"ஹலோ தலைவரே, ராஜ்யசபா தேர்தலை எதிர் கொள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விறுவிறுப்பாகத் தயாராகிவருகிறது.''”

"ஆமாம்பா, தி.மு.க. முதலில் தனது ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்திருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தில் ஜூலை மாதம் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல், ஜூன் 19ஆம் தேதி நடை பெறுகிறது. இதற்கான அறிவிப் பை தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. 3 இடங்களுக்குப் போட்டி யிடுகிறது. அக்கட்சியின் சார்பில் வழக்கறிஞர் வில்சன் மீண்டும் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவரோடு சேலம் எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகி யோரும் அறிவிக் கப்பட்டிருக்கிறார் கள். தி.மு.க. ஆதரவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் ராஜ்யசபா செல்லவிருக்கிறார். இவர் கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.இதேபோல் அ.தி.மு.க. சார்பிலும் 2 பேர் தேர்வாக முடியும். அந்தவகையில் நடிகை விந்தியாவை ராஜ்யசபாவுக்கு அனுப்பும் முடிவில் இருக்கும் எடப்பாடி, மற்றொரு நபராக மாஜி மந்திரிகள் ஜெயக்குமார், செம்மலை, கோகுல இந்திரா இந்த மூவரில் ஒருவரை டிக் அடிக்கும் திட்டத்திலிருக்கிறாராம். இந்த நிலையில், அ.தி.மு.க.விடமிருந்து ராஜ்யசபா சீட்டை வாங்க பா.ம.க. அன்புமணி யும், தே.மு.தி.க. பிரேமலதாவும் முண்டியடித்து வருகின்றனர். அன்புமணிக்கும் சீட் இல்லை என்று அதிரடியாகவே எடப்பாடி கைவிரித்துவிட்டாராம். இதனால் எரிச்சலிலிருக்கும் பா.ம.க. தரப்பு, தேர்தல் நேரத்து ஆதரவைச் சுட்டிக்காட்டி, எடப் பாடியை நெருக்கிவருகிறதாம்.''”

ss

"தி.மு.க.வின் ராஜ்யசபா வேட்பாளர்கள் குறித்து பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகிறதே?''”

"அமைச்சர் பொன்முடியின் நாக்குத் தடிப்பால், அவரது அமைச்சர் பதவியை பறித் தார் ஸ்டாலின். இதனால் அவரது உடையார் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க.வினர் சங்கடப்படக் கூடாது என்பதற்காக, அதே சமூகத்தைச் சேர்ந்த சிவலிங்கத்திற்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கி யிருக்கிறாராம் ஸ்டாலின். இவர் மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் தீவிர ஆதரவாளர் என்பதால், அவர் தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். வழக்கறிஞர் வில்சனைப் பொறுத்தவரை, தி.மு.க. அரசுக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் சாதுர்யமாக நடத்தி, வெற்றிகரமான தீர்ப்புகளைப் பெற்றுத் தந்ததால், அவருக்கு பரிசாகவே மீண்டும் சீட் தரப்பட்டிருக்கிறது. அதேசமயம், சல்மாவுக்கு ராஜ்யசபா கொடுத்ததுதான் சீனியர் தி.மு.க.வினர் மத்தியில் அதிருப்திகளையும் விமர்சனங்களை யும் ஏற்படுத்திவருகிறது.’தென் மாவட்டங் களில் தி.மு.க.வுக்கு ராஜ்யசபா எம்.பி.க்கள் யாருமே இல்லை. சல்மாவுக்குப் பதிலாக, கட்சி யின் சீனியர்களில் ஒருவரான ஆவுடையப்பன் அல்லது மதுரை வேலுச்சாமி ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பைத் தந்திருக்கலாம். ஒருவேளை முஸ்லீம் சமூகத்தினருக்கு தருவதாக இருந்தால், கட்சிக்கு தீவிரமாக உழைத்த சீனியர் முஸ்லீம் ஒருவருக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்க லாம். தி.மு.க.வுக்காக சல்மா என்ன உழைப்பைத் தந்திருக்கிறார்? அவர் அழுத்தமாக வாதிடக் கூடிய பேச்சாளரும் இல்லை. கனிமொழியைக் கடுப்பேற்ற சல்மாவுக்கு வாய்ப்பைத் தந்திருக் கிறார்கள்’என்ற ரீதியிலான விமர்சனத்தை அவர்கள் வைக்கிறார்கள்.''”

Advertisment

ff

"பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற வரலாற்றுப் பிழையை அமைச்சர் அன்பில் மகேஷ் தீர்த்து வைத்திருக்கிறாரே?''”

"தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் பயிற்சி வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டப்பொம்மனுக்கு, எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது என்று எட்டயபுர சமஸ்தானத் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், எட்டயபுர சமஸ்தானத்தின் 42ஆவது ராஜா, சந்திரசைதன்யா, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷை நேரில் சந் தித்து, இதுகுறித்து உரிய தரவுகளோடு விளக்கி, பாடப் புத்தகத்தில் உள்ள வரலாற்றுப் பிழையை நீக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளுடன் விவாதித்து, அந்தப் பாடத்தை உடனடியாகத் திருத்தச் செய்திருக்கிறார் அமைச்சர். சமீபகால மாக, பள்ளிக் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை உடனுக்குடன் கவனித்து தீர்வு காண்பதால், ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகிய இருவரின் குட்புக்கிலும் அன்பில்மகேஷின் க்ராப் உயர்ந்துவருகிறது என்கிறார்கள்.''”

