sssssssssssssஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இதுவரை 8 முறை தி.மு.க.வும், தலா மூன்றுமுறை அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்லில், தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு சுமார் 4 லட்சம் வாக்குகளைப் பெற்று, அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. வேட் பாளர் வைத்தியலிங்கத்தை வென்றார். ம.நீ.ம. வேட் பாளர் ஸ்ரீதர் 1.38 லட்சம் வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 84 ஆயிரம் வாக்குகளையும் பெற்றது குறிப் பிடத்தக்கது.

இந்நிலையில், நடப்பு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பாக சிட்டிங் எம்.பி. டி.ஆர். பாலுவே மீண்டும் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு பரிட்சயமானவர்.

மேலும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட் பட்ட ஆறு தொகுதிகளில், ஐந்தில் தி.மு.க.வும், ஒன்றில் காங்கிரஸும் வெற்றிபெற் றுள்ளன. எனவே தி.மு.க. கூட் டணியில், மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் மற்றும் டி.ஆர்.பாலுவின் ஆதரவாளரான தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோரின் களப் பணியால் டி.ஆர்.பாலு ரேசில் முந்துகிறார். அ.தி.மு.க. சார்பில் டாக்டர் பிரேம்குமார் களமிறங்கியுள்ளார். தொகுதிக்கு அப்பாற்பட்டவராக இருந் தாலும் பிரேம்குமாரின் அப்பா பூவை ஞானம் கட்சியில் பரிச்சயமானவர். மேலும், ரியல் எஸ்டேட்டில் கொடிகட்டிப் பறந்தவர் என்ப தால், பணப் பசையுடன் களம் காண்கிறார்.

ss

Advertisment

பா.ஜ.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு சீட்டு வழங்கப் பட்டுள்ளது.

ஜி.கே.வாசனின் ஆதர வாளரான வேணுகோபால் களம் காண்கிறார். ரெட்டியார் சமூகத்தை சார்ந்த இவர், கடந்த 2012 உள்ளாட்சி தேர்தலில், எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜாவின் ஆதரவில் கவுன்சில ரானவர். தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவில்தான் இவரது மனைவி மாமன்ற உறுப்பினராக தேர்வானார்.

தற்போது எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பாலுவின் வெற்றிக்காக முழுமூச்சாகக் களமிறங்கி யுள்ளார். எனவே வேணுகோபா லின் பிரச்சாரம் சற்று மந்த மாகவே காணப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக மருத்துவர் ரவிச் சந்திரன் களம் காண்கிறார். தாம்பரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி இன்னும் பெரிய அளவில் பிரச் சாரத்தை முன்னெடுக்க வில்லை.

அனல் பறக்கும் கோடை வெயிலை விட, நான்கு முனைப் போட்டியான தேர்தல் பிரச் சாரத்தில் அனல்பறக்கிறது. அ.தி. மு.க. தரப்பில் கோஷ்டி பூசல்கள் அதிகமிருப்பதால், சற்றே பின்ன டைவைச் சந்திக்க, தி.மு.க.வுக்கே மீண்டும் வெற்றிவாய்ப்பு பிரகாச மாகி வருகிறது.