"ஹலோ தலைவரே, உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. கூடாரத்தில் ஒரே களேபரமா இருக்கு.''”
"ஆமாம்பா... கட்டம் கட்டுதல், ஓரம் கட்டுதல்னு காட்சிகள் அரங்கேறப்போகுது போலிருக்கே?''”
"சரியாச் சொன்னீங்க தலைவரே, மாஜி அ.தி.மு.க. அமைச்சரான கோகுல இந்திராவை கட்டம் கட்டறதுக்கான முயற்சிகள் அ.தி.மு.க.வில் நடக்குதாம். காரணம், ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, அவர் தி.மு.க.வில் இருக்கும் தன் சமுகத்தைச் சேர்ந்த அமைச்சர் களான கண்ணப்பன், பெரிய கருப்பன் உள்ளிட்டவர்களோடு நெருக்கம் பாராட்ட றாராம். அவர்மூலம் கட்சி யின் ரகசியங்கள் தி.மு.க. சைடுக்குப் போகுதுன்னு எடப்பாடி தரப்பு சந்தேகப்படுது. இப்பக் கூட மறைந்த இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் நினைவு விழாவில் மேற்கண்ட அமைச்சர்களோடு அவர் கலந்துக்குறது பத்தி கட்சித் தலைமை கேட்டிருக்கு. அதுக்கு, இதுக்கும் கட்சிக்கும் சம்மந்தமில்லைன்னு சொன்னாராம் கோகுலஇந்திரா. அதேபோல் உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அதிகம் தலைகாட்டாத படி ஓ.பி.எஸ்.சை முடக்கி வச்சிருக்குதாம் எடப்பாடித் தரப்பு.''”
"எடப்பாடி மீது பா.ஜ.க.வினர் கோபமா இருக்காங்களே?''”
"ஆமாங்க தலைவரே, 9 மாவட்டங் களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக, பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் எடப்பாடி, அங்கங்கே ஊழியர் கூட்டங்களையும் நடத்துகிறார். அந்த கூட்டங்களில் பா.ஜ.க.வினரை அழைக்க வேண்டாம்னு அவர் கறார் உத்தரவு போட்டிருக்கிறார். அதனால் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வினர் இல்லாமலேயே அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டங்கள் நடந்திருக்கு. இதையறிந்து கொதித்துப் போயிருக்கும் பா.ஜ.க.வினர், எடப்பாடிக்கு எதிராக தங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் புகார் கொண்டு போயிருக்காங்க. பா.ஜ.க வேண்டாம்னா அப்புறம் எதற்கு எங்களைக் கூட்டணியில் வைத்திருக்கணும்?ன்னு பகிரங்கமாகவே குமுறு கிறது பா.ஜ.க. தரப்பு.''”
"சரிப்பா, பா.ஜ.க. சீனியரான ஹெச்.ராஜா வுக்கு சட்டச் சிக்கல் காத்திருக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, சர்ச்சை நாயகரான ஹெச்.ராஜா, அண்மையில் "ருத்ர தாண்டவம்'ங்கிற திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டார். அப்ப நிருபர்களிடம் பேசிய அவர், இந்து மதத்தையும் மத மாற்றத்தையும் இணைச்சி எழுதற பத்திரிகையாளர்கள், எழுத்து விபச்சாரிகள்னு கடுமையாக விமர்சிச்சார். அவரது இந்தத் தாக்குதல் பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திருக்கு. அதே பேட்டியின்போது சீமான் அம்மா தமிழரான்னு ஒருமையில் கேட்டுவிட்டு, அவர் ஒரு மலையாளின்னு ஒரு குண்டையும் வீசியிருக்கார். இப்படிப் பட்ட அவரது அந்த அடாவடிப் பேட்டிக்கு எதிராக புகார்கள் தயாராகிவருது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீ., காவல் துறையில் புகார் கொடுத்திருக்காரு. தொடர்ச்சியானப் புகார்களின் பேரில், இதுவரை இல்லாத அளவுக்கு அவர் சட்டரீதியான சிக்கல்களைச் சந்திப்பார்னு காவல்துறையினர் சொல்றாங்க.''”
