மிழ்நாடு போக்குவரத்துத் துறையின் மதுரை கிளை மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சதாசிவம், மிகுந்த செல்வாக்கான அதிகாரி. மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஏதோ மனு கொடுப்பதற்காக வந்தவர், அங்கிருக்கும் மரத்தடியில் ஓரமாக உட்கார்ந்திருந்தார். நம்மை அடையாளம் கண்டுகொண்டு, "சார், நீங்க நக்கீரன்தானே?… பெரிய அதிகாரியாக இருந்தவன் இப்ப நடுத்தெருவில் இருக்கிறேன் சார். என் எல்லா சொத்தையும் விற்றுவிட்டேன். ஒரு டிரைவரின் பேச்சைக் கேட்டு இப்படி ஏமாந்துட்டேன்''’என்று ஆரம்பித்தார்.

oo

டிரைவராக இருந்த நாச்சிமுத்து என்னிடம் அடிக்கடி தனக்கு நெருங்கிய உறவினரான செல்வம், சென்னை ஸ்டேட் பேங்கில் மேனேஜராக இருக்கிறார். அவரின் மருமகன்தான் தமிழ்நாடு போக்குவரத்து கழக சேர்மனாக இருக்கும் பிரபாகர் ராவ் ஐ.ஏ.எஸ். என்று சொல்லிவந்தார். இந்நிலையில் 2015-ல் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் டிரைவர் -நடத்துனர் பணிகளுக்கு ஆள் சேர்ப்பு அறிவிப்பு வெளிவந்தது. மதுரை மண்டல மக்கள் தொடர்பு அதிகாரியான சதாசிவத்திடம் தற்காலிக பணியிலிருந்தவர்கள் தங்களை நிரந்தர பணியாளராக்குவதற்கு உதவி செய்யும்படி கேட்டிருந்தார்.

Advertisment

ddஇதைப் பயன்படுத்தி நாச்சிமுத்து, "சார் தமிழ்நாடு போக்குவரத்து சேர்மனான பிரபாகர் ராவ் ஐ.ஏ.எஸ். எனது உறவினரான செல்வத்திற்கு மருமகன். உங்களுக்கு வேண்டப்பட்டவர்கள், சொந்தக்காரர்களுக்கு வேலையை வாங்குவதோடு இங்கு தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கும் சேர்த்து அரசு வேலையை வாங்கிவிடலாம். நான் உங்களை ஸ்டேட் பேங்க் மேனேஜர் செல்வத்திடம் கூட்டிச்செல் கிறேன். அவர் சொன்னால் பிரபாகர் ராவ் தட்ட முடியாது''’என்று சொல்ல... வேலை கேட்டு அருகிலிருந்த ஜோதிமுருகனோ சதா சிவத்திடம், “"சார் அவர்தான் சொல்றாரே… எவ்வளவு செல வானாலும் பரவாயில்லை. நீங்கள் ஒரு அதிகாரி. நாச்சிமுத்து உங்களை ஏமாற்றவா போகிறார். சேர்மன் பிரபாகர்ராவ் ஐ.ஏ.எஸ். சொந்தக்காரர். என்னைப்போல் வேலை நிரந்தரம் செய்ய நிறைய நபர்கள் வழி தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களையும் கூட்டிச் செல்வோம்'’என்று சொல்ல, இருவரையும் ஸ்டேட் பேங்க் மேனேஜர் செல்வத்திடம் கூட்டிச்சென்றார் நாச்சிமுத்து.

"வேலைகேட்டு வந்தவர்கள் மக்கள் தொடர்பு அதிகாரி மூலம் போனால் அவர்களால் ஏமாற்ற முடியாது' என்று நம்பி என்னிடம் 39 லட்சம் வசூல் செய்து கொடுக்க, "15 நாட்களில் வேலை உறுதி செய்யப் படும்' என்று உறுதிகொடுத்தார் செல்வம்.

