"ஹலோ தலைவரே, அண்மையில் ரெய்டுக்கு ஆளான சேலம் இளங்கோவன் விவகாரங்களைக் கிளறிய விசாரணை டீம், தலைசுத்திப் போயிருக்கு.''”

"அவரைத் துருவினால், இன் னொருத்தரின் தங்கச் சுரங்கத்தோட கதவு திறந்திருக்குமே?''”

rr"சரியாச் சொன்னீங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் செல்வாக்கான பிரமுகரா வலம் வந்த சேலம் இளங்கோவன் அண்மையில் ரெய்டுக்கு ஆளானார். அதைத் தொடர்ந்து அவரது விவகாரங்களை அதிகாரிகள் கிளறியபோது, முழுக்க முழுக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பற்றிய விவகாரங்களா கிடைக்குதாம். அதன் ஒரு பகுதியைத் துருவி எடுத்த எவிடென்சுகளே, அவர்களை வியர்க்க வச்சிருக்கு. வடமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பெருமளவு முதலீடு இருப்பதற்கான ஆதாரங்களும் அவர்களுக்குக் கிடைச்சிருக்கு. குறிப்பா ஒரிசாவில் சில நிலக்கரி சுரங்கங்களையும் வாங்கியிருக்கிறாராம். அதையெல்லாம் ’தரணி எர்த் மூவர்ஸ்’ நிறுவனம் மூலமா, அவர் பர்ச்சேஸ் பண்ணியதாம். இது தவிர அவரது மனைவி வழி சொந்தங்கள் மூலமும் முதலீடுகள் செய்யப் பட்டிருக்கு. எடப்பாடியின் ஒரு கொழுந்தியாள், குமாரபாளையத்தில் உள்ள அவரது ஜவ்வரிசித் தொழிற்சாலையை நிர்வகிக்கிறாராம்.''”

"எடப்பாடியின் அத்தனை வரவு செலவையும் ஒரு கொங்கு மண்டல ஆடிட்டர் கவனிக்கிறாராமே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, நாச்சிமுத்துங்கிற அந்த ஆடிட்டர்தான் எடப்பாடியின் ஒட்டுமொத்த முதலீடுகளை யும் கவனிக்கிறார். அவரைக் கேட்காமல் ஒத்தைப் பைசாவைக் கூட எடப் பாடி எவருக்கும் கொடுக்க மாட்டாராம். அண்மையில் கிட்னி பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த நடிகர் குண்டு கல்யாணம், எடப்பாடி யிடம் உதவி கேட்டபோது, ஏதுப்பா காசுன்னு கை விரித்துவிட்டாராம். அதே நேரம் அந்த ஆடிட்டரின் மகனான கண்ணனுக்கு மட்டும், மாதம் இருபது லட்ச ரூபாய் அளவுக்கு சம்பளமாம். எடப்பாடியின் மனைவி வழி குடும்ப உறுப்பினர்கள் 4 பேர், எடப் பாடியின் சொத்துகளை நிர்வாகம் செய்கிறார்களாம். விசாரணை டீம் போட்டிருக்கும் கணக்குப்படி எடப்பாடியின் சொத்து மதிப்பு, ஏறத்தாழ ஒரு லட்சம் கோடியத் தாண்டுதாம். இவ்வளவும் இளங்கோவன் ரூட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்புதான்.''”

"தமிழக எம்.பி.க்கள் பற்றிய தகவலால் நாடாளுமன்ற சபாநாயகர் ஷாக் ஆகியிருக்காரே?''

rrr

Advertisment

"ஆமாங்க தலைவரே, எம்.பி.க்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டாலோ, அல்லது அவர்கள் கைது செய்யப்பட்டாலோ, அந்த தகவலை உடனடியாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு தெரிவிக்க வேண்டும் என்பது மரபு. அந்த வகையில், சமீபத்தில் தி.மு.க எம்.பி.யான கடலூர் ரமேஷ், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தகவலும், பா.ஜ.க நிர்வாகியை தாக்கிய விவகாரத்தில் நெல்லை தி.மு.க. எம்.பி. ஞான திரவியத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட தகவலும் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கு. அதைப் பார்த்த அவர், இதுவரை தமிழக எம்.பி.க் கள் இப்படிப்பட்ட வழக்குகளில் சிக்கிய தில்லையே, குற்றப்பின்னணியை பார்க்கா மல் வேட்பாளர்களைக் கட்சிகள் தேர்ந் தெடுப்பதால்தான், இப்படி ஆகுதுன்னு சொன்னாராம் அதிர்ச்சி விலகாமல்.''”

rr

"காலியாக இருக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பதவிக்கு இப்பவே முட்டல் மோதல்கள் ஆரம்பிச்சிடிச்சே?''”

"ஆமாங்க தலைவரே, இங்கே துணை வேந்தரை விரைவில் நியமிப்பதில் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்வம் காட்டி வருகிறார். அந்தப் பதவிக்கு தாங்கள் விரும்பும் நபரை கொண்டு வர பெரியாரிஸ்டுகள் ஒரு புறமும், கம்யூனிஸ்டுகள் ஒரு புறமும் பகீரத முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகளும் தங்களின் ஆதரவாளரை துணைவேந்தர் பதவியில் அமரவைத்து விட வேண்டும்கிற எண்ணத்தில் டெல்லி வரை லாபி செய்யறாங்க. இந்த சூழல்ல, நம்ம ஆளை நியமித்து சர்ச்சைகளை ஏற்படுத்தறதை விட, பெரியாரிஸ்டுகளில் ஒருவரையே தேர்வு செய்து, அவங்க தரப்பு பாராட்டையும் பெற்றுவிட லாமே என்றும் தமிழக ஆளுநரிடம் ஆர்.எஸ்.எஸ். தரப்பு விவாதித்ததாகவும் தகவல் வருது.''”

