கிரிக்கெட்ரசிகர்கள், தொலைக்காட்சியில் கிரிக்கெட்டைப் பார்த்து, வெற்றி தோல்வியால் உணர்ச்சிவசப்பட்ட நிலை மாறி, தாங்கள் பந்தயம் கட்டிய வீரர் அணியோ சரியாக விளையாடாததால், பணம் போச்சே என்று பதட்டமாகக்கூடிய சூழல் வந்திருக்கிறது! இப்படி பந்தயம் கட்டுவதற்காகவே எக்கச்சக்கமான கிரிக்கெட் ஆப்கள் வந்திருக்கின்றன. அவற்றில் முதன்மையான ட்ரீம் 11 ஆப் மீது பல்வேறு மோசடிப் புகார்கள் கிளம்பியுள்ளன!

dream

""இது சூதாட்டம் கிடையாது. புத்திசா-த்தனமாக, அறிவுப்பூர்வமாக விளையாடக்கூடிய விளையாட்டு'' என்று நீதிமன்றத்தில் சொல்-, நம்பவைத்து, அதன்மூலம் தங்களுக்கெதிரான தடைகளை உடைத்து, இந்தியாவில் கோடிக்கணக்கானவர்களால் விளையாடப்பட்டு வரும் ஆன்லைன் பெட்டிங் ஆப்களில் ஒன்றுதான் ட்ரீம் 11. இந்த விளையாட்டை, மோசமான சூதாட்டமெனக்கூறி அஸ்ஸôம், ஆந்திரா, ஒடிஸô, தெலுங்கானா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்கள் தடைசெய்துள்ளன. இருந்தபோதும், இந்த ஆப்புக்கு இந்திய அரசே ஆதரவு தெரிவிக்கிறது. இந்த ஆப்பில் விளையாடி பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வெல்பவர்களிடம் 30% வரிப்பிடித்தம் செய்கிறார்களென்றாலே இந்திய அரசின் நிதியமைச்சகம் அனுமதிக்கிறது என்றுதானே அர்த்தம்! அதுவும் அமித்ஷா வாரிசு ஜெய்ஷா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகமே இதை ஆதரிக்கிறதென்றால்...!

Advertisment

ட்ரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புதான் 'ட்ரீம் 11' என்ற கிரிக்கெட் பெட்டிங் ஆப். இந்த ஆப் மீதான மோகம் கடந்த சில ஆண்டுகளாக அதிரிபுதிரியாக அதிகரித்துவருகிறது. ஒட்டுமொத்தமாக தற்போதுவரை உலகம் முழுவதும் 21 கோடி பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆப் மூலமாகக் கிடைக்கும் வருவாய், கடந்த 2023ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.6,384 கோடியாக உள்ளது. இவ்வளவு வருமானம் குவிவதால்தான் தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்கான ஸ்பான்ஸராக மட்டுமல்லாது, ஐ.பி.எல். ப்ரீமியர் லீக்குக்கும், அதில் விளையாடக்கூடிய சில அணிகளுக்கும் ஸ்பான்ஸராக இருக்கிறது.

Advertisment

இப்படி பணம் கொழிக்கும் ட்ரீம் 11 நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஹர்ஷ் ஜெயினின் தந்தை ஆனந்த் ஜெயின், ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் நெருங்கிய தோழர் என்பது கவனிக்கத்தக்கது. முகேஷ் அம்பானியும் ஆனந்த் ஜெயினும் மும்பை ஹில் க்ராங் உயர்நிலைப் பள்ளித் தோழர்கள். ஆனந்த் ஜெயின், ரிலையன்ஸ் கேப்பிட்ட-ன் தலைவராகவும், ரிலையன்ஸின் இந்தியன் பெட்ரோ கெமிக்கல்ஸ் -மிடெட் நிறுவனத்தின் உயர் பொறுப்பிலும் இருந்தார். இவ்வளவு செல்வாக்கு மிக்க இவரது மகனின் ட்ரீம் 11 நிறுவனம், கோடிகளைக் குவிப்பதிலும், இந்திய அரசின் முழுமையான ஆதரவில் இயங்குவதிலும் ஆச்சர்யம் இருக்குமா?

ட்ரீம் 11ல் எப்படி விளையாடுகிறார்கள்?

ஐ.பி.எல்-ல் இரண்டு அணிகள் மோதுகின்றன என்றால், அவ்விரு அணிகளி-ருந்து நமக்கு பிடித்த 11 பேரை தேர்வுசெய்துகொள்ள முடியும். இதுபோல் நிறைய அணிகளை ஒருவரே தேர்வு செய்துகொள்ளவும் முடியும். அதற்கென சில விதிமுறைகள் இருக்கின்றன. அதன்பின் அந்த அணியைக்கொண்டு, 10 ரூபாய், 15 ரூபாய், 21 ரூபாய் என்ற தொகையி-ருந்து, ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் வரையிலும்கூட பந்தயம் கட்டி விளையாடலாம். அதற்கேற்ப தொடக்க நிலை போட்டிகள் தொடங்கி, கிரான்ட் லீக் வரை பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடப்படுகிறது. தொடக்க நிலை விளையாட்டுக்களில் பல லட்சக்கணக்கானோர் பங்கெடுக்கிறார்கள்.

