ணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்குவதில், கந்து வட்டிக்கு விடுவது, மிகவும் மோசமான சட்டவிரோதத் தொழி லாக உள்ளது. இந்த கந்து வட்டிக் கொடுமையால் தங்கள் சொத்தையும், நிம்மதியையும் இழந்து தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டவர்கள் பலருண்டு. தற்கொலை களைத் தாண்டி கொலைக் குற்றங்களும் இத்தொழிலில் அதிகரித்துள்ளது. தமிழ்த் திரையுலகிலும் கந்து வட்டிக்காரர்களின் ஆதிக்கம் உண்டு. தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, கந்துவட்டிக் கொடுமையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். இதுதொடர்பான புகார்களின்மீது தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார்.

இந்நிலையில், திருச்சி லால் குடியிலுள்ள திருவள்ளுவர் நகரில் வசித்துவரும் பிரபல கந்து வட்டிக் காரரான சிங்காரவேலன் என்பவரின் மகன் விஸ்வநாதன் மீது, கந்து வட்டிக்கு வாங்கிய கடனைவிட 100 மடங்கு விலையுள்ள சொத்துக்களைப் பறித்ததாக, அதே கிராமத்தைச் சேர்ந்த பூவாளூர் சரவணன், மேல வாளாடி அருண் போஸ், அகிலாண்டேஸ்வரி நகர் விஜி, பரமசிவபுரம் ஆறுமுகம் ஆகியோர் மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் புகா ரளித்துள்ளனர். ஏற்கெனவே லால்குடி டி.எஸ்.பி. வரை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

dspoffice

Advertisment

விஸ்வநாதனிடம் கடன்பெற்ற ஒவ்வொரு வரையும் மிரட்டி, வெற்றுக் காகிதங்களில், ஆவணங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அவர்களின் சொத்துக்களைக் கிரயம் செய்து வைத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. அந்த சொத்துக் களைத் திரும்பக் கேட்டால் 5 லட்ச ரூபாய் கடனுக்கு 50 லட்சம் வரை அடிதண்ட மாகப் பிடுங்கியுள்ளாராம். டி.எஸ்.பி. வரை புகாரளித் தும் ஏன் நடவடிக்கை இல் லையென்று பார்த்தால், டி.எஸ்.பி. அலுவலகமே தற்போது விஸ்வநாதனுக்கு சொந்தமான கட்டிடத்தில் தான் நடந்துவருகிறதாம். பிறகெப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? எனவே தனியார் இடத்தில் நடக் கும் டி.எஸ்.பி. அலுவல கத்தை உடனடியாக மாற்ற யமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டு மென்று கோரிக்கை வைக்கிறார்கள்.

எனவே அரசு விரைந்து தலையிட்டு, அலுவலகத்தை இடமாற்றம் செய்வதோடு, காவல்துறையினர் துணைக்கு இருக்கிறார்கள் என்ற தைரியத்தில், துணிந்து கந்து வட்டி கொடுத்து பலரது வாழ்க்கையைச் சீரழிக்கும் விஸ்வநாதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகிறார்கள்.

Advertisment

இதுபோன்று கந்துவட்டி கொடுத்து வசூலிப்பவர்களுக்கு, தமிழ்நாடு கடன் கொடுப் போர் சட்டத்தின்மூலம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன், ரூ.30 ஆயிரம்வரை அபராதமும் விதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. ஆனால் அதற்கான நடவடிக்கையை காவல்துறைதான் பாராபட்சமில்லாமல் எடுத்து, அப்பாவி மக்கள் கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்படுவதையும், தற்கொலை வரை செல்வதையும், கட்டப்பஞ்சாயத்துகள் நடப்பதை யும் தடுக்க முடியும். தடுப்பார்களா என்பதே அனைவரின் கேள்வி.