(சென்ற இதழ் தொடர்ச்சி)

எஸ்.வி.சேகர் என்ன சொன்னார்?

எஸ்.வி.சேகர் சொன்னதுதான் நியாபகம் வருது. அவர் கேட்டது நியாயமான வார்த்தைதான். என் வீடு இதுவரை மூன்று முறை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இங்க கொட்டாவி விடுறவனுக்கெல்லாம் பாதுகாப்பு. இவர்தான் (மாநில தலைவர்) சூரப்பு- சுப்பையா ஆச்சே. செக்யூரிட்டி வேண்டாம் என எழுதிக் கொடுக்க சொல்லுங்க. இவர் கேட்காமதான் செக்யூரிட்டி கொடுத்ததா ஹோம் மினிஸ்ட்ரி. இவர் எத்தனை முறை நின்னு வாங்கிட்டு வந்தார் என எனக்கு தெரியும். Individualஆ நான் பெரிய Solo King, என்னை பார்த்தா தமிழ்நாடே கட்டிப்பிடிக்க தயாராக இருக்கு என்கிறபோது உனக்கு எதுக்கு பாதுகாப்பு?

எங்களுக்கு உண்மையிலுமே பிரச்சனை இருந்துச்சி. நாங்க கேட்டப்ப ஒரு விசயம்கூட செஞ்சி தரல. மூன்று முறை என் வீடு தாக்கப்பட்டபோது இரண்டு முறை பெட்ரோல் குண்டு வீச்சு. கேசவ விநாயகம், எல்.முருகன், தமிழிசை, எஸ்.டி.பி.ஐ., அ.தி.மு.க., நாம் தமிழர் என எல்லோரிடமும் பிரச்சனை. இவர்கள் யாரிடமாவது உனக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சனையா? என எஸ்.வி.சேகர் ஒரே ஒரு வார்த்தை கேட்டார். தனிப்பட்ட முறையில் யாரிடமும் எனக்கு பிரச்சனை இல்லை. மாநில தலைவருக்கு உண்மையாக இருக்கணும் என்பதற்காக ஊரையே பகைச்சிக்கிட்டேன் என்றேன்.

Advertisment

tt

Advertisment

இவர்கள் மேல் கோபப்படுவியா? யாருக்காக உண்மையா இருந்து எல்லோரையும் பகைச்சிட்டியோ அவர் மேல் கோபப்படுவியான்னு கேட்டார். அவர் கேட்டது நியாயம்தானே. யார் நம்மை ஏமாத்துனது. உண்மையை முழுங்கினது யாருன்னு தெரிஞ்சி போச்சு. டெல்லிக்கு யாராவது போனால் அவரை மாநிலத் தலைவர் கட்டம் கட்டுவார்.

தமிழிசை போனார்களே...

அந்த அம்மாவ கட்டம் கட்ட முடியாது. அந்த அம்மா இவரை (மாநில தலைவரை) ஒரு இஞலல அடைச்சிடும். அங்க இவர் வேலை நடக்காது. அப்படிப் பண்ணினார் என்றால் வேற மாதிரி ஆயிடும்.

கூட்டணிக் கட்சிகளுக்கு வலுக்கட்டாயமாக சீட் அதிகமாகக் கொடுக்கப்பட்டதா?

எங்க ஜெயிப்பமோ அங்க சீட் கொடுங்கன்னு தான் எல்லோரும் கேட்டாங்க. பா.ம.க.வுக்கு 10 கொடுத்தீங்க, எங்களுக்கு அதிகமா கொடுங்கன்னு யாரும் கேட்கல. திருச்சி வேண்டவே வேண்டாம். நிக்க ஆளு இல்ல. எனக்கு ஒரே ஒரு தொகுதி போதும். ஏன்னே தெரியல, மாநில தலைவர் கட்டாயப்படுத்துறாரு என்று டிடிவி சொல்றாரு. திருச்சியில அவர் நினைத்திருந்தால் என்னை வேட்பாளராக அறிவித்திருக்க முடியும். வேண்டுமென்றே கழுத்தறுத்தார். மறைமுகமா எதிரில் இருப்பவர்கள் ஜெயிக்கணும் என்பதற்காக திருச்சியில டம்மியா போட்டாரு. ‘

திருச்சியில நிக்கணும் என ஆசை இருக்குக்குன்னு சொன்னீங்களா?