"சேலத்தில் ஒரு அலுவலக உதவியாளர் ரெய்டுக்கு ஆளாகியிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, பொதுவா பெரிய பவரில் இருந்த அதிகாரிகளைக் குறிவைத்து ரெய்டுகள் நடக்கு றதுதான் வழக்கம். அதுக்கு மாறா, சேலம் மாவட்ட பதிவாளரிடம் உதவியாளராக இருக்கும் காவேரி என்ற நபரைக் கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை டீம், அவர் தொடர்பான அலுவலகங்களிலும், வீடுகளிலும் ரெய்டை நடத்தியிருக்கு. அதுக்குக் காரணம், ஜெ.வின் ù'காடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட சொத்து ஆவணங் களை, இந்த காவேரியும், ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப் பட்டிருக்கும் கோவை பத்திரப்பதிவு அதிகாரி செல்வ குமாரும்தான் டீல் செய்தாங்களாம். இப்ப இவர்கள் தீவிர விசாரணை வளையத்தில் சிக்கி இருப்பதால், எடப்பாடித் தரப்பு நெருப்புமேல் அமர்ந்திருக்குதாம்.''”
"தி.மு.க. எம்.பி. ஒருத்தரும் கடுமையான சிக்கலில் இருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, கடலூர் தி.மு.க எம்.பி. ரமேஷின் முந்திரி கம்பெனியில் வேலை பார்த்த தொழிலாளி கோவிந்தராஜ் என்ப வர், திருட்டுப் புகாரின் பேரில் விசாரிக் கப்பட்ட நிலையில், மர்மமாக மரணம் அடைந் திருக்கிறார். இதுபற்றி நம்ம நக்கீரன் விரிவா வெளியிட்டிருந் தது. இந்த வழக் கைக் கொலை வழக்காக மாற் றத் திட்டமிட்டி ருக்கிறதாம் விசாரணை டீம். இந்த விவகாரத்தை மேலதிகாரிகள் தலைமையில் விசாரிக்க வேண்டும்னு பா.ம.க. வழக்கறிஞர் கே.பாலுவும், கோவிந்தராஜின் சகோதரரும் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்தித்து வலியுறுத்தியிருக்காங்க. இதைக் கொலை வழக்காக மாற்றாதபடி பார்த்துக்கங்கன்னு எம்.பி. தரப்பு, தங்கள் மேலிடத்தை அணுக, ராஜினாமா செய்துட்டு வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளுங்கள்னு மேலிடம் சொல்லி விட்டதாம். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட கோவிந்தராஜின் குடும்பத்தினரை சமா தானப்படுத்தும் முயற்சிகள் நடக்கிறதாம்.''”
"ம்...''”
"அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக சமீபத்தில் எம்.எல்.ஏ.வான உதயநிதி நியமிக்கப்பட்டார். பல்கலைக் கழகத்தின் பல்வேறு முடிவு களுக்கு சிண்டிகேட்டின் ஒப்புதலைப் பெற்றாகணும். உதயநிதி சிண்டிகேட் மெம்பரான பிறகு, கடந்த 28ந் தேதி முதல் கூட்டம் நடந்தது. அவரோ உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம், பட ஷூட்டிங்னு பிஸியா இருந்ததால இதிலே கலந்துக்க முடியலை. தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போது பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு எதிராக கண்டனப் போராட்டம் நடத்திய வர் உதயநிதி. அதனால, இந்த சிண்டிகேட் கூட்டத்தை மிஸ் பண்ணியிருக்கக் கூடாதுன்னு பல்கலைக்கழகத் தரப்பில் சொல்லப்படுது.''”
"ஆயிரக்கணக்கான ரவுடிகளை தி.மு.க. அரசு கைது செய்திருப்பதை, ஜெ. பாணியில் ஸ்டாலின்னு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்லியிருக்காரே?''”
