இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதையறிந்து அதனை ஒழிக்கும் நடவடிக்கை யில் ஈடுபட்ட மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், சமீபத்தில் டெல்லியில் நடத்திய சோதனையில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், இந்த கும்பலின் தலைவனாக வும் மூளையாகவும் செயல்பட்டுவந்த தி.மு.க. வின் மேற்கு சென்னை அயலக அணியின் துணை அமைப்பாளர் ஜாபர்சாதிக்கை கைது செய்ய முயற்சித்தனர். இதனையறிந்து தலை மறைவாகிவிட்டார் ஜாபர்சாதிக். அவரை கைது செய்ய தீவிர முயற்சியில் குதித்துள்ளது மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு.
ஜாபர் சாதிக் விவகாரமும் பின்னணியும் அறிந்து அதிர்ச்சியடைந்த தி.மு.க. தலைமை, கட்சியிலிருந்து உடனடியாக அவரை நிரந்தரமாக நீக்கியது. ஜாபர்சாதிக்கை கட்சியில் சேர்த்தது யார்? எப்போதிலிருந்து இவருக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டது? பதவி கொடுத்தது யார்? என்றெல்லாம் விசாரித்தது அறிவாலயம்.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ள ஜாபர்சாதிக்கை தேடும் வேட்டையில் ஈடுபட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், சாதிக்கின் மைலாப்பூர் வீட்டிலும், டவுட்டனி லுள்ள அவரது அலுவலகத்திலும் சம்மன் நோட்டீசை ஒட்டிய கையோடு, மைலாப்பூர் வீட்டினுள் 28லிந் தேதி அதிரடி சோதனையை நடத்தியது. மறுநாள் காலை 8 மணிவரை நடந்த சோதனையில், பல்வேறு ஆவண ஆதாரங்களை கைப்பற்றியிருக்கிறார்கள். சோதனையை முடித்த வுடன் வீட்டை சீல் வைத்துள்ளது போதைப் பொருள் தடுப்புப்பிரிவு.
இந்த பிரிவுக்கு நெருக்கமான உளவுத்துறை தரப்பில் நாம் விசாரித்த போது, "ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் நாடுகளில் உள்ள சுங்கத்துறை அதி காரிகள்தான் டெல்லியிலுள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரி வுக்கு ஒரு முக்கிய தக வலை பாஸ் செய்திருக் கிறார்கள். இதுதான் ஜாபர் சாதிக் விவகாரத் தில் கிடைத்த முதல் தகவல். அதாவது, சூடோ பெட்ரைன் என்ற போதைப்பொருள் இந்தியாவிலிருந்து தங்க ளின் நாடுகளுக்கு அதிக அளவில் வருகிறது என் றும், தேங்காய்ப் பொடி, சத்து மாவு வடிவத்தில் கலந்து கிலோ கணக்கில் அனுப்பப்படுகிறது' என்றும் தெரிவித்திருக்கிறார் கள். இதைக் கேட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து கடந்த 40 நாட்களாக டெல்லி விமான நிலையத்துக்கு வந்து போகிறவர் கள், அவர்களில் சந்தேகத்திற்குரியவர்கள், ஏற்றுமதி இறக்குமதி பிஸ்னெஸ் செய்கிறவர்கள், அதில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் என பல்வேறு கோணங்களில் கண்காணித்தும், விசாரித்தும் வந்தனர். அப்படி கண்காணிக்கப்பட்ட தில்தான் டெல்லி மேற்கில், ஒரு குடோனில் உணவுப்பொருள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை கண்டறிந்து, அதனை ஒரு வாரமாக ரகசியமாகக் கண்காணித்தனர். கிடைத்த தகவல்கள் உறுதியானதும் குடோனுக் குள் அதிரடியாக நுழைந்தனர்.
அங்கு உணவுப்பொருள்கள் தயாரிக்கப்படு கிறது என்ற போர்வையில், போதைப்பொருளை பொட்டலம் பொட்டலமாக ரெடி செய்துகொண்டிருந்தனர். 50 கிலோ சூடோ பெட்ரைனை கைப்பற்றியதோடு முஜ்பீர், முகேஷ், அசோக் குமார் ஆகிய மூவரை கைது செய்தனர். இதில் அசோக் மட்டும் விழுப் புரத்தை சேர்ந்தவர். மற்ற இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள். அவர்களிடம் நடத்திய விசாரணை யில்தான், போதைப் பொருள் கடத்தலின் சூத்திரதாரியாக ஜாபர் சாதிக் இருப்பதையும், பல ஆண்டு களாக இதனை செய்து வருவதாகவும், பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் கொண்டு வருவதாகவும் பல தகவல்களை பிடிபட்டவர்கள் ஒப்பித்துள்ளனர். தவிர, ஜாபர் சாதிக் தி.மு.க.வில் இருப்பதையும் தி.மு.க. தலைவர்கள் பலரிடமும் அவருக்கு நெருக்கம் என்பதையும், சினிமா தயாரிப்பாளராக ஜாபர் இருப்பதால் தி.மு.க.வைச் சேர்ந்த சிலருக்கு சினிமா ஃபைனான்ஸ் செய்திருப்பதாகவும் கிளிப்பிள்ளை சொல்வது போல கக்கியிருக்கிறார்கள். கிணறு வெட்ட பூதம் தோன்றிய கணக்காக, இது வேறு ரூட்டில் போகிறதே என தீர்மானித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், மத்திய உள்துறைக்கு தெரியப்படுத்தி விட்டனர்.
அங்கிருந்து கிடைத்த உத்தரவின்பேரிலேயே, இந்த விவகாரத்தை சீரியசாகவும், அனைத்து தொடர்புகளை சேகரிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு. பிடிபட்ட மூவ ரிடமிருந்து நிறைய தகவல்களை கறந்துள்ள இப்பிரிவினர், ஜாபர் சாதிக்கை கைது செய்ய தங்களின் வேட்டையை தீவிரப்படுத்தியிருக் கிறார்கள். ஜாபர் சாதிக்கை கைது செய்து அவர் வாக்குமூலம் தந்தா லும் தராவிட்டாலும் தி.மு.க.வை நோக்கி பாய்வதற்கே டெல்லியில் ப்ளான் போடப்படுகிறது''’ என்கிறார்கள் அதிர்ச்சியுடன்.
தற்போது, ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகளை கைது செய்துள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், தலைமறைவாகியுள்ள ஜாபர்சாதிக்கை நெருங்கி விட்டனர். விரைவில் அவர் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுவார். அது தி.மு.க. அரசுக்கு குறி வைப்பதாகவும் இருக்கும்'' என்கிறார்கள் உளவுத்துறை யினர்.
தி.மு.க. அரசை எப்படி யாவது கலைக்க வேண்டும் அல்லது கவிழ்க்க வேண்டும் என்பதே மத்திய பா.ஜ.க. அரசின் ரகசிய அஜெண்டா. ஆனால், இந்த 2 விசயத்தையும் சட்டரீதியாக செய்ய முடியாது. அதனால், தற்போது கிடைத் துள்ள போதைப்பொருள் மற்றும் ஜாபர் சாதிக் ஆகிய துருப்புச் சீட்டுகளை வைத்து தி.மு.க. ஆட்சிக்கு குறி வைக்க டெல்லி திட்டமிடுவதாக தகவல்கள் எதிரொலிக்கின்றன.
-சஞ்சய்