மிழகத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை உருவாக்குதல், பொருளாதார மண்டலங்களை அதிகரித்தல், தகவல் தொழில் நுட்பத்துறைக்கு தேவையான வன்பொருள், மென்பொருள்களை உருவாக்கி அளித்தல், தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சிக்காக உள்கட்டமைப்புகளை வலிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது எல்காட்.

elcot

முறையே தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசின் கடந்த காலங்களில் இலவச கலர் டிவி, இலவச மடிக்கணிணி ஆகியவற்றை கொள்முதல் செய்து தமிழக அரசிடம் வழங்கியது உள்ளிட்ட சேவைகளையும் செய்து வந்தது எல்காட் நிறுவனம். தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியைம் அதன்மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்தலும், இதன் முக்கியக் குறிக்கோளாக இருந்துவருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான், தற்போது பணி நியமனங்களில் நடக்கவிருக்கும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் எல்காட்டில் எழுந்துள்ளன. இதுகுறித்து தொடர்ச்சியாக நமக்கு புகார்கள் வரவே, விசாரித்தோம்.

Advertisment

ee

நம்மிடம் பேசிய எல்காட் நிறுவன அலுவலர்கள், "தி.மு.க ஆட்சி அமைந்ததும், அனைத்து துறைகளின் செயலாளர்களும் மாற்றப்பட்டது போல தகவல் தொழில் நுட்பத்துறையின் முதன்மைச் செயலாளரும் மாற்றப்பட்டார். துறையின் புதிய முதன்மைச் செயலாளராக நீரஜ்மிட்டல் ஐ.ஏ.எஸ்.சும், எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அஜய்யாதவ் ஐ.ஏ.எஸ்.சும் நியமிக்கப்பட்டனர். அஜய்யாதவ் ஜூனியர் அதிகாரி.

நீரஜ்மிட்டல் இங்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு, இதே கட்டுப்பாட்டிலுள்ள மற்றொரு கார்பரேட் நிறுவனமான கெய்டன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக இருந்தார். கெய்டன்ஸ் நிறுவனத்தில் பெரும்பாலும் அவுட் சோர்ஸிங் மூலம் நியமிக்கப்பட்ட வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகம். இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பால் அருண் உள்ளிட்ட தனது சகாக்கள் பலரையும் எல்காட் நிறுவனத்துக்குள் நுழைக்க முயற்சித்தார் நீரஜ்மிட்டல்.

Advertisment

அதற்காக, சீனியர் கன்சல்டண்ட், சீனியர் மேனேஜர், சீனியர் கண்டண்ட் ஸ்பெஷலிஸ்ட், கன்சல்டண்ட், பாலிசி ஸ்பெஷலிஸ்ட் என பல்வேறு பணியிடங்களுக்கு 3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் 20 நபர்களை எல்காட் நிறுவனத்துக்குள் கொண்டு வர திட்டமிட்டனர். அந்த நியமனங்களுக்கான ஆட்கள் தேர்வினை கெய்டன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தின் மூலம் எடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 8 நபர்களை எடுப்பது எனவும் முடிவு செய்து அதற்கான நோட்டிஃபி கேஷனையும் கடந்த மாதம் 7-ந்தேதி வெளியிட்டது எல்காட்.

இந்தச்சூழலில், ஐ.டி. செக்ரட்டரியாக நீரஜ்மிட்டலும், கெய்டன்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக பூஜாகுல்கர்னி ஐ.ஏ.எஸ்.சும் நியமிக்கப்பட்டனர். அவுட்சோர்ஸிங் முறையிலான நியமனங்களால் அதிக செலவினங்கள் செய்யப்படுவதையறிந்து அதனைத் தடுக்க முயற்சித்தார் பூஜாகுல்கர்னி. கெய்டன்ஸ் நிறுவனத்தின் மூலம் எல்காட்டுக்கு ஆள் எடுக்கும் நீரஜ்மிட்டலின் திட்டத்தையும் எதிர்த்திருக்கிறார். இதனையடுத்து, தகவல் தொழில்நுட்பத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மற்றொரு நிறுவனமான இ-கவர்னன்ஸ் மூலம் எல்காட்டுக்கு ஆட்களை நியமிக்கவிருக்கிறார் நீரஜ்மிட்டல். அதாவது, கெய்டன்ஸ் நிறுவனத்திலிருந்து துரத்தப்பட விருக்கும் தனது சகாக்களான வடஇந்தியர்களை எல்காட்டில் நுழைப்பதே அவரது நோக்கம். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படவிருக்கும் இந்தப் பதவிகளுக்கான அதிகபட்ச மாத சம்பளம் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.

