சேலம் மாநக ராட்சியில் டெண்டர் விவகாரம் தொடர் பாக கேள்வியெழுப் பிய அ.தி.மு.க. கவுன்சிலரை, தி.மு.க. பெண் கவுன்சிலர் பாய்ந்து பாய்ந்து தாக்கிய சம்பவத்தால் மாமன்றக் கூட்ட அரங்கமே ரசாபாச மாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநக ராட்சியில் மாமன்றக் கூட்டம், மே 29-ஆம் தேதி நடந்தது. கூட்டம் தொடங் கிய ஒரு மணி நேரத்தில், அ.தி.மு.க. கவுன்சிலரும், எதிர்க்கட்சித் தலைவருமான யாதவமூர்த்தி, "சாலை சீரமைப்புப் பணிகளுக்காக 30 கோடி ரூபாயில் டெண்டர் கோரப் பட்டிருந்தது. அமைச்சரின் ஆதரவாளரான காமராஜுக்கு டெண்டர் ஒதுக்குவதற்கு ஏதுவாக டெண்டரை ரத்துசெய்தது ஏன்?' என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய தி.மு.க. கவுன்சிலர்கள், "அமைச்சரின் பெயரை இந்தக் கூட்டத்தில் ஏன் இழுக்கிறீர்கள்?' என கேள்விகளால் புரட்டியெடுத்தனர். 34-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் "ஈசன்' இளங்கோ, திடீரென்று தன் மேஜைமீதிருந்த மிக்சர் பொட்ட லத்தை எடுத்து யாதவமூர்த்திமீது எறிந்தார். இதன்பிறகு மாமன்றக் கூட்ட அரங்கமே பெரும் களே பரமாக மாறிப்போனது. பதிலுக்கு யாதவமூர்த்தியும் ஜிலேபி பாக்கெட்டைத் தூக்கி வீச, அருகிலிருந்த தி.மு.க. கவுன்சிலர் பச்சியம்மாள்மீது விழுந்தது.
ஒரே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டிருந்த நிலையில், பின்வரிசையிலிருந்து ஓடிவந்த 45-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் சுகாசினி, யாதவமூர்த்தி அருகில் சென்று கையை நீட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு யாதவமூர்த்தி "கை நீட்டிப் பேசாத... உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? மேயர் எதுக்கு இருக்கிறார்... அவர் பேசட்டும். நீ போய் உன் இடத்துல உட்காரு,' என ஒருமையில் பேச, சுகாசினியோ விடாமல் வாக்குவாதம் செய்தார்.
அப்போது யாதவமூர்த்தி அவருடைய கையைத் தட்டிவிட்டார். இதனால் ஆக்ரோஷ மடைந்த சுகாசினி, திடீரென்று பாய்ந்துசென்று யாதவமூர்த்தியின் கன்னத்தில் பளாரென அறைந்தார். அவரை மற்ற கவுன்சிலர்கள் தடுத்தபோதும், திமிறிச்சென்று மீண்டும் மீண்டும் யாதவமூர்த்தியைத் தாக்கினார். ரவுடிபோல வளையலைக் கழற்றி கையில்வைத்துக்கொண்டு தாக்க, இதை சற்றும் எதிர்பாராத யாதவமூர்த்தி, நிலைகுலைந்து கீழேசரிய, அவரை மற்ற கவுன்சிலர்கள் தாங்கிப் பிடித்துக்கொண்டனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், மாமன்றக் கூட்ட அரங்கத்திற்குள்ளே புகுந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். பதினைந்து நிமிடம் நீடித்த இந்த சம்பவத்தால், அரங்கமே பதற்றமாகக் காணப்பட்டது.
