முதல்வரான பிறகு முதல்முறையாக டெல்லிக் குப் பயணித்த ஸ்டாலினை தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். டெல்லியில் கட்டப்பட்டு வரும் தி.மு.க அலுவலகமான அறிவாலயத்தின் பணிகளை நேரில் பார்வையிட்டார் ஸ்டாலின். பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த ஸ்டாலினுக்கு, திஹார் சிறையில் பணியில் இருக்கும் தமிழ்நாடு அரசின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையும், தி.மு.க. எம்.பி.க்களின் வரவேற்பும் அசத்தலாக இருந்தன.

stalin

தி.மு.க. எம்.பி.க்களுடனான உரையாடலை முடித்து அனுப்பிய பிறகு, அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத் ஆகியோருடன் மோடியை சந்திக்கும்போது பேச வேண்டிய சில பிரச்சனைகள் குறித்து விவாதித் தார் ஸ்டாலின்.

பிரதமருடனான மாலை நேர சந்திப்பின் போது, பிரதமர் இல்லத்தில் பிரதான வாயிலில் ஸ்டாலினுக்காக காத்திருந்த புல்லட் புரூஃப் காரில் ஏறிப் பயணிக்க 2 நிமிடம், வரவேற்புலி ஃபோட்டோ செஷன் 3 நிமிடம், திரும்பி வர 2 நிமிடம் என மொத்தமாக 21 நிமிட நேரம் சந்திப்பு நடந்தது.

Advertisment

டெல்லியில் உள்ள தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசிக்கும் நிகழ்வு இருப்பதை நக்கீரன் முன்கூட்டியே தெரிவித்திருந்தது. பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு அந்த சந்திப்பும் நடந்தது.’"தமிழகத்தின் நலன் சார்ந்த பல கோரிக்கைகளை பிரதமரிடம் கொடுத்துள்ளேன். நீங்கள் பணிபுரியும் துறைகளில் தமிழகம் தொடர்பான கோரிக்கைகள் வரும்போது அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் நீங்கள் ஆர்வமுடன் இருக்க வேண்டும்''’என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

stalin

இதற்கிடையே, தமிழக அரசின் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமசுந்தரம், முதல்வர் ஸ்டாலினை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்திருக்கிறார். தமிழகத்தில் செயல்படும் ரீநியூ நிறுவனத்தின் 100 மெகாவாட் சூரிய சக்தி திட்டம் குறித்து விவரித்திருக்கிறார் ராமசுந்தரம். ரீநியூ அமைப்பின் நிறுவனர் தலைவர் சுமந்த் சின்ஹா எழுதிய ’ஃபாசில் ஃப்ரி என்கிற புத்தகத்தையும் ஸ்டாலினிடம் தந்திருக்கிறார்.

Advertisment

கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூத்த தலைவர் களான சீதாராம்யெச்சூரி, ராஜா ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மறுநாள் சோனியாவையும் ராகுலையும் தன் மனைவி துர்காவுடன் சென்று சந்தித்தார் ஸ்டாலின்.

மோடியுடனான மு.க.ஸ்டாலினின் சந்திப்பு குறித்து டெல்லியிலுள்ள தமிழக அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்தபோது,” சந்திப்பில் பேசுவதற்கான நேரம் 10 நிமிடம்தான். கோரிக்கைகளின் தலைப்புகளை மோடியிடம் ஸ்டாலின் சொன்னதும், அதிகாரிகளுடன் இதுபற்றி விவாதிக்கிறேன் என்ற பிரதமர், தமிழகம் குறித்து எதுவாக இருந்தாலும் என்னிடம் பேசலாம். தயக்கம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். 7 பேர் விடுதலை குறித்து பேச ஸ்டா லின் விளக்கத் தொடங்கியபோது, இந்த விவகாரம் ஜனாதிபதியிடத்திலும் நீதிமன்றத்திலும் இருக்கிறது என்றிருக்கிறார் பிரதமர். அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகார்கள் குறித்து ஸ்டா லின் முழுமையாக விவாதிக்க அவகாசம் இல்லை” என்கிறார்கள்.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை சார்ந்த முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கைகளில் பெரும் பாலானவை மீது மோடி அரசுக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒன்றிய அரசின் பெரும்பாலான துறைகளில் அதன் அமைச்சர்களைத் தாண்டி பிரதமர் அலுவலகம்தான் முடிவுகளை எடுக்கிறது. அதனால், டெல்லியில் உள்ள தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஸ்டாலின் எதிர்பார்ப்பது போல எந்தளவுக்கு உதவ முடியும் என்பது தெரியவில்லை என்கிறார்கள் டெல்லி அதிகாரிகள்.

stalin

தமிழக முதல்வர் டெல்லி வருகிறார் என்றபோதே, அரசில் ரீதியாக பா.ஜ.கவை எப்படி வேண்டுமானாலும் தி.மு.க.வோ ஸ்டாலினோ விமர்சித்துக்கொள்ளலாம், ஆனால், நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் மோடி அரசுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்கிற ரீதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை ஸ்டாலின் ஏற்கவில்லை. டெல்லியின் எதிர்பார்ப்பும் ஸ்டாலினின் இலக்கும் மாறுபட்டிருப்பதால் அடுத்தடுத்த அரசியல் ஸ்டெப்புகளின் அடிப்படையில்தான் இருக்கிறது தி.மு.க. அரசு வைத்துள்ள கோரிக்கைகளின் நிலை என்கிறார்கள் தமிழக அதிகாரிகள்.

சோனியா மற்றும் ராகுல்காந்தியை மரியாதை நிமித்தமாக ஸ்டாலின் சந்தித்துவிட்டு சென்றதற்கு பிறகு காங்கிரசின் மூத்த தலைவர்கள் சிலருடன் இயல்பாக பேசிக்கொண்டிருந்திருக் கிறார் ராகுல்காந்தி. அப்போது அவர், மம்தா மற் றும் பினராயி விஜயன் மாதிரி மோடியை சந்திப் பதை ஸ்டாலின் தவிர்த்திருக்கலாம். அப்போது தான் ஸ்டாலினின் வலிமையை மோடி உணருவார். மோடியை எதிர்த்து அரசியல் செய்ததால்தான் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. அப்படியிருக்க மோடியிடம் மோதி தமிழகத்தின் உரிமையை பெற வேண்டும். இணக்கமாகச் சென்றால் மோடியிடம் எதையும் பெற முடியாது. மதச்சார்பற்ற சக்திகளும் ஸ்டாலினை சந்தேகக் கண்ணோடு பார்க்கும். அந்த நிலை ஏற்படாமல் ஸ்டாலின் தவிர்ப்பார் என்றே எதிர்பார்க்கிறேன் எனச் சொல்லியிருந்தார் ராகுல் காந்தி. சென்னை திரும்பிய ஸ்டாலின், ஜூன் 19 அன்று ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கிறது ஸ்டாலினின் டெல்லி விசிட்.