சுயாதீன இசைக்கலைஞராக இருந்து "ஆம்பள' படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, "மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நடிகர் அவதாரமும் எடுத்தார். அப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பையடுத்து, "நட்பே துணை', "நான் சிரித்தால்' உள்ளிட்ட படங்களிலும் ஹீரோவாக நடித்தார்.
அந்த வரிசையில் அவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ள "சிவகுமாரின் சபதம்' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ஆர். ஸ்டைலில் படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என அனைத்தையும் இப்படத்தில் ஆதியே இழுத்துப் போட்டு செய்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து, "அன்பறிவு' என்ற படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்துவருகிறாராம் ஆதி.
கார்த்தியின் ஜா- ட்வீட்!
மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகிவரும் படம் "பொன்னியின் செல்வன்'. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, ரகுமான், விக்ரம்பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இப்படம், இரண்டு பாகங்களாக "பான் இந்தியா' படமாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல் பாகத்தை அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ள படக்குழு அதற்கான வேலைகளைச் சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறது. .
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் ஜெயம் ரவி, ரகுமான் உள்ளிட்ட சில நடிகர்கள் தங்கள் காட்சிகளுக்கான படப்பிடிப்பை ஏற்கனவே நிறைவுசெய்த நிலையில்... இப்படத்தில் வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி, தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பை அண்மையில் நிறைவு செய்துள்ளார். "இளவரசி த்ரிஷா, நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசே ஜெயம் ரவி, என் பணியும் முடிந்தது' என ஜாலியாக ஒரு ட்வீட்டை போட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் கார்த்தி. மீதமுள்ள இப்படத்தின் வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கையில், அடுத்ததாக முத்தையா இயக்கும் "விருமன்' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் கார்த்தி.
வாட்ஸ்அப் வித் விஜய் ஆண்டனி
புரியாத வார்த்தைகள், துள்ளலான இசை, புதுமையான சத்தங்கள் என தனக்காக ஒரு ட்ரெண்டை உருவாக்கி, அதன்மூலம் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. சின்னத்திரையி-ருந்து இசையமைப்பாளராக வெள்ளித்திரைக்கு வந்த இவர், பின்னணிப் பாடகர், நடிகர், தயா ரிப்பாளர், படத்தொகுப்பாளர் என சினிமா துறையின் பல ஏரியாக் களிலும் கலக்கிவருகிறார். அவரது திரைப்பயணம் குறித்த சில சுவாரஸ்ய கண்ணோட்டங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
"ஆக்டிங்தான் உலகத்துலேயே ரொம்ப சூப்பரான வேலை. ஏன் அப்படி சொல்றேன்னா... ரொம்ப கஷ்டப்பட்டு கதை எழுதியிருப்பாங்க, கஷ்டப்பட்டு மியூசிக் பண்ணியிருப்பாங்க, கஷ்டப்பட்டு தயாரிச்சிருப்பாங்க. ஆனால், மொத்தத்துக்கும் சேர்த்து அந்த நடிகரோட படம்னுதான் சொல்லுவாங்க. "பாட்ஷா' ரஜினி படம்னு சொல்-டுவாங்க. ஆனால், அதோட கதை சுரேஷ் கிருஷ்ணா எழுதினது. "பிச்சைக்காரன்' படத்துக்கு சசிதான் ரைட்டர். ஆனால், ஹீரோ வுக்கு நிறைய அடையாளம் கிடைச்சிது. என் கையில பொன்னும், பொருளும் கொடுத்து எனக்கு அன்பையும் கொடுக்குறாங்க அப்படிங்கிறது ரொம்ப நல்லாருக்கு. மியூசிக் பண்ணும்போது என்னோட மியூசிக் புடிக்கும்னு சொல்லுவாங்க, ஆனால், இப்போ என்னை பிடிக்கும்னு சொல்றாங்க. அந்த அன்பு இருக்குல்ல, அதான் முக்கியம். எங்கேயோ இருக்க ஒருத்தவங்க, நம்மள பிடிக்கும்னு சொல்றதுக்கு இந்த நடிப்பு காரணமா இருக்கு. மக்களுக்கு டைரக்டா நாம கனெக்ட் ஆகுறோம். இப்போ மியூசிக் பண்றத விட்டுட்டேன். ஒரேயொரு படத்துக்கு மட்டும்தான் பண்றேன். என் கவனம் முழுக்க நான் ஹீரோவா நடிக்கிற படங்கள்லதான் இருக்கு. மக்கள் கதையை நம்பி தியேட்டருக்கு வர்றாங்க. அதனால, படத்தோட வேலைகள் எல்லாம் எப்படி நடக்குதுன்னு நானும் ரெகுலரா பாத்துட்டே இருப்பேன்'' என்றார்.
படங்கள் தோல்வியடையும்போது அதை எப்படிக் கையாளு கிறீர்கள் எனக் கேட்டபோது, "நாம ஒரு கதையை விரும்பித்தான் நடிக்கிறோம். உதாரணத்துக்கு, நாம உப்பு விக்கப்போறோம். மழை வந்து உப்பு வீணாகிடுது. அதுக்காக உப்பை திட்ட முடியுமா. அதுமாதிரிதான், ஒரு படம் சரியா போகாம இருக்க பல காரணங்கள் இருக்கும். அதுக்காக அந்த படத்தை வெறுக்க முடியாது. நான் பண்ணின பத்து படங்களும் எனக்கு பிடிச்சி பண்ணினதுதான்'' என்றார் நிதானத்துடன்.
"கோடியில் ஒருவன்' டீஸர் "மாஸ்டர்' படத்துடன் ஒப்பிடப்பட்டது குறித்துக் கேட்கையில், "இது எங்களுக்கு பாஸிட்டிவ்வான ஒரு விஷயம்தான். அவ்ளோ கோடிகள் போட்டு அந்த படம் எடுத்தாங்க. ஆனால், நாங்க எங்க -மிடேஷனுக்குள்ள எடுத்தோம். இதுல நான் ஒரு டியூஷன் மாஸ்டர். முத-ல் இதுக்கு "மாஸ்டர்'னுதான் டைட்டில் வச்சிருந்தார் டைரக்டர். ஆனால், அவங்க அந்த டைட்டில முதல்ல ரெஜிஸ்டர் பண்ணிட்டாங்க. அதனாலதான், நாங்க "கோடியில் ஒருவன்'னு டைட்டில் வெச்சோம். இந்த ஒப்பீட்டை நாங்க பாராட்டாகத்தான் எடுத்துக்கிறோம்'' என்றார்.