நெய்வேலி பூங்காவில் விளையாடச் சென்ற இரண்டு வயதுச் சிறுவன் அயனாஸை நாய்கள் கடித்துக் குதறிய விவகா ரம், பலரையும் ரொம்பவே பாதித்துள்ளது. தனது மகனைப் போல பிறரும் பாதிக்கப்படக்கூடாதென அவனது தாய் தமிழரசி, வெளியிட்ட வீடியோ வைரலாகி முதல்வரது கவ னம்வரை சென்றுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் மெயின் பஜார் அருகே கோல்டன் ஜூப்ளி பார்க் உள்ளது. இப்பூங்காவில் மாலை நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 22 அன்று காலை நேரத்தில், சேகர் என்பவர் தனது இரண்டு வயது பேரன் அயனாஸை அழைத்துச்சென்றுள்ளார். விளையாட்டின் இடையே அயனாஸ் தண்ணீர் கேட்க, குழந்தையை பூங்காவில் விளையாட விட்டுவிட்டு, இருசக்கர வாகனத்திலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுக்கச் சென்றபொழுது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த 4 தெருநாய்கள் ஒன்றுசேர்ந்து குழந்தை அயனாஸை கொடூரமாகக் கடித்துள்ளன.
இதையடுத்து குழந்தை அயனாஸ் மீட்கப் பட்டு என்.எல்.சி. பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைபெற சேர்க்கப்பட்டான். பின்னர் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. குழந்தையின் உடல் முழுவதும் ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட தையல்கள், காயங்கள். முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தையின் தாய் தமிழரசி குழந்தையின் நிலையை விளக்கி, "எனது பையன் நெய்வேலியிலுள்ள தாத்தா வீட்டுக்கு வந்திருந் தான். அவனது பொழுதுபோக்குக்காக அப்பா வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பூங்காவுக்கு அழைத் துச் சென்றிருக்கிறார். அங்கே இப்படி தெருநாய் கள் இருக்குமென அப்பாவுக்குத் தெரிந்திருக்க வில்லை. பையனுக்கு தண்ணீர் எடுத்து வருவதற்குள் நாலைந்து நாய்கள் கடித்துக் குதறியிருக்கின்றன.
நாங்க ஓசூரிலிருந்து வர்றதுக்கு முன்னாலே, பையன் உடலில் நாய்க் கடிபட்ட இடங்களில் தையல் போட்டுட்டாங்க. அறுபதுக்கும் மேற்பட்ட தையல், பிளாஸ்டிக் சர்ஜரி… இதையெல்லாம் தாங்கும் வயதா அவனுடையது? நாய்கள் கடிச்சதிலயும் அதிர்ச்சியிலயும் அவன் பயந்துபோயி ருக்கான். வீட்டு ஆட்களைத் தவிர யார்கிட்டயும் சேரமாட்டேங்கிறான். இந்த பயம் மாறுவதற்கு எத்தனை காலம் ஆகுமோ?''’என்கிறார் அவர்.
அத்தோடு, “"எனது குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்ற குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது. குழந்தைகளை எக்காரணம் கொண்டும் தனியாக விட்டுச் செல்லாதீர்கள். அரசு, தெருநாய்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் பகுதியில் தெருநாய்கள் நடமாட்டம் மிகுதியாக இருந்தால், அரசின் கவனத்திற்கு கொண்டு செல் லுங்கள்''’என பொதுநல நோக்கோடு காணொலி நறுக்கொன்றைப் பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற் குச் சென்றது. அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் உதவியாளர், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வெ.கணேசனைத் தொடர்புகொண்டு, உடனடியாக அந்த குழந்தையையும், பெற்றோரையும் பார்த்து அவர்களுக்கு உதவி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
கடந்த 02-01-2022 அன்று இரவே உடனடியாக நெய்வேலியிலுள்ள தமிழரசியின் பெற்றோர் இல்லத்திற்கு அமைச்சர் கணேசன் சென்று பார்த்தபோது, அவர்கள் சொந்த ஊரான பெங்களூர் அருகேயுள்ள ஓசூருக்கு சென்றுவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். அதையடுத்து அமைச்சர் கணேசன் உடனடியாக ஓசூரிலுள்ள குழந்தையின் பெற்றோர் இல்லத்திற்குச் சென்று, குழந்தையைப் பார்த்து குழந்தையின் பெற்றோர் சபரிநாத் -தமிழரசி தம்பதியிடம் குழந்தையின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
அவர்களுக்கு ஆறுதல் கூறி, குழந்தையின் மருத்துவச் செலவுக்காக ரூபாய் 50,000 நிதியுதவியும் வழங்கினார். அப்போது, "முதலமைச்சர் இந்த குழந்தை யின் தாயார் பேசிய வீடியோவைப் பார்த்து உடனடியாக நேரில் பார்த்து ஆறுதல் கூறி, உதவி செய்யச் சொன்னார். பொதுநல நோக்கத்துடன் வீடியோ வெளியிட்ட உங்க ளின் அணுகுமுறை அவரை நெகிழச் செய்திருக்கிறது. உங்கள் குழந்தை பாதிக்கப்பட்ட நிலையில், மற்ற குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்ற நோக்கில் நீங்கள் வீடியோ வெளியிட்டது உண்மையி லேயே பாராட்டுதலுக்குரியது. எந்த உதவி வேண்டு மானாலும் உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள்'' என்று முதலமைச்சர், முதலமைச்சரின் உதவியாளர் மற்றும் தனது செல்போன் நம்பர்களை அந்த குழந்தையின் பெற்றோரிடம் அளித்தார்.
இதில் நெகிழ்ச்சியடைந்த அவர்கள், “"இரவோடு இரவாக இவ்வளவு தூரம் அமைச்சரே தேடிவந்து எங்கள் குழந்தையைப் பார்த்து ஆறுதல் கூறுவது நெகிழச் செய்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மீதும், அவரது ஆட்சியின் மீதும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக உள்ளது''” என்று தெரிவித்தனர்.