தமிழ்நாடு புதிய டி.ஜி.பி.யாக சங்கர் ஜூவால் பதவியேற்றதிலிருந்தே ரவுடிகளை ஒடுக்க, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வரும் நிலையில், சமீப காலமாக, கொடூரக் கொலைகளை அரங்கேற்றிவந்த பத்துக்கும் மேற்பட்ட ரவுடிகளை என்கவுண்டர் செய்துள்ளது தமிழ்நாடு போலீஸ். ஆனாலும், பணம்படைத்த ஏ ""கிளாஸ் ரவுடிகளை மட்டும் தப்பிக்கவிட்டுவிட்டு, என்கவுண்டரை எதிர்த்துக் கேள்வி கேட்க யாருமற்ற, பெரிய பின்புலமில்லாத ரவுடிகளை மட்டும் தான் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுகொல்வதாகக் குற்றம்சாட்டுகிறார் கள். அதே வரிசையில், கடந்த டிசம்பர் 27ஆம் தேதி காஞ்சிபுரத்தில் இரட்டை என்கவுண்டர் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில், கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித் தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர் புடைய பிரபா என்கிற பிரபாகரன், காஞ்சிபுரம் பிள்ளையார் பகுதியில் ஓட ஓட வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சி.சி. டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட னர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ரகு, அசேன் இருவரும், காஞ்சிபுரம் பொன்னேரி கரை ரயில் நிலையம் பகுதியில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப் படையில், காஞ்சிபுரம் போலீசார் இருவரையும் சுற்றி வளைத்துப் பிடிக்க முற்பட்டனர்.
அப்பொழுது, ரகுவும், அசேனும் தங்களிடமிருந்த பயங்கர ஆயுதங்களால் போலீசாரைத் தாக்க முயன்றுள்ளனர். சுதாரித்துக் கொண்ட போலீசார், தற்காப்புக்காக ரகு, அசேன் இருவரையும் என்கவுண்டர் செய்துள்ளனர். என் கவுண்டரால் கொல்லப்பட்ட இருவரது உடலும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைத் தீவிர மாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில், வெட்டிக் கொலை செய்யப்பட்ட பிரபாகரனின் அண்ணன் நாராயணன் என்பவரை கடந்த ஐந்து ஆறு வருடங் களுக்கு முன்பு, தற்போது என்கவுண்டர் செய்யப் பட்ட ரகு கொலை செய்ததாகவும், அந்த கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் ரகுவின் அண்ணனான தே.மு. தி.க. பிரமுகர் சரவணன் என்பவரை பிரபாகரன் வெட்டிக் கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படி வளர்ந்த முன்விரோதத்தால், ரகுவையும் வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்றிருக்கிறார் பிரபாகரன். அந்த கொலை முயற்சியில் ரகு தப்பிவிட, ரகுவின் மாமா செந்தில் என்பவர் பிரபாகரனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பழி தீர்க்கும் விதமாகத்தான், பிள்ளையார்பாளையம் பகுதியில் தனியாக சிக்கிக்கொண்ட பிரபாகரனை ஓட ஓட வெட்டிக் கொலை செய்துள்ளார் ரகு.
பின்புலமில்லாத ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் போலீசார், பணபலமிக்க படப்பை குணா வை, கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் குண் டாஸ் போட்டு உள்ளே தள்ளி, கணக்கு காட்டும் இரட்டை நிலைப்பாட்டை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.