ஏற்கனவே, இப்படித்தான் எல்காட்டில் கம்பெனி செக்ரட்டரியாக தேசிகன் என்பவரை எவ்வித தேர்வையும் நடத்தாமல் 3 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் எடுத்தனர். ஆறே மாதத்தில் அந்தப் பணியிடத்தை நிரந்தர பணியிடமாக மாற்றிவிட்டனர். அதேபோலதான் இப்போதும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப நீரஜ்மிட்டலும் அஜய்யாதவ்வும் கை கோர்த்துள்ளனர் ‘’ என்று சுட்டிக்காட்டினார்கள்.

e

பணி நியமனங்களில் நேர்மையை கடைப்பிடிக்க அரசு பணியாளர் தேர் வாணையத்தின் மூலம் தேர்வுகள் எழுதி தகுதி யானவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்படி செய்தால் தனது சகாக்களை கொண்டுவர முடியாது என்பதாலேயே காண்ட்ராக்ட் பேசிஸ் என்ற திட்டத்தை புகுத்துகிறார் நீரஜ்மிட்டல்.

தகவல் தொழில்நுட்பத் துறையினரிடம் விசாரித்தபோது, ”எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உமாசங்கர் ஐ.ஏ.எஸ். இருந்தபோது, 700 கோடி ரூபாய் ஊழல்களையும் முறை கேடுகளையும் தடுத்தார். அவருக்குப் பிறகு எல்காட்டில் ஊழல் மயம்தான். எல்லாமும் நட்டம்தான்.

2014-க்கு பிறகு தேர்வாணையத்தின் மூலம் எல்காட்டுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதை நிறுத்திவிட்டனர். இடையில், ஒருமுறை மட்டும் டி.என்.பி.எஸ்.சி. மூலம் டெபுடி மேனேஜர்-2 கேட்டகிரிக்கு 12 நபர்களை எல்காட் தேர்ந் தெடுத்தது. அதில் 4 பேரை தகவல் தொழில் நுட்பத்துறைக்கு அனுப்பி வைத்துவிட்டனர். ஆனால், சம்பளம் மட்டும் எல்காட் கொடுத்து வருகிறது. தற்போது அதே பதவிக்கு மீண்டும் ஆட்களை தேர்வு செய்யவும் திட்டமிடுகின்றனர்.

கடந்த ஆண்டும் பணியாளர் தேர்வாணை யம் மூலம் ஆட்களை தேர்வு செய்யாமல், விதிகளுக்குப் புறம்பாக பணி நியமனங்கள் நடக்கிறது என்ற குற்றச்சாட்டினால், அதற்குரிய அறிவிப்பினை முந்தைய எடப்பாடி அரசு ரத்து செய்தது.

இப்போதும் முறைகேடான முறையில், ஒப்பந்த அடிப்படையில் அதிகப்படியான சம்பளத்துக்கு ஆட்களை தேர்வு செய்கிறது எல்காட். இதே பதவிகளுக்கு தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்தால் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு எத்தனையோ திறமை யாளர்கள் கிடைப்பார்கள். எல்காட் பணி நியமனங்களை தேர்வாணையம் மூலம் தேர்வு செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும்'' ‘என்கின்றனர் அழுத்தமாக!

இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து நீரஜ்மிட்டலிடம் கேட்டபோது, "கெய்டன்ஸ் நிறுவனத்தில் இருப்பவர்கள் என் நண்பர்கள் என சொல்வது தவறு. சக பணியாளர்கள். அவ்வளவு தான். அரசின் பல்வேறு நிறுவனங்களிலும் ஒப்பந்த அடிப்படையில்தான் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதேபோலதான் இங்கும். அதனால், இதனை தவறு என சொல்லமுடியாது. மேலும், ஆட்கள் தேர்வு இன்னும் நடக்கவில்லை. எக்ஸ்பீரியன்ஸ் நபர்கள் கிடைக்க வேண்டு மானால் அவுட்சோர்ஸிங் மூலம் தேர்வு செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும். எல்காட், பொதுத்துறை நிறுவனம் என்பதால் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்வது கட்டாய மில்லை. மேலும், டி.என்.பி. எஸ்.சி. மூலம் எக்ஸ்பீரியன்ஸ் நபர்கள் கிடைப் பார்கள்னு சொல்லமுடியாது. அதனால் எந்த தவறும் நடக்கவில்லை'' என்கிறார் நீரஜ்மிட்டல்.

ஒன்றிய அரசு பணிகளில் வெளியிலுள்ள தனது சகாக்களை அரசு நிறுவனத்துக்குள் பிரதமர் மோடி எப்படி கொண்டுவந்தாரோ அதே பாணியை தமிழகத்தில் புகுத்த நினைக் கின்றனர் வடஇந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இத்தகைய நியமனங்களை எதிர்த்து கோர்ட்டுக்குச் செல்ல எல்காட்டை கண்காணித்து வருகின்றன ஊழல்களுக்கு எதிரான அமைப்புகள்.