தி.மு.க. மா.செக்களுக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், ஒரு சிலர் தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள படாத பாடுபட்டது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. தொண்டர்களை மதிக்காமல் ஏடாகூடமாக நடந்துகொண்ட ஒருசில மா.செ.க் களுக்கு, "பதவிக்கு லாயக்கு இல்லாத நீங்கள், எங்களுக்கு வேண்டாம்'’என்று திகிலூட்டி, பாடம் கற்பித்ததையும் நம்மால் பார்க்க முடிந்தது.

dmk

தென்காசி தெற்கு மாவட்டத்தின் தி.மு.க மா.செ.வான சிவபத்மநாபன் மீது சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் களின்போது, சீட் கொடுத்தது தொடர்பான புகார்கள் அப் போதே சுழன்றடித்தது. மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு பவர்ஃபுல் சீட்டுகளைக் கொடுத்ததாக கட்சித் தொண் டர்கள் குமுறினர். குறிப்பாக சுரண்டை நகர சேர்மனாக ஜெயபாலனைக் கொண்டு வரவேண்டும் என்று கனிமொழி எம்.பி. பரிந்துரைத்தும், அதை சிவபத்மநாபன் புறக்கணித்ததால் அவர் மீது அறிவாலயம் வரை புகார் சென்றது. கட்சியின் சீனியர்களை அவர் புறக்கணித்ததாகவும் அவர்களின் புகார்கள் அறிவாலயத்திற் குப் பறந்திருக்கிறது. எனவே அவர் மா.செ. பதவியில் இருந்து மாற்றப்பட இருக்கிறார் என்று பரவலான பேச்சு அடிபட்டது.

எனவே மா.செ. பதவியைக் குறி வைத்து சிவபத்ம நாபனுக்குப் போட்டியாக, தென்காசி சேர்மன் சாதிர், சுரண்டை ஜெயபாலன் சரவணன், எக்ஸ் மா.செ. துரைராஜ், டாக்டர் மாரி முத்து ஆகியோர் களமிறங்கி களத்தை அதிரவைத்தனர். பொறுப்பு கைநழுவி விடுமோ என்று அவர் பதறிய நிலையில்... இறுதி யாக அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., கே.என்.நேரு ஆகியோரின் தலையீட்டால் மீண்டும் மா.செ.வாகியிருக்கிறார் சிவபத்மநாபன்.

Advertisment

இதேபோல் தென்காசி வடக்கு மா.செ.வாக இருந்த செல்லத்துரை. கட்சியின் சீனியர் தொண்டர்கள், நிர்வாகிகளை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, உள்ளாட்சித் தேர்தலில் தன்னுடைய சகோதரி சுப்பம்மாளை யூனியன் சேர்மானக்கிய தோடு, கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் தனக்கு வேண்டப்பட்டவர்களையே நியமித்தாராம். குறிப்பாக, தன் மருமகனையே அவர் ஒ.செ.வாக நியமித்தாராம். இதுபோன்ற பல்வேறு புகார்கள் அறிவாலயத்துக்குப் பறந்திருக்கிறது.

dd

Advertisment

எனவே மா.செ. செல்லத்துரை மாற்றப் படவிருக்கிறார் என்கிற பேச்சு கிளம்பியதைத் தொடர்ந்து, மா.செ.வுக்கான வேட்பு மனுவே தாக்கல் செய்யாத விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தென்காசி எம்.பி.யுமான தனுஷ்குமார், மா.செ.வாக நியமிக்கப்பட இருக்கிறார் என்கிற பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால் ஷாக்கான செல்லத்துரை, அறிவாலயத்தின் முன் தன் சகாக்களுடன் ஆர்ப்பாட் டம் செய்தார். இதனால் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. மா.செ. யார் என்பது அறிவிக்கப்படா மல் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது.

இதேபோல் தி.மு.க.வின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரான ஆவுடையப்பன், சபா நாயகராக இருந்தவர். சீனியர். கட்சித் தொண்டர்கள், கட்சி விஷயமாக அத்தனை எளிதில் அணுக முடியாதவராக இருந்தார். அவர் கட்சிக்காரர் களைக் கவனிப்பதில்லை என்கிற புகாரும் எழுந்தது. ஆனால் இதை அறிவாலயம் கவனிக்கவில்லை என்கிற அதிருப்தியும் தொண்டர்கள் மத்தியில் சுழன்றடித்தது.

