துரையில் அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதற்கான பரபரப்பில் இருக்கிறார் எடப்பாடி. இந்த மாநாட்டை நடத்துவதற்கான எடப்பாடியின் நோக்கமே வேறு என்கிறார்கள், அவரது தரப்பினர். அது குறித்து விவரிக்கும் அவர்கள்....

"மதுரை மாநாட்டிற்கு லட்சக்கணக்கானவர் களைத் திரட்ட வேண்டும் என்று ஆசைப்படும் எடப்பாடி, மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க கே.பி.முனுசாமி தலைமையில் வளர்மதி, செல்லூர் ராஜு, செங்கோட்டையன், தங்கமணி, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 12 பேர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்திருக்கிறார். இந்த ஆலோசனைக்குழு தமிழகம் முழுக்க உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்கிறது. இதை மா.செ.க்கள் போட்டி போட்டுக் கொண்டு வரவேற்கிறார்கள்.

admk

காரணம் தங்களின் பதவிகளைத் தக்கவைத் துக் கொள்ளும் எண்ணம்தான். தூத்துக்குடி மாநகரைப் பொறுத்தமட்டில் மாஜி அமைச்சரும் அ.தி.மு.க.வின் அமைப்புச் செ.வுமான சி.த.செல்லப் பாண்டியன், கட்சியில் செல்வாக்குள்ளவர். அவர் தூத்துக்குடி மாநகர் மா.செ. பதவியைக் குறிவைத்து காய்களை நகர்த்திவருபவர். அதனால், தூத்துக்குடி தெ.மா.செ.வான சண்முகநாதனுக்கும் இவருக்கும் பகையுணர்ச்சி நிலவுகிறது. எனவே, ஆலோசனைக் குழுவினருடன் அவர் அண்டிவிடக்கூடாது என்ற திட்டத்தில் செயல்பட்டார்.

Advertisment

இதையறிந்த சண்முகநாதன், கே.பி.முனுசாமி தலைமையிலான குழுவை வழியில் டோல்கேட்டி லேயே தடபுடலாக வரவேற்றார். உடனே செல்லப் பாண்டியனும் தனது படைபரிவாரத்தோடு அங்கே சென்று வரவேற்பு என்ற பெயரில் அலப்பறையில் இறங்கினார். இதில் சண்முகநாதன் தரப்பு அப்செட் டானது. கூட்ட மேடையிலும் இரு தரப்பும் தங்கள் பலத்தைக் காட்டுவதிலேயே குறியாக இருந்தது. இவர்களின் போட்டியால், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே வந்தவர்கள் சாப்பிடப் போக, வந்த ஆலோசனைக் குழுவே திகைத்துப் போய்விட்டது. கே.பி.முனுசாமி கடைசியாக, "மாநாட்டிற்கு நீங்க எவ்வளவு பேரைத் திரட்டி வருவீர்கள்?'' என மா.செ. சண்முகநாதனிடம் கேட்க, அவரோ "ஐம்பதாயிரம் பேரைத் திரட்டிவருவேன். இந்தாங்க அதற்கான 426 வாகனங்களுக்கான லிஸ்ட். அதன் காண்டாக்ட் நம்பர்கள் என்று ஒரு லிஸ்ட்டைக் கொடுத்தார்.

அந்த லிஸ்ட்டைச் சரிபார்த்த முனுசாமி, ’"என்னய்யா இங்க அரசாங்கம் பெர்மிட் குடுத்த வண்டிகளே மொத்தம் 260தான். பின்ன எப்படி 426 வண்டிகள் வரும்? நீங்க குடுத்த லிஸ்ட் சரியில்ல. அப்புடியே நீங்க குடுத்த லிஸ்ட்படி பாத்தாலே மொத்தம் எட்டாயிரம் பேர்தானே வருது. எப்படி ஐம்பதாயிரம் ஆகும்?'' என்று கேள்விமேல் கேள்வி கேட்க... சண்முகநாதன் திணறிப்போய்விட்டார்.

admk

Advertisment

தொடர்ந்து அருகிலிருந்த வ.மா.செ. கடம்பூர் ராஜுவிடம், முனுசாமி கூட்டம் பற்றி கேட்டதும் அவரும் "ஐம்பதாயிரம் பேரைத் திரட்டிவருவேன்' என்று சொல்ல, கணக்கு கேட்ட முனுசாமியிடம் சாமர்த்தியமாக "லிஸ்ட்டை பின்னால் தருகிறேன்' என்று சமாளித்தாராம் கடம்பூர் ராஜு. "மாநாட்டிற்கு ஆட்களைத் திரட்டுகிற வகையில் அதற்கான ஹெவியான அமௌண்ட்டும் நிர்வாகிகளிடம் கை மாறியிருக்கிறது'’என்றார்கள் விரிவாகவே.

மதுரை மாநாட்டிற்கு பெரிய லெவலில் கூட்டத்தைக் காண்பிக்க கரன்சிகளை வாரி யிறைக்கிறதாம் எடப்பாடித் தரப்பு.

"தமிழகத்தில் எங்களின் கூட்டணி இல்லா விட்டால், எங்களின் துணை இல்லாவிட்டால் பா.ஜ.க.வினால் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது. அ.தி.மு.க.வின் தோள்களில்தான் நீங்கள் சவாரி பண்ணமுடியும். சி.பி.ஐ., ஈடி, ஐ.டி. என்று எங்களுக்கு இனியும் நீங்கள் நெருக்கடி கொடுக்க முடியாது, மிரட்டவும் முடியாது. எங்கள் கூட்டத் தைப் பாருங்கள்’ என்று பா.ஜ.க.வுக்கு மறைமுக மான சவாலை விடுப்பதே எடப்பாடியின் நோக்கம்' என்கிறார்கள் பலரும். அதேபோல் "ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. போன்றவர்கள் அரசியலில் ஜீரோக்கள்தான். நாங்கள்தான் ஹீரோக்கள்' என்றும் இந்த மாநாட்டுக் கூட்டத்தின் மூலம் பா.ஜ.க.வுக்கு எடப்பாடி உணர்த்த நினைக்கிறாராம்.

மேலும், "தி.மு.க. கோடநாடு பிரச்சினையில் தீவிரமாக இருக்கிறது. எங்கள் மீது கை வைத்தால், எங்களின் கூட்டம் பெரிது. அதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு அ.தி.மு.க. சும்மா இருக்காது. எங்களின் வலிமை உங்களை யோசிக்க வைக்கும்'’என தி.மு.க.வையும் எடப்பாடி திகைக்க வைக்க நினைக்கிறாராம்.

"எடப்பாடிக்கு இப்போது நான்கு திசையிலுமிருந்தும் நெருக்கடிகள் வருவதால், அதனைச் சமாளிக்கவே இந்த பிரமாண்டமான ஏற்பாடுகள்' என்கிறார்கள் அவர்கள் தரப்பினரே.

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்