Advertisment

"இந்த நேரத்தில் எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ். வரிந்துகட்டுகிறாரே?''”

"ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டி ருக்கும் நிலையில், எடப்பாடிக்கு எதிராகத் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் ஓ.பி.எஸ். அதாவது, கடந்தமுறை ராஜ்யசபா தேர்தலின் போது அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும் இருந்தனர். அதனால், அப்போது அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு சின்னத்தை ஒதுக் கும் பி-பார்மில் இருவரும் கையெழுத்திட்ட னர். ஆனால், அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி. எஸ். நீக்கப்பட்ட பிறகு, இப்போது தான் ராஜ்யசபா தேர்தல் வருகிறது. ஏற்கனவே இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவை யில் இருக்கின்றன. சின்னம் தொடர் பான விசயத்தில் இதுவரை இறுதித் தீர்ப்பு வரவில்லை. ஈரோடு இடைத் தேர்தலின்போது அந்த ஒரு தேர்தலுக் காக மட்டும் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி, இந்தமுறை பி-பார்மில் எடப்பாடி மட்டும் கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது. சின்னம் தொடர்பாக இறுதித் தீர்ப்பு வராததால், முந்தைய நிலையே (பி-பார்மில் ஓ.பி.எஸ்.ஸும் இ.பி.எஸ்.ஸும் கையெழுத்திடுவது) தொடர உத்தரவிட வேண்டும் என்று, அவர் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கத் தயாராகி வருகிறாராம். இதையறிந்த எடப்பாடி, இதற்கு எதிர்மனு கொடுக்கத் தயாராகிவருகிறாராம். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதால் சின்னம் தொடர்பான விவகாரத்தில் தங்களுக்கு எதிராக ஆணையம் முடிவெடுக்காது என்று நம்புகிறாராம் எடப்பாடி.''”

rr

"பா.ஜ.க. முன்னாள் மாநில நிர்வாகி முதல்வர் வேட்பாளராக மாறுவார் என்று அவர் தரப்பு சொல்கிறதே?''”

"பா.ஜ.க.வில் தனக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்ததால், தான் பதவி விலக ஒத்துக்கொண்டாராம் அந்த நிர்வாகி. அதன் பின்னர்தான் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். கட்சிப் பதவியை விட்டுக்கொடுத்த தனக்கு, பா.ஜ.க. அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பதவி ஒன்றைத் தரும் என்று அந்த நிர்வாகி எதிர்பார்த் தாராம். ஆனால், பதவியை அவர் விட்டுக்கொடுத்த பிறகு அவரைக் கட்சியின் தேசியத் தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை. போதாக்குறைக்கு, அவரது வசூல் விவகாரங்களைத் தெரிந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவே, 2 ஆயிரம் கோடித் திருடன் என்றுதான் அவரை பட்டப்பெயரில் அழைத்து, அவமானப்படுத்துகிறாராம். அதேபோல் நயினாரும் அவரை வெகுவாக ஓரம்கட்டி, முக்கியத்துவம் இல்லாத நபராக அவரை ஆக்கிவிட்டாராம். இதனால் மனம் நொந்துபோன அந்த முன்னாள் நிர்வாகி, தனிக்கட்சியை விரைவில் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறாராம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரிக்கத் திட்டமிட்டிருக்கும் அவர், 2031 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக இருப்பார் என்று, அவரது அடிப்பொடிகள் இப்போதே அலப்பறை செய்துவருகிறார்கள். அவரும் முதல்வர் கனவில் ஆழ்ந்திருக்கிறாராம்.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். திருவள்ளுர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜனை நீக்கிவிட்டு, அவர் பொறுப்புக்கு ரமேஷ் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு நியமித்தார் கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகன். அந்த கோவிந்தராஜனின் நீக்கத்துக்கு சொல்லப்பட்ட காரணங்களும் குற்றச்சாட்டுகளும், இப்போது இந்த ரமேஷ் மீது இருமடங்கு வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க.வினருடன் தொழில் ரீதியிலான நெருக்கம், காண்ட்ராக்ட்டுகளில் தி.மு.க.வினரிடமும் கமிஷன் என்றெல்லாம் அவர் அத்துமீறுகிறாராம். அதேபோல் கிராம சாலைகள் திட்டத்தில்,கலெக்டர் பெயரைச் சொல்லி, அதிகாரிகள் 11 சதவீதம் கமிஷன் வாங்கிவரும் நிலையில், ரமேஷும் தனியாக 8 சதவீத கமிஷன் கேட்கிறாராம். இப்படியிருந் தால் தேர்தல் சமயத்தில் காண்ட்ராக்டர்கள் எப்படி ஒத்துழைப்பார்கள்? என்கிற புலம்பல் தி.மு.க. தரப்பில் எதிரொலித்தபடி இருக்கிறது.''