பொதுக்குழுவைத் தடுக்க அல்லது தள்ளி வைக்கும் முயற்சியாக ஆவடி ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார் ஓ.பி.எஸ். சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பொதுக்குழு நடத்த அனுமதி மறுக்கப்படும் என அவரும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்திருந்தனர். தனது மகன் ரவீந்திரநாத் மூலமாக ஸ்டாலினைத் தொடர்புகொள்ள ஓ.பி.எஸ். எடுத்த முயற்சிகள் வீணானது.

ஓ.பி.எஸ். மனு மீது என்ன முடிவெடுப் பது என்று முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசனை கேட்டுள்ளனர் உயரதிகாரி கள். ஸ்டாலினோ, "அ.தி.மு.க.வில் நடப்பது அவர்களது கட்சியின் உள் விவகாரம். எந்த தரப்புக்கும் ஆதரவாக இருக்கத் தேவையில்லை. அவர்களுக்கான நியாயங்களை தேர்தல் ஆணையத்தி டமோ நீதிமன்றத்திடமோ முறை யிட்டு பெற்றுக் கொள்ளட்டும். இப்படி ஒரு மனு கொடுக்கப் பட்டால் சட்டரீதியாக என்ன முடிவெடுக்க வேண்டுமோ அதை தாராளமாகச் செய்யுங் கள்''‘’என்று அறிவுறுத்தினார்

ops-eps

Advertisment

மு.க.ஸ்டாலின். இதனையடுத்து, பொதுக்குழுவுக்கு தடை இல்லை என தெரிவித்தது ஆவடி காவல் ஆணையர் அலுவலகம்.

இதில் ரொம்பவே மனம் உடைந்து போனார் ஓ.பி.எஸ். "அதுவரை ஆதரவு கொடுத்துவந்த மா.செ.க்களும் பொதுக்குழு உறுப் பினர்களும் திடீரென எடப்பாடிக்கு ஆதரவாகத் தாவியதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. தன்னை விட்டுச் சென்றவர்களை வாழ்த்தலாம் என அவர் களுக்கு ஓ.பி.எஸ். போன் பண்ணியபோது அவர்கள் யாருமே போனை அட் டெண்ட் பண்ணாதது வேறு, அவரை மன உளைச் சல்களுக்கு ஆளாக்கி யது'’என்கிறார் ஓ.பி.எஸ். சிடம் இப்போதும் நெருக்க மாக இருக்கும் ஆதரவாளர் ஒருவர்.

dd

எடப்பாடிக்கு இந்தளவுக்கு ஆதரவு பெருகு வதற்கு வட தமிழக அ.தி.மு.க. தலைவர்களும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இது குறித்து நம்மிடம் மனம் திறந்த அ.தி.மு.க.வினர், ‘’"கட்சி யின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ். இருந்தாலும், அவரால் அதிகாரம் செலுத்த முடியாமலும், சசிகலாவை கட்சிக்குள் உள்ளே வர முடியாமலும் அ.தி.மு.க.வின் வன்னியர் சமூக தலைவர்களை வைத்தே தடுத்து வருகிறார் எடப்பாடி. அதாவது, ஓ.பி.எஸ்.+ சசிகலாவை எதிர்க்க, வன்னியர்களையே ஆயுதமாக பயன்படுத்திவருகிறார்.

ஏற்கனவே, அ.தி.மு.க.வின் கொங்கு மண்டலம் முழுமையும் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், வட தமிழக அ.தி.மு.க.வும் அவருக்கு ஆதரவாக நின்றதால் முக்குலத்தோர் சமூகமான ஓ.பி.எஸ். மற்றும் சசிகலாவால் எடப்பாடியை எதிர்த்து சாதிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒற்றைத் தலைமை என்ற போர்வையில் அ.தி.மு.க.வை முழுமையாக ஆக்கிரமிப்பதில் எடப்பாடி முன்னேறினார்.

