விவசாயிகளுக்கு வழங்கிய நிவாரணத்தை வட்டாட்சியர் அலுவலக இளநிலை உதவி யாளரே தனது வங்கிக் கணக்கு மூலம் திருடியது புதுக்கோட்டை மாவட்டத் தையே பரபரப்பாக்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடி தாலுகா, பிராமணவயல் கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த மதன், மணமேல்குடி தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாள ராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு, வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட 31 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய நிவாரணத் தொகை ரூ.5.89 லட்சத்தை தனது இரு வங்கிக் கணக்குகளில் மாற்றி எடுத்துள்ளார் என்பதைக் கண்டறிந்து, மணமேல்குடி வட்டாட்சியர் ஷேக் அப்துல்லா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இளநிலை உதவியாளர் மதன் தலைமறைவாகி முன்ஜாமீனுக்கான முயற்சியில் உள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/drat.jpg)
முறைகேடு குறித்து வட்டாட்சியர் கூறும்போது, ""கடந்த ஆண்டு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் கொடுக்கும்போது பயனாளிகளான விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு பிரித்து கருவூலம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ள நிலையில், பல விவசாயிகளின் வங்கிக் கணக்கு சரியாக இல்லாததால் அந்தத் தொகை வட்டாட்சியர் அலுவலகத்திற்கே திரும்பி வந்துள்ளது. திரும்பி வந்த 31 விவசாயிகளின் பெயர்களை மறுபடியும் பட்டியல் தயாரித்து, நிவாரணத்தை தனது 2 வங்கிக் கணக்கிலும் மாற்றி பணத்தை எடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் கருவூல தலைமை அலுவலகம் ஒவ்வொரு அரசு ஊழியரின் சம்பள வங்கிக் கணக்கில் வேறு பணப் பரிமாற் றங்கள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய் வது வழக்கம். அதேபோல ஆய்வு செய்தபோது மதனின் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இரு வங்கி கணக்கிலும் மொத்தம் ரூ.5.89 லட்சம் ரூபாய் விவசாயிகளின் நிவாரணம் முறை கேடாக எடுக்கப்பட்டதை அறிந்து, நட வடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் உத்தரவு வந்ததையடுத்து, முறைகேடு உண்மை என்பதைக் கண்டறிந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறோம். அவரை பணியிடைநீக்கம் செய்திருக்கிறோம்'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/drat1.jpg)
இந்தத் தகவலையடுத்து, இதுபோன்ற முறைகேடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் அரசநகரிப் பட்டினம் விவசாயி ஷாஜகான் நம்மிடம், ""விவ சாயிகளின் வயிற்றிலடிப்பது இப் போது மட்டுமல்ல, காலங்காலமாக நடந்து வருகிறது. இப்போது சில லட்சங்கள் தான் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. ஆனால் அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி தாலுகாவில் மட்டும் கடந்த 5, 6 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் விவசாயிகள் அரசு நிவாரணம், காப்பீட்டுத் தொகை முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, மழைத் தண்ணீரை நம்பி விவசாயம் செய்வதுதான் இந்தப் பகுதி விவசாயிகளின் வழக்கம். சராசரியாக மழை பெய்து கண்மாய் கள் நிறைந்திருந்தால் சரியான விளைச்சல் கிடைக்கும். மழை பெய்யவில்லை என்றாலோ, அல்லது அறுவடை நேரத்தில் கனமழை பெய்தாலோ முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும். அதனால் விதைப்பு செய்தவுடன் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துவிடுவார்கள்.
அறுவடைக் காலம் முடிந்தவுடன் காப் பீட்டுக்கான இழப்பீட்டுத்தொகை வரும்போது பார்த்தால், இப்பகுதியைச் சேர்ந்த அரசியல் வாதிகள், பெருவிவசாயிகள், தொழிலதிபர்களின் இறால் பண்ணை, தென்னந்தோப்பு, கல்வி நிறுவனங்கள் உள்பட அத்தனை நிலங்களுக்கும் பயிர்க்காப்பீடு செய்து இழப்பீடு வாங்கியிருக் கிறார்கள். பல ஊர்களில், இல்லாத சர்வே எண்களில் கூட காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது. அரசு நிலங்கள், வனத்துறை நிலங்களுக்கும் சில அதிகாரிகளின் உதவியுடன் பயிர்க்காப்பீடு செய்து இழப்பீடு எடுத்துத் துள்ள வரலாறுகளும் உண்டு. இதுகுறித்து கடந்த காலங்களில் நானே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்கள் பெற்று ள் ளேன். நான் தகவல் கேட்டால் உடனே சம்பந்தப்பட்ட நபர்களை அதிகாரிகள் என்னிடம் சமா தானம் பேச அனுப்பிவிடுவார்கள். இப்போது ஒரு அதிகாரி வங்கிக் கணக்கை ஆய்வு செய்தது போல, கடந்த 6, 7 ஆண்டுகளில் வெள்ளம், வறட்சி நிவாரணம், பயிர்க்காப் பீட்டுக்கான இழப்பீடுகள் வழங்கியதை முறையாக ஆய்வு செய்திருந்தால் பலகோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்ட உண்மை தெரிய வரும். இதை மாவட்ட நிர்வாகம் செய்யமாட்டார்கள். காரணம், அதில் சிக்குவது அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், இறால் பண்ணை முதலாளிகளும் தான் என்பதால் ஆய்வுக்கு எடுக்கமாட்டார்கள்.
தமிழ்நாடு அரசு தனிக்குழு அமைத்து கடந்த கால நிவாரணம் பற்றிய முறைகேடுகளை ஆய்வுசெய்யத் தயாராக இருந்தால் அவர்களிடம் பல ஆதாரங்களைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். இப்போதைய மாவட்ட ஆட்சியர் அருணா நடவடிக்கை எடுப்பார் என்கிறார்கள். ஆனால் அவரும் ஆய்வுக்கு உத்தரவிட வேண்டுமே. அதற்கு தமிழ்நாடு அரசு தான் உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் இந்த வருடமும் இதேபோல முறைகேடுகள் நடக்கும். அரசு பணத்தை யாரோ சிலர் முறைகேடாக எடுப்பார்கள். உண்மையாக பாதிக்கப்படும் விவசாயிகள் வழக்கம்போல பாதிக்கப்படு வார்கள்'' என்றார். இது குறித்து மாவட்ட நிர்வாகமோ, புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-10/drat-t.jpg)