"நானும் இதைப் பற்றி சொல்றேன். ஜெ. ஆட்சியிலும் அரசியல் கிரிமினல்கள் வெளிப் படையாவே மேடை ஏறிக்கிட்டுத்தான் இருந்தாங்க. இப்பவும் தொடர்ந்து அவர்களின் பின்னால் இருக்கும் கூலிப்படைகள் தைரியமாக ஆக்டிவாக இயங்கிவருது. குறிப்பாக, சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு பிரமாண்டமான அப்பார்ட்மெண்ட் வளாகத்தில், அரசியல் பின்னணி கொண்ட கிரிமினல்கள் தங்கியிருக் கிறார்கள். அதே அபார்ட்மெண்டில் தமிழக காவல்துறை உயரதிகாரிகள் பலரும் இருக்கின்றனர். அவர்களுடன் அரசியல் கிரிமினல்கள் நல்ல தொடர்பை உருவாக்கிக் கொண்டு, தமிழகம் முழுவதும் ஒரு ராஜாங்கத்தையே நடத்துகிறார்களாம். இந்த உறவுதான் சட்டம் ஒழுங்குக்கு பெரும் சவால்னு காக்கி வட்டாரத்தில் சொல்றாங்க.''”
_________________________________________________
முதல்வர் வீட்டு முன் தீக்குளிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி சமீபம் உள்ள ஜமீன் தேவர்குளத்தைச் சேர்ந்தவர் வெற்றிமாறன். இந்த ஊராட்சிக் கிராமம் தென்காசி மாவட்டத்தின் குருவிகுளம் யூனியனில் வருகிறது.
பட்டியல் இனத்தவரான பெயிண்டர் வெற்றிமாறன், ஒவ் வொரு ஊராட்சித் தேர்தலின்போதும் தலைவர் பதவிக்கு போட்டி யிடுவதை வழக்கமாகக் கொண்டவர். தவிர, நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியிலும் போட்டியிட்டவர்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஜமீன் தேவர்குளத்தின் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்திருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் ஜமீன் தேவர்குளத்தின் ஒட்டுமொத்த சமுதாய மக்களும் திரண்டு, அருந்ததியர் சமூகம் சார்ந்த ராமசாமி என்பவரைத் தலைவர் பொறுப்பிற்கு நிறுத்தியிருக்கிறார்கள்
இதனிடையே வேட்புமனு வாபசுக்கு முன் 21.09.21 அன்று ஊர்மக்கள் மற்றும் எக்ஸ் பிரசிடெண்ட் பாலகிருஷ்ணன் போன்றவர்களிடம் பேசிய வெற்றிமாறன், "நான் ஊரோடு ஒத்துப் போவேன், எதிராகப் போகக்கூடியவர் அல்ல...' என்றவரிடம், "இதை என்னிடம் ஏன் சொல்றீக? ஊரிலுள்ள அனைத்து சமுதாய மக்களும் பேசி ஒருவரை நிறுத்தியுள்ளனர். நீங்கள் அவரிடம் பேசிக்கொள்ளுங்கள். நான்கூட இந்தத் தேர்தலில் நிற்கவில்லையே' என்றிருக்கிறார் எக்ஸ் பிரசிடெண்ட். அப்போது வெற்றிமாறன், "எனக்கு சில பிரச்சினை இருக்கு, எனக்கு ஒரு தொகை கொடுத்தால் நான் வேட்புமனுவை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். சென்னை போய்விடு கிறேன்' என்றபோது, "அப்போசிட் வேட்பாளர்ட்ட பேசிக்குங்க' என்றிருக் கிறாராம் எக்ஸ் பிரசி டெண்ட் பாலகிருஷ்ணன்.
இதையடுத்து வேட்புமனு பரிசீலனையின்போது, வெற்றிமாறன் தனது வேட்புமனுவுடன் வீட்டுத் தீர்வை ரசீது மற்றும் ஊராட்சிக்கு வரி பாக்கி எதுவும் கிடையாது என்பதற்கான ஊராட்சியின் என்.ஓ.சி. உள்ளிட்ட ஆவணங்களை அவர் வைக்காததால் வெற்றிமாறனுடைய வேட்புமனுவை தள்ளுபடி செய்திருக்கிறார் குருவிகுளம் யூனியன் தேர்தல் அதிகாரி. இதுதான் நடந்தது என்கிறார்கள் ஊரார்.
அதையடுத்தே விரக்தியில் சென்னையில் தீக்குளிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. முதல்வர் வீட்டுமுன் நடந்த இந்த பகீர் சம்பவத்தின்போது, துரிதமாக செயல்பட்டு வெற்றிமாறனைக் காப்பாற்றிய போலீசாரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார் டி.ஜி.பி. சைலேந்திர பாபு. போலீசார் ஜமீன் தேவர்குளத்திலும் விசாரணை நடத்தியுள்ளனர்.
-பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்