நாம் தேர்ந்தெடுத்துள்ள கனவு அணியி-ருக்கும் வீரர்கள் விளையாடுவதைப் பொறுத்து, அவர்களுக்கு பாய்ன்ட்டுகள் வழங்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, நாம் தேர்வு செய்த பவுலர், ஒரு விக்கெட் எடுத்தால் அவருக்கு 25 பாய்ன்ட்கள் வழங்கப்படும். அதேபோல், பேட்ஸ்மேன்கள் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் பாய்ன்ட் உண்டு. மேலும், அரை சதமென்றால் 8 பாய்ன்ட் போனஸ். செஞ்சுரி போட்டால் 16 பாய்ன்ட் போனஸ் என்றெல்லாம் பாய்ன்ட்கள் வகைவகையாக வழங்கப்படும். இப்படியான பாய்ன்ட்களின் கூட்டுத்தொகைதான் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவை.

ட்ரீம் 11 ஆப்பில், தொடக்கநிலைப் போட்டியில் இரண்டு பேர் 21 ரூபாய்க்கான போட்டியில் விளையாடுகிறார்கள் எனக்கொண்டால், இரண்டு பேருக்கான கூட்டுத்தொகை 42 ரூபாய். இதில் வெற்றி பெறுபவருக்கு 35 ரூபாய் வழங்கப்படும். ட்ரீம் 11 நிர்வாகத்துக்கு 7 ரூபாய். இதேபோல் பல்வேறு பிரிவுகளில் அதற்கேற்ப கட்டணமும், வெற்றிக்கான தொகையும் நிர்ணயிக்கப்படும். கிரான்ட் லீக் போட்டிகளில் கோடிகளை வெல்ல வாய்ப்புள்ளது.

தற்போது இந்த நிறுவனத்தின் பந்தயத்தில், நிஜ மனிதர்களுக்குப் பதில் ரொபாட்டிக் நபர்கள் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ட்ரீம் 11 பெட்டிங்கில் பங்கெடுக்கும் சில பெயர்கள், ஒரே நாளில் 16,000 போட்டிகள், 10,000 போட்டிகளெல்லாம் விளையாடுவதாகத் தெரியவருகிறது. சாதாரண மனிதர்கள் இவ்வளவு போட்டிகளில் ஒரே நாளில் விளையாடுவது சாத்தியமற்றது. எனவே அந்த பெயர்களில் இருப்பவர்கள் ரொபாட்டிக் போ- நபர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள். முழுக்க முழுக்க கணினி ப்ரோக்ராம்களால் நடத்தப்படும் சூதாட்டத்தில், அதற்கேற்ப ப்ரோக்ராம் செய்வது பெரிய விஷயமில்லை.

dream 11

அதேபோல், போட்டிகள் எண்ணிக்கை விவரங்களில் திருத்தங்கள் செய்யப்படுவதையும் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்புகிறார்கள். இதன்மூலம், வெற்றியாளர்களாக ப்ரோக்ராமிங் ரொபாட்களே தேர்வாகி, அந்த பணத்தை நிறுவனமே எடுத்துக்கொள்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

பொதுவாக, தொடக்க நிலை ஆட்டங்களில் விளையாடக்கூடியவர்களிடம் விசாரிக்கும்போதே, அவர்கள் அளவிற்கு சம்பாதித்ததைவிட ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்ததாகத்தான் தெரிவிக்கிறார்கள். அதுவே க்ரான்ட் லீக் அளவில், கோடிக்கணக்கான பணத்தை வெல்வதற்கான போட்டிகளில் விளையாடுபவர்கள், லட்சக்கணக்கில் இழந்திருப்பதாகப் புகார்கள் வருகின்றன.

மேலும், கோடிக்கணக்கான பணத்துக்காக வீரர்கள் மீது பெட்டிங் செய்யும்போது, ஐ.பி.எல்-ல் விளையாடும் வீரர்களையும் இந்த பெட்டிங் நபர்கள் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. சூதாட்ட விவகாரங்களில் சி.எஸ்.கே. அணியே முன்பு சிக்கியது. மேலும் பல அணிகளின் வீரர்களும் சிக்கியிருக்கிறார்கள் என்பது உண்மைதானே? ட்ரீம் 11 போன்ற ஆப்கள் அப்படியான சூதாட்டத்தையே ஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

ட்ரீம் 11 மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தின் மூலம் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், எழுப்பப்படும் சந்தேகங்கள் புறக்கணிக்க இயலாதவை. எனவே ட்ரீம் 11 போன்ற ஆன்லைன் சூதாட்டங்களில் விளையாடுவோருக்கு, உங்கள் பணத்தையும், நேரத்தையும், மன நிம்மதியையும் இழக்காதிருக்க, இப்படியானவற்றை விளையாடாமல் தவிர்ப்பதே நல்லது என்று எச்சரிப்பது நம் கடமை!