"அரசு கல்லூரி முதல்வர்களின் இடமாற்றத் தில், ஓய்வுபெற்ற அதிகாரிகளின் செல்வாக்கும் கொடிகட்டிப் பறக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளின் முதல்வர் கள் பலரும் அண்மையில் இடமாற்றம் செய்யப் பட்டிருக்காங்க. அந்த பட்டியலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முதல்வர் திருச்செல்வம் பெயரும் இருந்தது. தமிழக அரசின் உயர்கல்வித்துறை செய லாளராக இருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கணேசனும் திருச்செல்வமும் நண்பர் கள். இந்த மாற்றல் விவகாரத்தில் கணேசனின் உதவியை செல்வம் நாட, கணேசன் எடுத்த முயற்சியில், இடமாறுதல் பட்டியலில் இருந்த செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டு விட்டது. மன்னர் கல்லூரியின் ராஜா நான்தான் என குதூகலமாக இருக்கிறாராம் திருச்செல்வம்.''”

"இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வன்னிய சமூகத்தினரிடம் கூடுதல் பாராட்டைப் பெற்றிருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசில், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் பிரிவிற்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்திற்காக 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்தை முந்தைய எடப்பாடி அரசு நிறைவேற்றியது. இதை தி.மு.க அரசு வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துச்சு. அதனால் தி.மு.க.வின் சமூகநீதி கொள்கைக்கு, பாராட்டுகள் குவிந்தன. அதே நேரம், வட தமிழகத்தைத் தவிர மற்ற மாவட்டங் களில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை வழங்கும் அளவுக்கு அந்த சமூகத்தினர் இல்லை. அதனால், அவர்களுக்கான அந்த இடங்களை பிற்படுத்தப்பட் டோர் பிரிவில் உள்ள பிற சமூகங்களுக்கு வழங்க லாம் என்றும், அதேபோல, வட தமிழகத்தில் வன்னியர் தவிர்த்த எம்.பி.சி. சாதிகளுக்கு வழங்கப்பட்ட இடங்கள் பூர்த்தியாகாத பட்சத்தில், காலியாக உள்ள இடங்களை வன்னியர்கள் சமூகத்தைக் கொண்டு பூர்த்தி செய்யணும் என்றும், மண்டல வாரி இட ஒதுக்கீடு கொள்கைக்காக போராடிய வன்னியர் அமைப்புகள் தி.மு.க அரசுக்கு கோரிக்கை வச்சிது.''”

"ம்...''”

"எஸ்.சி. அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட 3.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில், இந்த முறை தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த வழிமுறைகளை நடை முறைப்படுத்துவதன் மூலம் எம்.பி.சி. பட்டியலில் உள்ள அனைத்து சாதியினரும் பயனடைவார்கள் என்றும், அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்கும் என்றும் தங்கள் கோரிக்கையில் அவர் கள் தெரிவிச்சாங்க. இது பற்றி தீவிரமாக ஆலோசனை செய்த ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, இப்போது அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. முதல்கட்டமாக உயர்கல்வித் துறையில் இந்த நடைமுறையைப் பயன்படுத்த அரசாணை பிறப்பித்துள்ளது. சமூகநீதியின் ஆழத்தைப் புரிந்து கொண்டு நடைமுறைப் படுத்த நடவடிக்கை எடுத் துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை வாழ்த்துகிறார்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை யாளர்கள்.''

"காரைக்கால் பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கே?”

"ஆமாங்க தலைவரே... புதுச்சேரி-காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி அண்மையில் கொடூரமாகக் கொல்லப்பட் டார். அந்தக் கொலை வழக் கில், சிலர் கைது செய்யப்பட்டி ருக்கிறார்கள். தனக்கு கொலை மிரட்டல் இருப்ப தையும் அந்த கொலை மிரட்டல் செய்த நபர், புதுவை காங்கிர ஸின் முன்னாள் அமைச்சர் என்றும், அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தான் கொலை யாவதற்கு முன்பாக, கடந்த 2019-லேயே போலீசில் புகார் கொடுத்திருக்கிறார் தேவமணி. ஆனால் போலீஸ் கண்டுகொள்ளாததால் நட வடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் அவர் கொல்லப்பட்டிருக் கிறார். அதனால், இதில், அரசியல் பின் னணி இருப்பதால், அந்தக் கொலை வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கணும்னு புதுவை முதல்வர் ரங்கசாமியை தைலா புரம் வலியுறுத்திக்கிட்டு இருக்குது.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஜெ’.காலத்தில் அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளராக இருந்த மகாலிங்கம், இப்ப சென்னை மந்தைவெளிப் பகுதியில் 10 "சி'க்கு மேல் செலவிட்டு, ஒரு பிரமாண்டமான பளிங்குக்கல் மாளிகையைக் கட்டி வரு கிறார்னு கட்சிக்காரர்கள் சொல்றாங்க. கட்சி நிதியாக முன்னாள் அமைச்சர்கள் கொடுத்த 100 கோடி ரூபாயை, எடப்பாடி சுருட்டிவிட்டதாக ஓ.பி.எஸ். தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மகா லிங்கத்தின் பளிங்கு மாளிகை பற்றி அ.தி.மு.க. சீனியர்களே முணுமுணுக்கறாங்க.''”