ருவிகளின் நகரமான குற்றாலத்திலுள்ள பழைய குற்றால அருவி, வனத்துறையின் ஆக்கிரமிப்பால் பற்றியெரியும் பிரச்சினையாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

ff

குற்றாலத்திலிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில், ஆயிரப்பேரி ஊராட்சியின் பராமரிப்பிலிருக் கிறது பழைய குற்றால அருவி. காமராஜரின் ஆட்சிக்காலத் தில் செம்மைபடுத்தப்பட்ட பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு இரவும் பகலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து போவதால் அப்பகுதி கடைவாசிகளுக்கு வருமானத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தது. பழைய குற்றாலம் செல்கிற அருவிப்பாதை வனத்துறையிடமும், விவசாய நீர்ப்பங்கீடு மேலாண்மை மற்றும் அருவிப்பகுதியின் கடைகள், பயணிகள் பாதுகாப்பு விடுதிகள் நீர் வளத்துறை யிடமும், அருவிப் பகுதியின் கார் பார்க்கிங், காப்பகம், ஆயிரப்பேரி ஊராட்சியின் பராமரிப்பு என மூன்று துறைகளின் பங்களிப்பும் இதிலிருந்தது. வருடந்தோறும் கார் பார்க்கிங் ஏலம் மூலம் கிடைக்கும் 56-62 லட்சம் வருமானம், ஆயிரப்பேரி ஊராட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன் படுகிறது. மேலும் அருவியைக் கொண்டு வியாபார ரீதியாகப் பலனடைகிற பெரும்பாலான ஆயிரப்பேரி கிராமத்தவர் களால் அருவிப் பாதையும் பாதுகாப்பாக இருந்திருக்கிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்படியே சென்று கொண்டிருந்த பழைய குற்றால அருவியில், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வனத்துறைக்கு துருப்புச் சீட்டாகிப்போனதாகக் கூறுகிறார்கள் ஏரியாவாசிகள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடை மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில், குளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் அடித் துச்செல்லப்பட்டு கடும் முயற்சிக் குப்பின் உயிரோடு மீட்கப்பட் டான். தொடர்ச்சியாக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நெல்லைப் பகுதி சிறுவன் இழுத்துச்செல்லப்பட்டு மரணமடைந்தான். இச்சம்பவங் களுக்குப் பின்னர் உள்நுழைந்த வனத்துறை, மலையையொட்டிய பழைய குற்றால அருவிச்சாலை, 'காப்புக்காடு' பிரிவில் வருவ தாகக்கூறி, அரு விச்சாலையும் தங்களால் போடப்பட்டதை சுட்டிக்காட்டி, அருவியில் குளிப்பவர் களுக்கான பாதுகாப்பு எனக்கூறி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதியெனக் கூறி, அருவிச்சாலையின் முகப்பிலேயே செக்போஸ்ட் அமைத் தது. மேலும், அருவிக்கரையிலிருந்து தொலைவிலேயே வாகனங் கள் மடக்கப்பட்டதால், வெகுதொலைவுக்கு நடந்து செல்வது பாதுகாப்பில்லாததாகக் கருதி, சுற்றுலாப் பயணிகள் வரத்தே வெகுவாகக் குறைந்தது. அதோடு, மலை நீர்ப்பாசனத்தை நம்பி யிருந்த 60 குளங்களின் விவசாயிகள், ஆயிரப்பேரி ஊராட்சி, சிறு வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள் என அனைவரின் வருமானமும் பெரிய அளவில் அடிவாங்கியது. அருவிப்பகுதியை வனத்துறை யிடம் ஒப்படைத்ததற்கு எதிராக விவசாயிகள் மாவட்ட கலெக் டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். ஆயிரப்பேரி ஊராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளிலும், பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Advertisment

dd

"வனத்துறையின் தடையால் கார் பார்க்கிங் ஏலம் இந்த வருடம் போகவில்லை. வருமானத்தின் பெரும் பகுதியில் மிகப்பெரிய பள்ளம் பாய்ந்து விட்டதால் எங்களின் கிராமங்கள் திணறுகின்றன. தவிர, எங்கள் ஊராட்சியின் சார்பில் சிலர் அருவிக் காலங்களில் மலை மீது காவல் நிற்பார்கள். வெள்ளம் வருவதைக் கண்டதும் மலை மேலேயே திரண்டு வரும் வெள்ளத்தை அங்கேயே திருப்பிவிடுவார்கள். இதனால் பழைய குற்றால அருவியின் வெள்ளம் மட்டுப்படும். ஆபத்துமிருக்காது. ஆனால் தற்போது எங்கள் ஆட்கள் மலைக்குச் செல்வதை வனத்துறை தடுத்து விட்டதால்தான் வெள்ளம் வந்து விபத்தை ஏற்படுத்திவிட்டது'' என்கிறார் ஆயிரப்பேரி ஊராட்சித் தலைவரான சுடலையாண்டி.

dd

Advertisment

பழைய குற்றாலத்தால் வியாபாரப் பலனடைந்த 300க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் இன்றைய நிலை தள்ளாடுகிறது. "வனத்தடையால சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து, கடைகளெல்லாம் காத்து வாங்குது. இதுபோலவே செண்பகாதேவி அருவி, தேன ருவி, பழத்தோட்ட அருவி களுக்கும் தடை போட்டுடுச்சு. அதனால அருவிகளோட பெயரே மக்களிடமிருந்து மறைஞ்சுடுச்சு. இனி பழைய குற்றால அருவியும் அப்படித் தான் ஆகிடும்'' என ஆதங்கப் பட்டார் வியாபாரி துரை.

"1999ல, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவா ரத்தில ரெண்டு கிலோ மீட்டர் சுற்றளவு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மண்டலம்கற பழைய கதையையே சொல்ற வனத்துறை, அங்க நடமாட் டம் கூடாது என்றது. அப்ப அந்தப் பக்கமுள்ள கிராம மக்களின், விவசாயிகளின் கதி என்னாகும்னு கேட்டால், இப்ப காப்புக்காடுன்னு சொல்லி பழைய குற்றால அருவிய முடக்க வர்றாங்க. மலையிலிருந்து சுதந்திரமா வர்ற தண் ணிய பாசனப்படுத்த விவசாயி கள அந்தப்பக்கமே போக விடாமப் பண்ணிட்டாங்க. குற்றாலத்துக்கே அருவியால தான் பெருமை. காமராஜர் உருவாக்கிய பழைய குற்றால அருவி மறைஞ்சிடக்கூடா துன்னு விவசாயிகள் கலெக்ட ரிடம் மனு குடுத்திருக்கோம்'' என்றார் தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத் தலைவ ரான வேலுமயிலும், சுவாமி நாதனும் சுற்றுலாத்தலமான குற்றா லத்தின் பிரச்சனை களுக்கு தீர்வு வருமா?

-ப.இராம்குமார்