சமூக வலைத்தளங்களில் தூண்டில் போடும் கிளுகிளு செயலிகள், சபலப்படுபவர்களைக் குறிவைத்து பணத்தைச் சுரண்டிவருவதோடு, பெருத்த அவமானத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட செயலிகளில் வழுக்கி விழுந்தவர்களின் அனுபவக் கதைகள், மிரள வைப்பதாக இருக்கின்றன.
கடந்த 4ஆம் தேதி தொழிலதிபர் ஒருவர், அந்த சமூகவலைத்தள செயலி மூலம் தொடர்புகொண்ட ஒரு பெண்ணை நம்பி, 2 லட்சம் ரூபாயுடன் கன்னியாகுமரி -காவல்கிணறு பைபாசில் நின்று கொண்டி ருந்தார். பின்னர் வீடியோகாலில் வந்த அந்தப் பெண், அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பங்களாவுக்கு வரும்படி அவரை அழைத்தாள். அவர் பல்வேறு கனவுகளுடன் அங்கு செல்லும்போது, திடீரென்று வழிமறித்த ஒரு கும்பல் அந்த தொழிலதிபரை மடக்கியது. அவரை அதிரடியாக நிர்வாணமாக்கி, அதை வீடியோ எடுத்துவிட்டு அவரிடமிருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டது. அதிர்ச்சியில் கொஞ்சநேரம் உறைந்துபோன அந்தத் தொழிலதிபர், ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு ஓடினார். புகாரை வாங்கிக்கொண்ட போலீஸ் அவருக்கு அறிவுரைகளையும் அள்ளி வழங்கி, அனுப்பி வைத்திருக்கிறது.
இதேபோல் தக்கலை அருகே கல்குறிச்சியைச் சேர்ந்த ஒருவர், கேரளாவில் வேலை பார்த்துவருகிறார். அவரது இளம் மனைவி சமூகவலைத்தள செயலி மூலம், தினமும் வீடியோ காலில் பல்வேறு ஆண்களுடன் ஆபாசமாக இருப்பதை, வீட்டில் மறைத்து வைத்திருந்த காமிரா மூலம் கண்டுபிடித்து, குழித்துறை மகளிர் போலீசுக்கு ஓடினார். அவரிடமும் புகாரை வாங்கிக் கொண்டனர்.
இதுபற்றி நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீசாரிடம் விசாரித்த போது... "கூகுள் ப்ளே ஸ்டோரில் பயன்பாட் டில் இருக்கும் "கிரைன்டர்' என்ற செயலி மூலம் அறிமுகம் இல்லாத நபர்களைத் தொடர்பு கொண்டு ’"வாங்க பழகலாம்... நண்பர்களாக இருப்போம்'’என சாட்டிங் செய்து, அதன்மூலம் ஆசையைத் தூண்டி இந்த மாதிரி பணம் பறிக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். நாகர்கோவிலில் சமீபத்தில் சுமார் 10க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. அதில் பாதிக்கப்பட்டவர்கள் தொழி லதிபர்களும், வசதியான மாணவர்களும்தான். இந்த "கிரைன்டர்' செயலி அதிகம் பயன் பாட்டில் இருப்பது கேரளாவில்தான். சொல்லப்போனால் இதன் பிறப்பிடமே கேரளாதான்.
சமீபத்தில் கன்னியாகுமரி, கோவை, சென்னை, மதுரை போன்ற நகரங்களில் இதன் மோசமான அலை பரவத் தொடங்கியிருக் கிறது’என்றார்கள்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்ட்ரல் சைபர் க்ரைமைச் சேர்ந்த நண்பர் ஒருவரிடம் இந்த கிரைன் டர் செயலி பற்றி நாம் கேட்டபோது...’ "சில தினங் களுக்கு முன் களமச்சேரியைச் சேர்ந்த ஒரு ஓட்டல் அதிபர் எங்களிடம் புகார் கொடுத் தார். அவரும் அந்த ஆப்பில் 25 வயதான அழ கான இளம் பெண்ணின் புகைப்படத் தைப் பார்த்து, அவளுடன் சாட் டிங் செய்திருக் கிறார். இரண்டே நாட்களில் சாட்டிங் மூலமே இருவரும் நெருக்கமானதால் அந்த பெண் வீடியோ காலில் அரைகுறை ஆடையுடன் வந்து அவரது ஆசையைத் தூண்டியிருக்கிறாள். அதன் பிறகு தன்னை ஆடையின்றிப் பார்க்க வேண்டு மானால் 50 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்றிருக்கிறாள். இவரோ, சல்லாப ஆசையில் ஒரு லட்சம் ரூபாயை அவளுக்கு ஜீலிபே செய்திருக்கிறார். அதன்பிறகு நிர்வாணக் கோலத்தில் வீடியோகாலில் வந்தவளைப் பார்த்ததும், அடுத்தகட்டத்துக்குப் போக ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக 2 லட்ச ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார். "அதை பணமாகக் கொடுங்கள்' என்று சொன்ன அந்தப் பெண், அதை வேறொரு பெண் மூலம் வாங்கிக்கொண்டாள். அடுத்து, அவரை ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதிக்கு வரச் சொல்லியிருக்கிறாள். அங்குபோய் அவர் வெகுநேரம் காத்திருந்தும், அவள் வராமல் ஏமாற்றியிருக்கிறாள். இதை வெளியே சொன்னால் அசிங்கம் என்று அமைதியாக இருந்தவர், நண்பர் ஒருவர் கட்டாயப் படுத்தியதால் புகார் கொடுத்தார்''’என்ற வர், மேலும் சில தகவல்களைப் பகிர ஆரம்பித்தார்.