இதற்கிடையில் நாச்சிமுத்து என் பெயரைச் சொல்லி பல பேரிடம் வசூலிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மாதங்கள் கடந்த பின்பும் வேலை உறுதியாகாததால் மக்கள் தொடர்பு அதிகாரியான என்னிடம் எல்லோரும் முறையிடத் தொடங்கி னார்கள். நான் அனைவரையும் அழைத்துகொண்டு செல்வத்தின் வீட்டிற்குப் போனோம். அங்கு நாச்சி முத்து, செல்வம், அவரது மனைவி பிரேமா ஆகியோர் இருந்தனர். "செல்வம் சார் சேர்மனிடம் பணத்தைக் கொடுத்தாச்சு. வேலை எல்லாருக்கும் கட்டாயம் கிடைத்துவிடும். நான் முழுப் பொறுப்பு'’என்று சொல்லி எங்களை சென்னை தலைமைச்dd செயலகத்திற்கு அழைத்துச்சென்றார் நாச்சிமுத்து.

Advertisment

அங்கு பேசிக்கொண்டிருக்கும் போதே, ஒரு கார் வந்துநின்றது. டிரைவர் நாச்சிமுத்து, செல்வம் ஆகி யோர் என்னிடம் கூட்டிவந்திருந்த ஜோதிமுருகனை அழைத்து அதோ பாருங்க சேர்மனே வந்திருக் கிறார் என்று உள்ளே இருந்த நபரை சுட்டிக்காட்டி அவரிடம் போய் பேசினார். ஜோதிமுருகனும் “நம் வேலைதான் நடந்துக்கிட்டு இருக்காம். அமரவையுங்கள். சில வேலை இருக்கு என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றிருக்கிறார். சேர்மன்’ என்றதும் நானும் நம்பினேன்.

சிறிது நேரத்தில் உள்ளேபோன சேர்மன் திரும்ப வெளியே வந்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “செல்வத்திடம் "சார் இது உங்க மருமகன் பிரபாகர் ராவ் ஐ.ஏ.எஸ்.ஸா'”என்று கேட்க அதற்கு அவர், “"ஆமா அவர்தான்'”என்றதும், “"ஏங்க நான் அவரிடம் மக்கள்தொடர்பு அதிகாரியாக பணியாற்றுகிறேன். எனக்குத் தெரியாதா என்னிடமே பொய் சொல்கிறீர்கள். காரிலிருந்து இறங்கிப்போனவர் மோகன்ராஜ் ஐ.ஏ.எஸ். இவர்மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவை யில் இருக்கு. தற்போது சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்'’ என்றதும் அதிர்ச்சி யாகி “இவரும் எனக்கு உறவினர் தான்” என்று மழுப்பினார்.

எங்களுக்கு சந்தேகம் வந்ததால், “சார் என்னை நம்பி இவ்வளவு பேர் பணத்தைக் கொடுத்துள்ளார்கள். எனக்கு பயமா இருக்கு. நீங்களும் நாச்சிமுத்துவும் ஏமாற்றுவது போல் தெரியுது. பணத்தை திருப்பிக்கொடுங்க” என்றதும் டிரைவர் நாச்சிமுத்து என்னிடம் “என்ன சார் நம்பமாட்டிக்கிறீங்க, உங்களுக்கு தரவேண்டிய பணத் திற்கு நான், செல்வம், பிரேமா உறுதிமொழிப் பத்திரம் போட்டுக் கொடுக்கிறோம்’என்று சொல்லி செல்வத்தின் வீட்டிற்கு அழைத்துச் சென்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்து தலைமறைவு ஆனவர் கள்தான்… சில வாரங்களில் கொரோனா வந்து லாக்டவுன் போட்டதால் இவர்களைப் பிடிக்க முடியவில்லை.''

நாச்சிமுத்துவிடம் பேசினோம், "நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் சாதாரண டிரைவர். சதாசிவம் அதிகாரி. எப்படி சார் என்னை நம்பி அவர் இவ்வளவு பெரிய வேலையை ஒப்படைத்திருப்பார். அவரது மகள் திருமணத்திற்கு என்னிடம் 20 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். அதைக் கேட்டவுடன் இப்படி என் மேல் அபாண்டமா குற்றச்சாட்டை வைக்கிறார்''’என்றார்.

யார், யாரை ஏமாற்றினார்கள் என்று போலீசின் முழு விசாரணை முடிந்தபின்பே தெரியவரும். உண்மை என்றும் தோற்காது!