மூன்றாண்டு களுக்கு முன்பு 2019, ஆகஸ்டு 5-ஆம் தேதி,ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி, அதன் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனி யன் பிரேதசங் களாக பிரிக்கப் பட்டது.
மக்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்துவிடக் கூடாது என்பதற்காக, அங்கே ஏற்கெனவே இருந்த பல்லாயிரம் ராணுவ வீரர்கள் இன்னும் அதிகரிக்கப்பட்டனர். காஷ்மீர் தலைவர்கள் என அறியப்படக்கூடிய அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இணைய வசதி துண்டிக்கப்பட்டது. ஊடகங்கள் முடக்கப்பட்டன. முழு மாநிலமும் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டது.
காஷ்மீரை நினைத்தபடியெல்லாம் கையாண்ட பா.ஜ.க. அரசு, அதன்மூலம் என்ன சாதித்திருக்கிறது?
அங்கே அமைதி நிலைநிறுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை. ஆட்சி கலைக்கப்பட்டு வருடங் கள் கடந்தும் இன்னும் தேர்தல் நடத்தப்பட வில்லை. தீவிரவாதிகளை சுட்டுவீழ்த்துவதாக இந்திய ராணுவம் அறிவித்துக்கொண்டே இருக் கிறது. பண்டிட்டுகள் பாதுகாப்பாக இருக்கமுடிய வில்லை. சிறப்பு அந்தஸ்து பறிப்புக்குப்பின் பொருளாதார நிலையிலும்கூட ஜம்மு- காஷ்மீர் பின்தங்கிவிட்டது.
சிறப்பு அந்தஸ்தை நீக்கி, ஜம்மு-காஷ்மீரை மூன்றாகப் பிரித்தபோது மோடி அரசு, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு மேம்படும், தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்படும், இந்தியாவைப் போல் அதன் பொருளாதாரம் வளர்ச்சியடையும். மக்கள் செழிப் படைவார்கள். காஷ்மீருக்குத் திரும்பமுடியாமல் தவிக்கும் பண்டிட் டுகள் தங்கள் பூர் விக இடங்களுக்குத் திரும்பமுடியும், வம்சாவழி அர சியல் முடிவுக்கு வரும் என ஏகப்பட்ட உறுதிமொழி களை அள்ளிவிட்டது.
அதில் ஒன்றாவது நிறைவேறியிருக்கிறது என உறுதியுடன் சொல்லமுடியாது.
தவிரவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதி கள் பா.ஜ.க.வின் வசதிக்கேற்ப, இந்துக்களையும் முஸ்லிம்களையும் மேலும் பிரிப்பதாகவும் ஏற் கெனவே உள்ள இடைவெளியை அதிகரிப்பதாக வும் அமைந்துள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது. ஆக, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் பா.ஜ.க. அரசால் எதுவொன்றையும் சாதிக்கமுடிய வில்லை. ஏற்கெனவே இந்தியாவிடமிருந்து விலகிய மனநிலையில் காணப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்த நடவடிக்கைகளுக்குப் பின் மேலும் விலகிய மனநிலையுடனே காணப்படுகின்றனர்.
மாநில அந்தஸ்தை நீக்கும்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உரிய காலகட்டத்துக்குப் பின் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று கூறினார். மாநில அந்தஸ்தோடு, சிறப்பு அந்தஸ்தையும் ஜம்மு- காஷ்மீருக்கு திரும்ப அளிப்பதுதான், மக்களின் மனநிலையை மாற்றும் மருந்தாகவும், பா.ஜ.க. அரசு செய்த பிழைக்கான பரிகாரமாகவும் அமையும்.