ஆனால், பொதுச்செயலாளராக அவர் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு தேர்தலை ஆணையத்தின் அங்கீகாரமும் கிடைத்து விட்டால், அதன் பிறகுதான் எடப்பாடியின் உண்மை முகம் பல்வேறு ரூபங்களில் விஸ்வரூபம் எடுக்கும். ஜெயலலிதாவை விட சர்வாதிகாரியாக மாறுவார். அ.தி.மு.க.விலுள்ள வன்னியர் சமூக தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட தன்னை எதிர்த்து கேள்வி கேட்பவர்களையெல்லாம் களை எடுப்பார் எடப்பாடி. அதுதான் அவரது அஜெண்டா. அப்போது கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம் போன்றவர்களால் இப்போது போல குரலை உயர்த்த முடியாது''’என்று ஆவேசப்படுகிறார்கள் வன்னியர்கள் அல்லாத வட தமிழக அ.தி.மு.க மா.செ.க்கள்!

எடப்பாடியின் அஜெண்டா குறித்து அ.தி.மு.க. வன்னியர் சமூக நிர்வாகிகளி டம் நாம் விசாரித்த போது, "சி.வி.சண்முகத்தை அவ்வளவு எளிதாக எடைபோட்டு விடாதீர்கள். ஒற்றைத் தலைமையில் பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட ஆயத்தங்கள் நடந்தபோதும், எடப்பாடியின் தலைக்கு மேல் கொடநாடு கொலை வழக்கு என்ற கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் அவர் சிறைக்குச் சென்றால் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக தனக்கு வாய்ப்பு வரும் என கணக்கிட்டிருக்கிறார் சி.வி.சண்முகம். தனது திட்டத்திற்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி யையும் கணிசமான எம்.எல்.ஏ.க்களையும் வளைத்து வைத்துள்ளார். இதற்கு பிரதிபலனாக, எதிர்க்கட்சி தலைவர் பதவி வேலுமணிக்கு கொடுக்கப்படும்.

இதற்கிடையே, ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட விருப்பதாக ஒரு தகவல் அ.தி.மு.க. தலைவர்களுக்கு கிடைத்திருக்கிறது. அப்போது, சி.வி.சண்முகத்தை அமைச்சராக்க மோடியிடம் எடப்பாடி சிபாரிசு செய்வார். அதற்கேற்ப எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டி ருக்கிறது. சி.வி.சண்முகம் அமைச்சராகிவிட்டால் கட்சியில் அவரது செல்வாக்கும் அதிகரித்துவிடும். அ.தி.மு.க.வில் பல ரகசியத் திட்டங்கள் ஆளாளுக் குப் போடப்படுகின்றன''’என்று சுட்டிக்காட்டு கிறார்கள் அ.தி.மு.க வன்னியர்கள்.

அ.தி.மு.க.வில் இப்படிப்பட்ட களேபரங்கள் நடந்து கொண்டிருக்க, ’"அ.தி.மு.க.வை கைப்பற்று வேன்; தொண்டர்களை கைவிடமாட்டேன்'’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த சசிகலா, "ஓ.பி.எஸ்.சை ஓரங்கட்டி கட்சியை மொத்தமாக கபளீகரம் செய்யும் எடப்பாடியின் சூழ்ச்சிகளை தடுக்க வெளியே வருவார்' என எதிர்பார்த்தார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆனால், சசிகலாவோ இது குறித்து கவலைப்படவே இல்லை.

dd

ஒற்றைத் தலைமை விவகாரம் கோர்ட் வரை சென்று என்ன தீர்ப்பு வருமோ என இரு தரப்பும் 22-ந் தேதி தவிப்புடன் நேரத்தை நகர்த்திக் கொண்டிருந்தபோது, சென்னை தி.நகரில் தனது வீட்டில் இருந்தார் சசிகலா. அவரது ஆதரவாளர் கள் யாரும் அவரது வீட்டை எட்டிக்கூட பார்க்க வில்லை.

இந்த நிலையில், பொதுக்குழு நடத்தவும் சட்ட விதிகளை திருத்தவும் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தடை விதிக்க மறுத்தது சென்னை உயர்நீதிமன்றம். அதேசமயம் சசிகலாவோ, "எடப்பாடியிடம் அ.தி.மு.க.வின் அதிகாரம் முழுமையாகச் செல்வது பா.ஜ.க.வின் அரசியலுக்கும் ஆபத்து' என்று டெல்லிக்கு ஒரு தகவலை பாஸ் செய்திருக்கிறார் என்கிறார்கள்.