அவருக்கே தெரியும். கட்சியில என்னை சேர்த்தப்ப அவரோட வார்த்தை அதுவாகத்தான் இருந்தது. கட்சி மீட்டிங் நடந்தப்ப பல தடவ இவர்தான் எம்.பி. வேட்பாளர் என்று சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுகம் இல்லை. ம.தி.மு.க.வுக்கு பம்பரம் இருந்தா வேற. புது சின்னம் தீப்பெட்டி. உள்ளூர் அமைச்சர்களுக்குள் பிரச்சினை. இந்த அரசியல் சூழ்நிலையை நமக்கு சாதகமாக அமைத்திருக்கலாம். கூட இருக்கிறவன் வளரக் கூடாது என்று நினைக்கிறார்.

என் பிறந்தநாளுக்கு சென்னையில் போஸ்டர் ஒட்டினார்கள். அதனால்தான் மாநில தலைவர் கோபப்பட்டிருப்பார். அந்த கோபத்தில்கூட கட்சியில் இருந்து நீக்கியிருக்கலாம் என சொன்னார்கள். நீ மாநில தலைவரா இருக்க. நாடாளுமன்ற ரிசல்ட் அன்று பிறந்தநாள். ஜெயிச்சா கேபினெட் அமைச்சருன்னு சொன்னாங்க. எவனும் போஸ்டர் ஒட்டல. இதுதான் உன் லட்சணம். உன் பிறந்தநாள் அன்று கோவையிலும், சென்னையிலும் நான்தான் போஸ்டர் ஒட்டினேன். உண்மையா இருந்த என்னை நீக்கிட்டீங்க.

கோவையில் மாநில தலைவர் ஜெயிப் பாருன்னு சொன்னாங்களே?

கோயம்புத்தூர் மக்கள் எப்பவுமே உஷார். பார்த்த உடனே கணிச்சிடுவாங்க. இந்த விசயத் துல கோவை மக்கள் தெளிவா இருந்துருக்காங்க.

தமிழிசை மாநில தலைவர் பதவியை விரும்புகிறாரா?

விரும்புகிறார்கள். முதலில் கவர்னர் பதவியை விட்டுவிட்டு தேர்தலில் நின்னப்ப, ஜெயித்து கேபினெட் மினிஸ்டர் ஆகணும் என நினைத்தார். தோல்வியடைந்ததும் மீண்டும் கவர்னர் பதவி வேணும் என்று கேட்க முடியாது. லண்டனுக்கு படிக்கப் போகிறார் மாநில தலைவர். அந்த காலத்தில் தமிழிசை மாநில தலைவர் பொறுப்பில் இருப்பார். அப்போது அவரை விட தமிழிசை ஸ்கோர் பண்ணி காண்பித்தால் அவர் லண்டனிலேயே இருக்க வேண்டியதுதான். தமிழிசை மாநில தலைவராக ஆகிவிடுவார்.

சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி பா.ஜ.க.வுக்கு வந்தார். அவருக்கு ஏன் எம்.பி. சீட் கிடைக்கல?

மாநில தலைவருக்கு டெல்லியில் ஒரு மைனஸ் இருந்துகொண்டேயிருந்தது. சிட்டிங் எம்.எல்.ஏ., எம்.பி. யாரையாவது கொண்டுவந்தீங் களா என டெல்லி எதிர்பார்த்தது. என்னை பா.ஜ.க. வுல சேர்க்கும்போது, தி.மு.க. எம்.பி. மகனையே கொண்டுவந்துட்டாரா என டெல்லி நினைத்தது. விஜயதாரணி காங்கிரஸ் மேலிடத்தில் வருத்தத்தில் இருப்பதை தெரிந்துகொண்டு, காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ.வையே கொண்டு வந்துட்டேன் என்று அவர் பெயர் எடுத்துக்கொண்டார், அவ்வளவுதான். விஜயதாரணி செய்த தவறு, மாநில தலைவரை நம்பி வந்தது. கன்னியாகுமரி சீட் உங்களுக்குத்தான் என்று சொல்லியதால்தான் அவர் பா.ஜ.க.வுக்கு சென்றார். அவருக்கு சீட் கிடைக்கல. உடனே, அக்கா எவ்வளவோ முயற்சி செஞ்சேன். கவலைப்படா தீங்க பா.ஜ.க. கைவிடாது என சாதாரணமா சொல்லிடுவாரு.