"இதேபோல் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவ மாணவராக இருக்கும் திருப்பூரைச் சேர்ந்த அந்த இளைஞர், அந்த கிரைன்டர் ஆப் மூலம் ஓரு இளம்பெண்ணிடம் பழகி வீடியோகா லில் அவளுடைய அந்தரங்க அழகைக் கண்டு அதிலே மூழ்கிப்போய், 10 லட்சம் வரை அவளிடம் இழந்துள்ளார். இப்படி பல வசதியான தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் இந்த ஆப் மூலம் பணத்தை இழந்திருக்கிறார்கள்.
ஏமாற்றும் பெண்களின் வீடியோக் களைப் பார்க்கும்போது எல்லாருமே 25 வயசுக்குள் தான் இருக்கிறார்கள். பெரும் பாலானோர், படிக்கிற மாணவிகளாகவும் ஐடி ஃபீல்டில் பணிபுரிபவர்களாகவும் இருக் கிறார்கள். தங்களின் ஹைலெவல் ஆடம்பர செலவுக்காக இப்படி உடலைக் காட்டிச் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அந்த பெண்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது ஆண்களுடன் உல்லாசத்துக்கு விருப்பம் இல்லாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு மார்பிங் கேஸ் சம்மந்தமாக ஒரு பிரபல பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலரை விசாரிக்கும் போது, அந்தக் கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் வெளியூரைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சில மாணவிகள் சொகுசாக இருப்பதை அறிய முடிந்தது. இதெல்லாம் அந்த ஆப் மூலம் கிடைத்தது என்பதையும் தெரிந்துகொண்டோம்''’என்றார் வருத்தமாய்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் இந்த கிரைன்டர் ஆப் சம்பந்தமாக கேட்டபோது, "அந்த ஆப் மூலம் இளம் பெண்கள் பணம் சம்பாதிப்பதோடு, குடும்ப பெண்களையும் மிரட்டி நகைகளையும் கறக்கின்றனர். அதாவது இந்த ஆப் மூலம் இளம் பெண்களிடம் பழகும் திருமணமான ஆண்களிடம் அந்த இளம் பெண்கள், ஆசையை தூண்டிவிட்டு, ஒருகட்டத்தில் "உங்கள் மனைவியின் அந்த மாதிரியான வீடியோக்களை அனுப்புங்கள்' என்று கூறுகிறார்கள். சில ஆண்களும் அதைத் தட்டாமல், தங்கள் மனைவி குளிப்பதையும் உடை மாற்றுவதையும் ரகசியமாக வீடியோ எடுத்து அனுப்பு கிறார்கள். அந்த வீடியோவை அந்த இளம்பெண்கள், தங்களுடைய ஆண் நண்பர்களிடம் கொடுத்துவிடு கிறார்கள். அந்த நபர்கள், அந்தப் பெண்களை மிரட்டுகிற சம்பவங்களும் நடக்கிறது.
இந்த மாதிரி மிரட்டலுக்குள்ளான பெண் ஒருவரின் புகாரை ஆன்லைன் மூலம் காவல் துறைக்கு அனுப்பியுள்ளேன். மேலும் இவர்கள் ஒரு பெரிய நெட்வொர்க்காகவே செயல்படுகிறார்கள். இதற்கென்று இவர்கள் ரகசியமாக ஒரு வாட்ஸ்-ஆப் குழுவையும் உருவாக்கியிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறேன்'' ’என்றார் ஆதங்கமாய்,
தமிழகத்திலும் இந்த டேஞ்சரஸ் ‘கிரைன்டர்’ செயலியால் பாதிக்கபடுபவர்கள் அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரம்காட்டி வருவதாகச் சொல்லும் குமரி காவல்துறையினர், "பாதிக்கப்படுபவர்கள் 1930 என்ற எண்ணில் தொடர்புகொண்டோ, அல்லது காவல்நிலையத்திலோ புகார் கொடுக்கலாம்' என்கிறார்கள்.
இனியாவது சபல புத்தியுள்ளவர்கள் திருந்துவார் களா?