திருக்குறளை இந்துமத நூல் என்று கவர்னர் ரவி சித்தரிக்க முயல்வதால், அவருக்கு எதிரான போராட்டங் கள் பரவி வருகிறது. இந்த வரிசையில், கவர்னர் ரவிக்கு திருக்குறள் புத்தகங்களை அனுப்பி வைக்கும் போராட் டத்தை நடத்தி, தமிழ்ச் சங்க நகரமான மதுரையையே அதிர வைத்திருக்கிறார்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.

இந்தப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்ற, இதன் தலைவர் கார்த்தியிடம், கேட்டபோது ... "ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சி யாக திருக்குறள் கருத்துக்களைத் திரித்துப் பேசிவருகிறார். உலகப் பொதுமறையான திருக் குறளை அவர் இந்துத்துவா நூலாக சித்தரிக்க முயல்கிறார். அதனால் ஒழுங்காய்த் திருக்குறளைப் படியுங்கள் என்று, அவருக்கு திருக் குறளை அனுப்புகிறோம்''’ என்றார் காட்டமாக.

g

ஆளுநருக்கு எதிரான இந்தக் கோபத்தீ நாலாப் பக்கமும் பரவி வருகிறது. தமிழறிஞரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழ.கருப்பை யாவோ, "கவர்னர் ரவி எங்கள் வரிப்பணத்தில் உண்டுவிட்டு, எங்கள் தமிழினத்தைப் பழித் துப் பேசுகிறார். தமிழ் தெரியாத அவர், ஆர்.எஸ்.எஸ். சொல்வ தையே இங்கு உளறிக் கொட்டுகிறார்.

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யின்”-என்று, அவர்களின் வேதம் போதிக்கும் வர்ணா சிரமத்தை வள்ளுவர் எதிர்த்து நிற்கிறார். எங்கோ இருந்து இங்கு வந்த நாடோடிக் கூட்டம், உலகின் மூத்த இனத்தின் மறைநூலை, தனது இந்து மதத்திற்குள் கொண்டு செல்லத் திட்டம் தீட்டுகிறது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது''’ என்று அறச்சீற்றம் கொள்கி றார்.

Advertisment

vv

பேராசிரியர் அருணன், "ஆதிபகவன் என்பது சமணத்தின் ஆதிநாதரைக் குறிக்கும். அது கடவுளைக் குறிக்காது. திருக்குறளின் முதல் அதிகாரத்தில் கடவுள் என்னும் சொல்லே கிடை யாது. மற்ற இன தத்துவங் களை அவர்கள் எப்படி தன தாக்கிக்கொண்டார்களோ, அதுபோல் திருவள்ளுவரை யும் தனதாக்கிக்கொள்ளப் பார்க்கிறார்கள்''’என்கிறார் அழுத்தமாய்.

ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ, "ஆளுநர் திரும்பத் திரும்ப தவறாகப் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது. இந்துத்துவ கருத்துக்களை எப்படியும் தமிழ்நாட்டில் திணித்துவிட வேண்டும் என்று துடிக்கும் சங் பரிவார் இயக்கங்களுக்குத் துணையாக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்''’என்கிறார் அனலடிக்கும் குரலில்.

pp

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த திருக்குறள் மாநாட்டில் பேசிய கவர்னர், "ஆதி பகவன் என்பது கடவுள். ரிக் வேதமும் ஆதிபக வன் என்றே தொடங்குகிறது. அந்த ஆதிபகவன்தான் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தார். பிறகு இந்த புவியைப் படைத்து, அதன் எல்லாவற்றிலும் நிலைத்திருக்கிறார். இதைத்தான் திருவள்ளுவர் சாமானிய மனிதனுக்கும் புரியும் வகையில் தமது குறளில் குறிப்பிட்டுள்ளார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப், வேண்டுமென்றே இதனை மாற்றி மொழி பெயர்த்துள்ளார். ஆதிபகவன் என்றால் முதன்மைக் கடவுள் என நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஜி.யு.போப் இதற்கான அர்த்தத்தை புரிந்திருந்தாலும் முதன்மைக் கடமை என எழுதியுள்ளார். போப் திருக்குறளின் ஆன்மீக ஆன்மாவை சிதைத்துவிட்டார்''’என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் தன் உரையில்...’"தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டாக ஒவ்வொரு திருக்குறளையும் அர்த்தத்தை புரிந்து வாசித்து வருகிறேன். திருக்குறள் கற்பிக்கும் ஆன்மிகம் குறித்து யாரும் பேசவில்லை. ஆன்மிகம்தான் இந்தியாவின் ஆணிவேர் என்பதை யாரும் பேசவில்லை. திருக்குறளை அரசியலுக்காக ஒரு சிலர் பயன் படுத்துகின்றனர். ஆன்மிகம் மற்றும் நீதி சாஸ்திரம் குறித்துதான் திருக்குறள் பேசுகிறது. இந்தப் புதக்கத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறைப் புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். ஆனால் இந்த நூல் ஒரு இந்து மத ஆன்மீக நூல்''’என்று இஷ்டத்துக்கும் அடித்து விட்டார்.

dd

தமிழ்ப் பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான அவனி மாடசாமி நம்மிடம், "இது ஏதோ சதி வேலையாகவே எனக்குப்படுகிறது. சைவ, சமணத் தத்துவங்களைத் தனதாக்கிக்கொண்டது போல, திருக்குறளையும் தனதாக்கிக்கொள்ள இந்துத்துவா கும்பல் சதி செய்கிறது என்றே கொள்ளலாம். திருக்குறள் மாநாடு நடத்திய இயக்கம் தி.மு.க. தான். வள்ளுவருக்கு வானளவு சிலை அமைத்தும், வள்ளுவருக்குக் கோட்டம் அமைத்தும் புகழ் சேர்த்தவர் கலைஞர். திருக்குறள் உலகளாவிய பொதுத்தன்மை கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ந்த ஜி.யு.போப், அதை "உலகப் பொதுமறை' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு, நாலடியார், திருவாசகம் புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பா போன்ற நூல்களையும் பதிப்பித்தார். வேண்டு மென்றே பழியை அவர்மேல் சுமத்தி, திருக் குறளை இந்துத்துவா நூலாகக் காட்ட முயற்சி மேற்கொள்கிறார்கள். இது ஒருபோதும் எடுபடாது. திருக்குறளை, எப்படி மொழி

gg

பெயர்த்தாலும் அதன் தன்மைக்கு மாறாக எதையும் யாராலும் புகுத்த முடியாது. அது சனாதனங்களுக்கு எதிரான நூல்''’என்கிறார் அழுத்தமாய்.

கவர்னர் ரவியைப் போன்றவர்களுக்காகத் தான் ’"யாகாவா ராயினும் நாகாக்க'’என்ற குறளை எழுதியிருக்கிறார் வள்ளுவர். அந்தக் குறளை மட்டுமாவது கவர்னர் ரவி முதலில் படிக்கட்டும் என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்.

கவர்னர் அடங்குவாரா?