிதியைப் பெற்ற கட்சிகள் குறித்த முழுவிவரத்தையும் மார்ச் மாத இறுதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இத்திட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, எஸ்.பி.ஐ. வங்கி, மொத்தம், 16,518 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-2018 முதல் 2022-2023 வரையிலான காலகட்டத்தில் ரூ.12,008 கோடி அளவுக்கு விற்பனை நடந்துள்ளது. இதில், பா.ஜ.க.வுக்கு 6,564 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்களால் நிதி கிடைத்துள்ளது. மொத்த விற்பனையோடு ஒப்பிடுகையில் இது 55%. இதே கால இடைவெளியில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,135 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்களால் நிதி கிடைத்துள்ளது. இது மொத்த விற்பனையில் 9.5 சதவீதமாகும். கிட்டத்தட்ட காங்கிரஸுக்கு நிகராக ரூ.1,096 கோடி அளவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நிதி கிடைத்துள்ளது.

Advertisment

ee

பா.ஜ.க.வின் ஆட்சிக்காலம் அதிகரிக்க அதிகரிக்க, தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைக்கக்கூடிய வருமானமும் பா.ஜ.க.வுக்கு அதிகரித்துள்ளது. 2022-2023 காலகட்டத்தில் மட்டுமே அதிகபட்சமாக ரூ.2,120.06 கோடி அளவுக்கு தேர்தல் பத்திரங்களின் மூலம் பா.ஜ.க.வுக்கு வசூலாகியுள்ளது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கோ, வெறும் ரூ.171 கோடியே வசூலாகியுள்ளது. இதன்மூலம், காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை வழங்குவதில் தொழிலதிபர்கள் நம்பிக்கை இழந்திருப்பது தெரியவருகிறது. மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை, 2022-2023 காலகட்டத்தில் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு ரூ.529 கோடி தேர்தல் பத்திரங்களின் மூலம் கிடைத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.329 கோடியும், தி.மு.க.வுக்கு ரூ.306 கோடியும், பிஜூ ஜனதா தள் கட்சிக்கு ரூ.291 கோடியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.60 கோடியும் கிடைத்துள்ளது.

Advertisment

இந்த புள்ளி விவரப்படி பார்க்கும்போதே, மத்தியில் வலிமையான பா.ஜ.க. மிகப்பெரிய ஆதாயம் அடைந்திருப்பது தெரிகிறது. இதற்கு பிரதிபலனாக கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு சாதகமான சட்டதிட்டங்களைக் கொண்டுவந்துள் ளது. அதற்கு சமீபத்திய உதாரணம், இடைக்கால பட்ஜெட் டில் கார்ப்பரேட் வரிவிகிதத்தை 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகவும், புதிதாகத் தொடங்கப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதமாகவும் குறைத்துள்ளார்கள். அதேபோல் 2014-15 முதல் 2022-23 வரையிலான 9 ஆண்டுகால மோடி ஆட்சியில், தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.14.56 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்கள். மேலும் ரூ.66.5 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக்கடன்கள் வாராக்கடன்களாக இருப்பதாக ஒன்றிய நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த வாராக்கடன்களிலும் பெரும்பகுதியை தள்ளுபடி செய்யக்கூடிய நிலை ஏற்படலாம்.

ee

அதேபோல், அதானியின் பங்குச்சந்தை மோசடிகள் குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியபோதும், பிரதமர் மோடி, அதானிக்கு ஆதரவாக நின்றதன் காரணமும் இப்போது விளங்கும். அவதூறு வழக்கு மூலம் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியைப் பறிக்குமளவுக்கு சதி நடந்ததையும் பார்த்தோமல்லவா? பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாராக்கடன் தள்ளுபடி செய்வதில் கவலைப்படாத ஒன்றிய அரசு, இதைவிடக் குறைவான விவசாயக்கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கும், கல்விக்கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கும் கணக்கு பார்ப்பதைக் கவனித்தால், விவசாயிகளிடமிருந்தோ, மாணவர்களிடமிருந்தோ தேர்தல் நிதிக்கான பங்களிப்பு ஏதுமில்லை என்ற காரணம் புரியும். இதன் காரணமாகத்தான் எதிர்க்கட்சி கள் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது இந்த உச்சநீதிமன்றமும் தில்லாலங்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது!

ee