ஜூன் முதல்வாரம் தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நடைபெற இருக்கிறது. அத்துடன் மாவட்டச் செயலாளர்களும் மாற்றப்பட இருக்கிறார்கள் என தி.மு.க. வட்டாரத்தி-ருந்து செய்திகள் வருகின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியே அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றும் என தி.மு.க. தலைமை கணித்துள்ளது. ஆனால், ஒரு பிரம்மாண்டமான வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தும் சில தொகுதிகளில் முக்கிய தி.மு.க. நிர்வாகிகளே சரியாக வேலை செய்யாமல் உள்ளடி வேலைகள் செய்ததாக கட்சி மேலிடத்துக்கு புகார்கள் சென்றுள்ளன. அதனால் முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டா-ன், தன்னிடம் வந்த புகார்களை தொகுத்து அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். அவர்களும் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

stalin

Advertisment

2026 சட்டமன்றத் தேர்த-ல் இப்பொழுது நடந்த பாராளுமன்றத் தேர்தல் போல உள்ளடி வேலைகள் நடந்தால் அது தி.மு.க.வின் வெற்றியை கடுமையாகப் பாதிக்கும் என்பதால் தேர்தல் முடிவு வந்த உடனேயே அமைச்சரவை மாற்றம் இருக்கும். தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஏற்கெனவே உளவுத்துறை அளித்துள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த மாற்றங்கள் இருக்கும். அதற்குப்பிறகு மாவட்டச் செயலாளர்களையும் மாற்ற முதல்வர் மு.க.ஸ்டா-ன் திட்டமிட்டுள்ளார்.

சபரீசன் தலைமையிலான ‘பென்’ அமைப்பு தமிழகம் முழுவதும் தி.மு.க.வின் செயல்பாடுகள் குறித்து சில புள்ளி விவரங்களை சேகரித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக 54 சதவிகிதம் வாக்குகள் பெறும் தி.மு.க. கூட்டணி. அதிலிருந்து சுமார் 20 சதவிகிதம் குறைந்து 6 பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்குகளைப் பெறுகிறது. அவை தருமபுரி 35 சதவிகிதம், வேலூர் 37 சதவிகிதம், கோவை 38 சதவிகிதம், திருப்பூர் 38 சதவிகிதம், திருநெல்வே- 38.5 சதவிகிதம், பெரியகுளம் 39 சதவிகிதம், தென்காசி உட்பட சில தொகுதிகளில் 40 சதவிகிதம் என வாக்குகள் பற்றிய அந்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மத்திய சென்னை, திருச்சி, தஞ்சை ஆகிய மூன்று தொகுதிகளில் 54 சதவிகிதம் வாக்குகளை அதிகபட்சமாக தி.மு.க. பெறுகிறது. திண்டுக்கல், நாகப்பட்டினம் தொகுதிகளில் 53 சதவிகிதம், பெரம்பலூரில் 52 சதவிகிதம் என இத்தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி உச்சபட்ச வாக்குவீதம் பெறுகிறது.

Advertisment

வேலூர் தொகுதியில் தி.மு.க.வின் மோசமான செயல்பாடுகளுக்கு காரணமான துரைமுருகன், காந்தி ஆகியோருக்கு எதிராக நிறைய புகார்கள் வந்துள்ளன. அதேபோல், திருநெல்வேலி, திருப்பூர், தருமபுரி, தென்காசி, பெரியகுளம், கோவை ஆகிய தொகுதிகளில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு எதிராகப் பெரிய அளவில் புகார்கள் எதிரொலித்துள்ளன. அமைச்சர் மதிவேந்தனுக்கு எதிராகவும் நிறையப் புகார்கள் வந்துள்ளன. பல சீனியர் அமைச்சர்களும் புகார்களிலிருந்து தப்பவில்லை. இதையெல்லாம் வைத்து முதல்வர் ஸ்டாலின் சாட்டையைச் சுழற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அமைச்சர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் காந்தி ஒரு நீண்ட விளக்கத்தை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துக் கொடுத்திருக்கிறார்.

ஜூன் நான்காம் தேதி மத்தியில் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றத்தைப் பொறுத்தே தமிழக அரசியல் தீர்மானிக்கப்படும். மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தும் தி.மு.க.வின் செயல்பாடுகள் நிறுத்தப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அ.தி.மு.க. மீதான தாக்குதல் அதிகப்படுத்தப்படும். ஆனாலும், தி.மு.க.வை வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வலிமையாக தயார்படுத்த அமைச்சரவை மாற்றங்களும், மாவட்டச் செயலாளர்கள் மாற்றங்களும் நடக்கும். இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற யோசனையை தி.மு.க. தலைமை பரிசீலித்து வருகிறது.

அமைச்சரவையில் புது முகங்களாக இடம்பெறப் போகிறவர்கள் நல்ல கருத்தாழமும், திராவிடச் சிந்தனைகள் மிக்க தலைவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தமிழக மக்கள் மத்தியில் சென்று தி.மு.க.வுக்கு ஆதரவான நிலையை உருவாக்குவார்கள். அப்படிப்பட்டவர்களை அமைச்சர்களாகவும், அப்படி இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் தரவும் முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார் என்கிறார்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

இறுதிச் சுற்று!

final round