இந்த பரபரப்புக்கிடையே, கூட்டம் இத்துடன் முடிந்துபோனதாக அறிவித்துவிட்டு மேயர் ராமச்சந்திரன் பாதியிலேயே வெளியேறி னார். சம்பவம் குறித்து அறிந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியம், மாஜி மா.செ. வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே தி.மு.க. கவுன் சிலர்களைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால், தாங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க. கவுன்சிலர்கள் சுகாசினி, பச்சியம்மாள், அ.தி.மு.க. கவுன்சிலர் கள் யாதவமூர்த்தி, சசிகலா ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று படுத்துக்கொண்டனர். இரு தரப்பினர்மீதும் போலீசார், பெண் கள்மீது தாக்குதல் உள்ளிட்ட பிணையில் வெளிவரமுடியாத சில பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க. கவுன்சிலர்களின் பாய்ச்சலின் பின்னணி விவகாரம் குறித்து யாதவமூர்த்தி, அ.தி.மு.க. கொறடா கே.சி.செல்வராஜ் ஆகி யோரிடம் விசாரித்தபோது, "சேலம் மாநகராட்சியில் பல்வேறு வார்டுகளில் சாலை சீரமைப்புப் பணிகள் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, ஆன்லைன் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இதில், ஒப்பந்ததாரரும், எங்கள் கட்சியின் ஓமலூர் எம்.எல்.ஏ.வுமான மணியின் தந்தை ராமசாமி குறைந்த விலைப்புள்ளி குறிப்பிட்டு டெண்டர் கோரியிருந்தார். விதி களின்படி அவருக்குதான் ஒப்பந்தம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதிக விலைப்புள்ளி குறிப் பிட்டிருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந் திரனின் நெருங்கிய ஆதரவாளரான காமராஜுக்கு டெண்டர் வழங்குவதற்காக, ஒப்பந்ததாரர் ராம சாமி டெக்னிக்கல் பிரிவில் சரியான விவரங்களைக் குறிப்பிடவில்லை எனக்கூறி, கடைசி நேரத்தில் டெண்டர் அறிவிப்பையே ரத்து செய்துவிட்டனர்.
இதையெதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்த தாரர் ராமசாமி தடையுத்தரவைப் பெற்றுவிட்டார். இனி, சேலம் மாநகராட்சியில் புதிய டெண்டர் விடமுடியாது. அரசு ஒதுக்கிய 30 கோடிக்கு மாநக ராட்சி நிர்வாகம் வீணாக வட்டி செலுத்தவேண்டி யதுதான். இதைக் கண்டித்துதான் மாமன்றக் கூட்டத்தில் கேள்வியெழுப்பினோம். இத்தனைக்கும் மந்திரியின் பெயரைக்கூட குறிப்பிடவில்லை. அமைச் சரின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்ற நோக் கத்துடன் தி.மு.க. கவுன்சிலர்கள் திட்டமிட்டே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்கள்.
“கடந்த மூன்றரை ஆண்டுகளில் சேலம் மாநகராட்சி சார்பில், முன்னாள் முதல்வர் எடப் பாடி பழனிசாமியின் நெருங்கிய ஆதரவாளரான கரட்டூர் மணி தரப்புக்குச் சொந்தமான பீனிக்ஸ் நிறுவனத்திற்குதான் 536 கோடி ரூபாய் மதிப்பிலான பணி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாதவமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு, இப்படி ஆதாரப்பூர்வமாக ஆளுங் கட்சியால் பதிலடி கொடுத்திருக்க முடியும். அதை விட்டுவிட்டு அமைச்சரின் கவனத்தை ஈர்ப்பதற்காக சிலர் மரபுகளை மீறி கோதாவில் ஈடுபட்டுள்ளனர்'' என்கிறார்கள் தி.மு.க. கவுன்சிலர்கள்.
"இரண்டு முறை "பெஸ்ட் பெர்பார்மன்ஸ்' விருதுபெற்ற சேலம் மாநகராட்சிக்கு இந்த அடிதடி யெல்லாம் அழகல்ல' என்கிறார்கள் கவுன்சிலர்கள்.