இந்த நிலையில், அ.தி.மு.க. பஞ்சாயத்து குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்த போது ‘’"பா.ஜ.க. மேலிடம் போட்டுள்ள கணக்கின்படிதான் அ.தி.மு.க.வில் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதே பா.ஜ.க.வுக்கு லாபம் என்று பா.ஜ.க. தேசிய தலைமை நம்புகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது சசிகலா, தினகரன் எல்லோரையும் அ.தி.மு.க.வுக்குள் டெல்லி இணைத்துவிடும். அதனால் தான் அ.தி.மு.க.வில் எது நடந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் சசிகலா.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில், 2019 தேர்தலின்போது ஏமாற்றியதுபோல இந்த முறை எடப்பாடியோ அ.தி.மு.க. நிர்வாகமோ ஏமாத்திட முடியாது. அன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சியும், எடப்பாடி முதலமைச்சராக வும் இருந்ததால் 4 சீட்டுகளை கொடுத்து கூட்டணியை முடித்தது அ.தி.மு.க.. ஆனால், இப்போது அப்படியெல்லாம் நடக்க பா.ஜ.க. விடாது. கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர்.- இந்திராகாந்தி போட்டுக்கொண்ட 60/40 ஃபார்முலாவை 2024 தேர்தலில் எடப்பாடியோடு போடுகிறார் மோடி.

எம்.ஜி.ஆர்.-இந்திரா போட்டுக்கொண்ட ஒப்பந்தந்தின் படி நாடாளுமன்ற தேர்தல் வந்தால் 60 சதவீத இடங்களை இந்திராவும், 40 சதவீதத்தை எம்.ஜி.ஆரும் எடுத்துக்கொள்வர். அதுவே சட்டமன்ற தேர்தல் எனில் 60 சதவீதம் அ.தி.மு.க.வும், 40 சதவீதம் காங்கிரசும் பிரித்துக் கொள்ளும். இதே பாணியில்தான் பா.ஜ.க.வும் 60/40 பார்முலாவை நாடாளுமன்ற தேர்தலுக்காக எடப்பாடியிடம் போட்டுக்கொடுத்துள்ளது. தங்களின் கூட்டணிக் கட்சிகளுக்கு அவரவருக்கு ஒதுக்கப்படும் சீட்டுகளில் கொடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் பா.ஜ.க.வின் திட்டம்''’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் ஜூன் 22 இரவு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.எஸ். அணியில் உள்ள மனோஜ் பாண்டியன் தலைமையிலான சட்ட ஆலோசனை டீம் விரைவாகச் செயல்பட்டு, மேல்முறையீடு செய்தது. நள்ளிரவு 1 மணிக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி துரைசாமியின் அண்ணாநகர் இல்லத்தில் வழக்கு மேல்முறையீடு விசாரணை நடைபெற்றது.

அந்த அமர்வின் விசாரணையில், "அ.தி.மு.க. பொதுக்குழுவில் 23 தீர்மானங் களை மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். புதிய தீர்மானங் களில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது'' என உத்தரவிடப் பட்டது. இது எடப் பாடி தரப்புக்கு புது நெருக்கடியை உண்டாக்கியது. ஓ.பி.எஸ். தரப்பு திடீர் உற்சாகம் அடைந்தது.

அதேசமயம், "அரசியல் கட்சிகளின் சட்ட விதிகளில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்? எங்களுக்கான தலைவர் யார் என்பதை நீதிமன்றம் உத்தரவிட முடியாது'' என்று கொந்தளிக்கிறார்கள் எடப்பாடியின் வழக்கறிஞர்கள்.

தீர்ப்பை மீறாத வகையிலும், அதே நேரத்தில் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும் பொதுக்குழுவில் எப்படி செயல்படுவ தென இ.பி.எஸ். தரப்பு ஆலோசிக்கத் தொடங்கி யது. "இத்தகைய திடீர்... பகீர் திருப்பங்களும், பா.ஜ.க.வின் ரகசிய காய் நகர்த்தல்களும் அ.தி.மு.க.வை நிலைக்க வைக்குமா? இரட்டை இலையை முடக்கச் செய்யுமா?' என்ற பதை பதைப்பு தொண்டர்களிடம் இருப்பதைக் காண முடிந்தது.