ஆசியாவின் பண் டைய இலக்கிய பண்பாட்டு மரபுகளை ஆய்வு செய்யவும், அது குறித்த ஆய்வுநூல்களை வெளியிடவும், 1982-ல் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தொடங்கப்பட்டது ஆசியவியல் நிறுவனம். ஜி. ஜான் சாமு வேல், தனது ஜப்பானிய மாணவரான சூ ஃகிக்கோசக் காவுடன் இணைந்து இந் நிறுவனத்தை உருவாக்கினார்.
ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் பெயரை வைத்து பல கோடி ரூபாய் அரசுப் பணத்தை ஏமாற்றிய தோடு, வெளிநாடுவாழ் தமிழர்களையும் ஏமாற்றி பல கோடிகளைப் பெற்று ஊழல் செய்த இந்நிறுவனம் மீது முதல்வரின் தனிப்பிரிவு விசாரணை அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
1982-ஆம் ஆண்டு தமிழக அரசு நிலத்தை குத்தகைக்கு கொடுக்க, ஜப்பானிய நிதி உதவியோடும் தொடங்கப்பட்டது இந்த ஆய்வு நிறுவனம். ஓய்வுபெற்ற நீதியரசர் கிருஷ்ண ஐயர், குழந்தைசாமி, பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் கொண்ட கமிட்டி உருவாக்கப்பட்டு அந்த கமிட்டிக்கு ஜான்சாமுவேல் இயக்குநராகச் செயல்பட்டு வந்துள்ளார். ஆய்வுக்காக நிதி உதவிய ஜப்பானியர் சூ ஃகிக்கோசக்கா, இவர் ஊழல் செய்கிறார் என்ப தைக் கண்டறிந்து அந்த கமிட்டியிடம் புகார் கொடுத்தார். புகாரின் மீது, எந்த நடவடிக் கையும் இல்லாததால் தன்னுடைய நாடான ஜப்பானுக்கே திரும்பிச் சென்றுள்ளார்.
ஜான் சாமுவேல், 2001-ஆம் ஆண்டு கலாச் சார, பண்பாட்டு மையக் கட்டிடம் கட்டுவதற்காக மத்திய அரசு கொடுத்த 10 லட்சத்துக்கு, போலியான கட்டடப் படத் தைக் காட்டி ஏமாற்றி, தன்னுடைய சொந்த செலவிற்கு எடுத்துக்கொண்டதாக மாதவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி. விசாரித்து, அங்கு அப்படி ஒரு கட்டடமே இல்லை என வழக்குப் பதிவுசெய்தது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநராக இருந்த ஜானை நீக்கம் செய்துவிட்டு புதிதாக கொடுமுடி சண்முகத்தை இயக்குநராக நியமித்தது. இதனை யறிந்த ஜான், அடியாட்களுடன் உள்ளே நுழைந்து அனைவரையும் மிரட்டி, “"இன்னும் வழக்கு முடியவில்லை. நான்தான் இயக்குநர்' என தன்னைத்தானே நியமனம் செய்துகொண்டார். தமிழ் வளர்ச்சித் துறைக்காகவும், ஆராய்ச்சி மாணவர்களுக்காகவும், கட்டடங்களுக்கும், ஆய்வுக்கான புத்தங்கள் பெற்றதாகவும் கூறி, 2001-ல் தொடங்கி 2012 வரையிலும் 1 கோடியே 27 லட்சம் பெற்றுள்ளார். இதோடு நிறுத்திக்கொள்ளாமல், வெளிநாடுவாழ் தமிழர்கள், வெளிநாட்டு நிறுவன நிதி என எதனையும் விட்டுவைக்காமல் பல கோடிகளில் கல்லா கட்டியுள்ளார்.
இந்த சூழ்நிலையில்தான், இவரை விடக் கூடாது என வழக்கைத் தீவிரப்படுத்திய ஆசியவியல் நிறுவன கமிட்டியைச் சேர்ந்தவர்கள் வழக்கு நடத்த, 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செங்கல்பட்டு நீதிமன்ற விசாரணையில் ஊழல் நடந்திருப்பது உறுதியானதை அடுத்து, ஜான் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கியது. இந்த நிலையில், தான் குற்றாவளி இல்லை எனவும், சிறைத்தண்ட னையை ரத்துசெய்யவேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த ஆசியவியல் நிறுவனம் பதிவுசெய்யப் பட்ட நிறுவனமா என்ற சந்தேகத்தின் பெயரில் பதிவுத்துறையில் மோசஸ் கேட்டிருந்த கேள்விக்கு, இந்த நிறுவனத்தின் பதிவு 2001-ல் முடிந்துவிட்டது. எனவே இது பதிவுபெறாதது என பதிலளிக்கப் பட்டுள்ளது. பதிவே பெறாத நிறுவனத்தின் பெயரில் பொய்யான கணக்குகளைக் காட்டி மத்திய- மாநில அரசுகளிடம் பல கோடிகள் பெற்று ஊழல் செய்துள்ளார் ஜான்.
2017-க்குப் பிறகு அரசிடமிருந்து வரும் நிதிகள் நின்ற நிலையில், மற்ற வெளிநாட்டு நிறு வனங்களிடம் இருந்தும், மதரீதியான ஆராய்ச்சி என்ற பெயரிலும் வசூலைத் தொடர்ந்துவருகிறார். போதிதர்மர் பெயரிலான ஆய்வு என்ற பெயரில் ஜப்பான்காரர் ஒருவரிடமிருந்து பெரிய தொகையைப் பெற்றுக்கொண்டு, போதிதர்மா ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் கட்டுவதாகச் சொல்லி அடிக்கல் நாட்டினார். தொகை வாங்கியதையடுத்து பணிகள் ஏதும் நடைபெறாததால், இவரின் நேர்மையில் சந்தேகம்கொண்ட ஜப்பானியர், அப்பணியைப் பாதியிலேயே கைவிட்டுச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து ஆசியவியல் கமிட்டி மெம்பர் மோசஸ், “"இந்த முறைகேடுகளைக் கண்டறிந்து அரசிடம் இவர் பெற்ற ஒட்டுமொத்தத் தொகையும் திரும்பப் பெறவேண்டும். இந்நிறுவனத்தை அரசே எடுத்து நடத்தவேண்டும். காஞ்சிபுரம் பகுதியிலும் போதிதர்மா நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட இடத்தையும் அரசு விசாரணை நடத்தி கையகப்படுத்தவேண்டும்''” என்றார்.
இது குறித்து ஜான் சாமுவேலிடம் கேட்ட போது, “"இந்த நிறுவனம் இன்றுவரையிலும் மிகச் சிறப்பாக இயங்கிவருகிறது. என் மேலுள்ள வழக்கு இன்னும் முடியவில்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சி யில் போடப்பட்ட வழக்கு இது''’என தெரிவித்தார்.