தனது வாழ்வு அடுத்த நொடி முடியப்போகிறது என்ற அந்த இறுதி நொடிகளில் கூட சமயோசிதமாக யோசித்து 20 பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார் டிரைவர் சேமலையப்பன்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த சேமலையப் பன், கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு வெள்ளக்கோயிலில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வேன் டிரைவராக பணியில் சேர்ந்தார். 49 வயதான சேமலையப்பனின் தாய், தந்தை காங்கேயம் சத்யா நகரில் வசிக்கிறார்கள். முதல் மனைவி இறந்துவிட, அவருக்கு ஒரு மகன், பின் லலிதா என்பவரை திருமணம்செய்து ஒரு மகன், ஒரு மகளுடன் வெள்ளக்கோயிலில் வசித்துவந்துள்ளார்.
கடந்த ஜூலை 24-ஆம் தேதி மாலை பள்ளி முடிந்தபிறகு 20 மாணவ- மாணவிகளை வேனில் ஏற்றிக்கொண்டு குழந்தை களின் வீடுகளில் கொண்டுபோய் விடுவதற்காக வேனை ஓட்டிச்சென்றுள்ளார் சேமலையப்பன்.
பள்ளியிலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே சேமலையப்பனுக்கு கடுமையாக வேர்த்துக் கொட்டியது. நெஞ்சில் பாரமும் வலியும் அழுத்துவதாக உணர்ந்திருக்கிறார்.
வேன் சென்ற பாதை அதிக போக்குவரத்து கொண்ட திருச்சி- கோவை தேசிய நெடுஞ்சாலை. மயங்கிச் சரியும் நிலைக்கு வந்த சேமலையப்பன் சுதாரித்துக்கொண்டு பள்ளி வேனை சாலையிலிருந்து கீழேயிறக்கி ஒரு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டுவந்து நிறுத்தினார். பிறகு அதே வேனிலிருந்த மனைவி லலிதாவிடம் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்த சேமலையப்பன் அடுத்த நொடியே ஓட்டுனர் இருக்கையிலேயே மயங்கிவிட்டார்.
அவர் ஏதோ மயக்கமாகிவிட்டார் என்றுதான் அவரது மனைவி, குழந்தைகள் நினைத்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சேமலையப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத் துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதிக போக்குவரத்து கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் இறுதி நொடியில் ஏதாவது நிகழ்ந்திருந்தால்.... நினைத் துக்கூட பார்க்கமுடியாத அந்த கொடுமையிலிருந்து, தன் உயிரைக் கொடுத்து 20 உயிர்களைக் காப் பாற்றியிருக்கிறார் சேமலையப்பன்.
செய்தி கேள்விப்பட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "இறக்கும் தருவாயிலும் இளம்பிஞ்சுகளின் உயிர் காத்த சேமலையப்பன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்'' என்றதோடு "அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்'' என்றார். அவரது குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் அறிவித்தார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் சாமிநாதன் முதல்வர் நிவா ரண நிதியை அந்த குடும்பத்திலுள்ள மறைந்த சேமலையப்பன் பெற்றோர் மற்றும் அவரது குழந்தைகள், மனைவி என எல்லோருக்கும் சமமாக வழங்கி யிருக்கிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியும் அவரது வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக் கிறார்.