இவரது மா.செ. பதவியைக் குறிவைத்து, யூனியன் சேர்மன் தங்க பாண்டியன், மாவட்ட து.செ.வான சித்திக், வி.எஸ். ஆர்.ஜெகதீஷ் போன்றவர்கள் வரிந்துகட்டினர். இவர் களுக்காக கட்சியின் முக்கியப் புள்ளிகள் சிலரும் பிரஷர் கொடுக்க, இதனால் பரிதவித் துப்போனார் ஆவுடையப் பன். இதனால் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள சென்னையிலேயே முகா மிட்ட அவர், கட்சியின் பவர் புள்ளிகளையும் அணுகினார்.

ஒரு வழியாக கட்சித் தலைவர் ஸ்டாலினே தலையிட்டு, "இரண்டு துணை. செ.க்கள், 7 ஒ.செ.க் கள், 6 ந.செ.க்கள், 4 யூனியன் சேர்மன்கள், பேரூர் தலைவர்கள் தொண்டர்கள் என்று ஒட்டுமொத்தமாக உங்களை எதிர்க்கிறார்கள், அதிருப்தியில் உள்ளனர். எனவே இனியாவது அனை வரையும் அனுசரித்துச் செல்லுங்கள்'’என்று எச்ச ரித்திருக்கிறார். இதன்பிறகே ஆவுடையப்பனின் மா.செ. பதவி தப்பியிருக்கிறதாம்.

நெல்லை மத்திய மாநகர மா.செ. பொறுப்பிலிருக்கும் எம்.எல்.ஏ.வான அப்துல்வகாப், மாற்றுக் கட்சியிலிருந்து வந்த வர் என்றாலும், பொறுப்பிற்கு வந்தவுடனேயே கட்சியின் சீனியர் நிர்வாகிகள், தொண்டர் களிடம் அனுசரணையில்லா மல் நடந்து கொண்டார். மாவட்டத்தின் முக்கியமான சீனியர்களை எல்லாம் நீக்கி விட்டு, தனக்கு வேண்டப் பட்டவர்களையும், மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களை யுமே பதவிகள் கொடுத்து அர வணைத்தார். இதையே உள் ளாட்சித் தேர்தலிலும் அவர் கடைப்பிடித்ததால், கட்சியின் சீனியர் தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி அதிகரித்தது. இதனால் அதிருப்தியில் இருந்த எக்ஸ் எம்.எல்.ஏ.க்களான மாலை ராஜா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன், டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட் டோர் தலைமையில் மா.செ. அப்துல்வகாப்பிற்கு எதிராகப் பேரணியாக அவர்கள் திரண்டிருக்கிறார்கள். இது குறித்த புகார்கள் கட்சித் தலைமை வரை போய் பரபரப்பாக, அறிவாலயத்தில் அதிருப்தியாளர்களிடம் பஞ்சாயத்தும் நடந்திருக்கிறதாம்.

தொடர்ந்து, கொரோ னா காலத்தில் நிறுத்தி வைக் கப்பட்ட பழைய டெண்டர் பணிகள், தற்போது மேற் கொள்ளப்பட்டதில் எம்.எல்.ஏ. அப்துல்வகாப் கமிசன் கேட்ட விவகாரமும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதனாலும் இந்தமுறை அவர் மாற்றப்பட்டலாம் என்பதில் கட்சியினர் நம்பிக்கையோடு இருந்தனர். அதேபோல் கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் முதல் ஆ.ராசா வரை மா.செ. மாற்றப்பட வேண்டும் என்ற முடிவில் இருந்தனர். கடைசியில், கே.கே.எஸ்.எஸ்.ஆர். மற்றும் கே.என்.நேரு போன்றவர்கள் கருணை காட்ட, அப்துல் வகாப்பின் மா.செ. பதவி தப்பித்துள்ளதாம்.

நெல்லை, தென்காசி மா.செ.க்கள் மாற்றப்பட லாம் என்ற அசைக்கமுடி யாத சூழலில், இறுதியாக தலைவர் தலையிட்டதை யடுத்தே எச்சரிக்கையுடன் இம்முறை அவர்களின் பதவி கள் பிழைத்துள்ளன என்கிறார் கள் கட்சியின் சீனியர்கள்.