நானும் எல்லா மூத்த தலைவர்களிடமும் பேசினேன். எல்லோரிடமும் பா.ஜ.க.வுக்கு வாங்க ராஜ்யசபா தர்றோம், மந்திய மந்திரி தர்றோம், கவர்னர் பதவி தர்றோம் என சொல்லியிருக் கிறார்கள். வி.பி.துரைசாமியை எல்.முருகன் என்ன சொல்லி பா.ஜ.க.வுக்கு கூப்பிட்டாரு, கவர் னர் பதவி வரும் என சொல்லித் தான் கூப்பிட்டு உட்கார வைச்சிருக்கார். சரத்குமார் என்ன சொல்லி மண்டைய கழுவு னாங்கன்னு தெரியல, அவர் கட்சியையே கலைச்சிட்டுப் போய் உட்கார்ந்திருக்கிறார்.

பா.ஜ.க.வுக்கு வரணும் என சிலர் விரும்புறாங்க. தயவுசெஞ்சி வராதீங்க. எந்தக் கட்சிக்கு வேணாலும் போங்க. ஆனா இந்த கட்சி வேணாம். நீதான் அடுத்த எம்.பி., கவர்னர், மத்திய மந்திரி என்பார் கள். நீதான் மத்திய மந்திரி என இதுவரை 40 முறை சொல்லியிருக்கிறார் மாநில தலைவர். கு.க.செல்வம் சிட்டிங் எம்.எல்.ஏ. என கொண்டுபோய் அவுங்க பெயர் எடுத்தாங்க. இவரை அம்போன்னு விட்டுட்டாங்க. குஷ்பு, தி.மு.க.வுக்கு போகும்போது கடனோடு போனாங்க. பா.ஜ.க.வுக்கு வரும்போதும் இரண்டே கால் கோடி கடன் இருந்துச்சி, கடனை தீர்த்து எம்.எல்.ஏ. சீட் கொடுத்து தோற்றபின்னர், மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி தந்தாங்க. அது போதாதாம்... எம்.பி. சீட் வேணுமாம். மனசாட்சி இருக்கிறதா?

திருநாவுக்கரசர் சொல்கிறார், "அந்தக் கட்சியில இருக்க முடியாதுப்பா... அதனால்தான் வந்துட்டேன்'' என்றார். உண்மையிலுமே ரங்க ராஜன் குமாரமங்கலம் இப்ப இருந்தால் அவரே இந்தக் கட்சியில இருந்திருக்க மாட்டார். சத்தியமா மனுஷன் இந்தக் கட்சியில இருக்கமாட்டான். இருக்குறதுபூரா வேறயாதான் இருக்கும். பதவியில் இருப்பவர்கள் இவர்களை நம்பி வந்தால் ஏழ்ங்ஹற் ஃண்ழ்ண்ந்ஹப்ஹய் ஙஹஞ்ண்ஸ்ரீ நட்ர்ஜ் காட்டுவார்கள். கிழிச்சி அனுப்பிடுவாங்க. அரசனை நம்பி புருஷனைவிட்ட கதையா ஆகிடும். இவர்கள் பேச்சை நம்பாதீங்க. இது அர சியல் கட்சியே இல்ல. இளைஞர் களை நாம் தமிழர் கட்சியை மீறி இழுக்கக்கூடிய கட்சியாக பா.ஜ.க. மாறிக்கொண்டிருக்கிறது. அதனால இளைஞர்கள் உஷாராக இருங்க. பதவியில் இருக்கிறவங்க இங்க வந்தீங்கன்னா இருக்கிறதையும் பிடிங்கி விட்டுட்டு மெரினா பீச்சில ரோட்டுல நிக்க விட்டுடு வாங்க.

"பா.ஜ.க.வினரை பசும் பொன் பக்கம் விடமாட்டோம்' என உங்களுக்கு ஆதர வாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதே?

முக்குலத்தோர் சமுதாயத்தை எடப்பாடி இழிவுபடுத்துகிறார் என்று அவர் பக்கம் குற்றம் சுமத்துகிறார்கள். உண்மையிலுமே இழிவுபடுத்துவது பா.ஜ.க.தான். கட்சியில் முக்கியப் பதவிகளை முக்குலத்தோருக்கு கொடுப்பது கிடையாது. அந்த சமூகத்தில் யாரை யும் வளரவிடுவதில்லை. தற்போதைய மாநிலத் தலைவர் மட்டுமல்ல, இதுவரை இருந்த அனைத்து தலைவர்களும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். உண்மையிலுமே எங்கள் சமுதாயத்தை இழிவு படுத்தும் பா.ஜ.க.வினரை, விரைவில் தேவர் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து, பசும்பென் உள்ளே விடக்கூடாது என்று முடிவெடுப்பார்கள்.

நேர்காணல்: -வே.ராஜவேல்

தொகுப்பு: தாஸ்