டுத்தடுத்த இரண்டு நாளில் இரண்டு பேர் வெட்டிப் பொலி போடப்பட்டு அவர்களின் தலையைத் துண்டாக வெட்டியெடுத்து சுடுகாட்டுச் சமாதியிலும், நட்ட நடுச்சாலையிலும் வீசப்பட்ட கொடூரம் நெல்லை மாவட்டத்தையே அச்சத்திலும் பீதியிலும் உறைய வைத்திருக்கிறது.

இரண்டு பிரிவினரின் பழிக்குப் பழி சபதங் களால் ஐந்து படுபாதகக் கொலைகள் நடந்திருப்பது பதைபதைப்பைக் கிளப்புகிறது.

murderசெப் -13 அன்று காலை மது பாட்டில் வாங்கிக்கொண்டு ஊர் திரும்பியிருக்கிறார் நெல்லை மாவட்டத்தின் முன்னீர்பள்ளம் அருகிலுள்ள கீழச்செவல் நயினார்குளத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளியான சங்கரசுப்பிரமணியன். அவரை திடியூர் காட்டுப் பகுதியில் வழிமறித்த கும்பல் ஒன்று சுற்றி வளைத்து வெட்டிப் பொலி போட்ட வெறியில், அவரின் தலையைத் துண்டாக வெட்டியெடுத்துச் சென்றிருக்கிறது.

தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த டி.ஐ.ஜி. பிரவீண்குமார் அபிநபு மற்றும் எஸ்.பி. மணிவண்ணன் தலைமையிலான போலீசார், தலையற்ற உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தவர் கள் விசாரணையோடு, தலையை பரபரப்பாகத் தேடியுள்ளனர். மறுநாள் காலை சங்கரசுப்பிரமணியின் தலையை அருகிலுள்ள கோபாலசமுத்திரம் கொத்தங்குளம் சுடுகாட்டிலிருந்து மீட்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது. இதனால் ஆத்திரமாகி இருக்கின்றனர் சங்கரசுப்பிரமணியின் பிரிவினர்.

Advertisment

இந்தப் படுகொலை முடிந்த அடுத்த 48 மணி நேரத்தில், செப் -15 அன்று வழக்கம்போல் காலைக் கடனைக் கழிக்கக் குளத்துக்கரைப் பக்கமாய் போன கோபாலசமுத்திரம் கிராமத்தின் விவசாயியான மாரியப்பனைக் கணக்குப் போட்டுக் காத்திருந்து வெட்டிச் சாய்த்த கும்பல், முதல் கொலையைப் போன்று மாரியப்பனின் தலையை துண்டாகச் வெட்டி எடுத்து சபதத்தை நிறைவேற்றி, சங்கரசுப்பிரமணி வெட்டிக் கொல் லப்பட்ட சாலையில் அவருக்கு காணிக்கையாக வீசிவிட்டுச் சென்றிருக்கிறது எதிர்த் தரப்பு.

இரண்டு சம்பவங்களும் அருகருகே தொடர்ந்து நடந்ததால் பதறிப்போன போலீஸ் உயரதிகாரிகள், உடலையும் வீசப்பட்ட தலைகளையும் கைப்பற்றி இரண்டு கொலைகளுக்குமான விசாரணையைக் கிளப்பிய போதுதான், ஒன்றுக் கொன்று தொடர்பிருப்பதையும், முன்விரோதப் பகை காரணமாக இரு பிரிவினர் பழிக்குப் பழியாக நடத்தி யிருப்பதையறிந்து அதிர்ந்த வர்கள், அடுத்த நாட்களில் ஏதேனும் எதிரொலிக் கொலைகள் நடந்துவிடக் கூடாதே என்று டென்ஷனாகி யிருக்கிறார்கள்.

படுகொலைகளின் மூலகாரணம் பற்றிய விசாரணையில் நாம், பகுதி மக்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளிடம் பேசியதில், இரண்டு பிரிவினருக்குள் ஏற்பட்ட முன்பகைமை காரணமாக செப். 15 வரை நடந்த படுகொலைகளைப் பீதியோடு விவரித்தார்கள்.

Advertisment

பலியான சங்கரசுப்பிர மணியன் மற்றும் மாரியப்பன் இருவரின் தரப்பைப் சேர்ந்த பிரிவினரே இப்படி பதிலுக்குப் பதில் பழிவெறியோடு மோதியுள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு, கோபாலசமுத்திரத்தின் பள்ளி ஒன்றில் இருபிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டனர். பள்ளியில் நடந்த இந்த மோதல், அவரவர் சமுதாயத்தவர்களைச் சூடாக் கியதுடன் ஆத்திரப்பட வைத்திருக்கிறது. விளைவு, அதே ஆண்டின் கடைசியில், இருபிரிவினரில் ஒரு பிரிவைச் சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொல்லப்பட, கொலையுண்ட வரின் பிரிவினர் பழிக்குப் பழி வெறியில் இருந்திருக்கிறார்கள்.

இதற்குப் பதிலடியாகக் கிளம்பிய அந்தத் தரப்பினர், 2013-ன்போது ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்த ஒருவரை அவர் வீட்டுமுன்பே வெட்டிக் கொல்ல, இரண்டு தரப்புகளிலும் பகைவெறி பற்றிக்கொண்டது.

இதற்குப் பதில்தரும் வகையில், 02.08.2014 அன்று இதில் ஒரு பிரிவைச் சேர்ந்த, கொத்தங்குளம் மந்திரம் என்பவரை தீர்த்துக்கட்டு வதற்காக 13 பேர் கொண்ட கும்பல் ஒன்று மந்திரம் பஸ் சில் சென்றுகொண்டிருந்த சமயம், அவரை வெளியே இழுத்துப்போட்டு வெட்டிக் கொன்றிருக்கிறது. இப்படி கண்ணுக்குக் கண், ரத்தத்திற்கு ரத்தம் என்ற வகையில் பழிவெறிச் சபதத்தோடு இரண்டு பிரிவினரும் மோதிக் கொண்டதில் மூன்றுபேர் கொல்லப்பட்ட பின்னரும் பழிவெறிப் பகைமைகள் அடங்குவதாகத் தெரியவில்லை.

மந்திரம் படுகொலைக்குப் பழிதீர்க்க காத்திருந்த அவரது பிரிவினர், கீழச்செவல் நயினார்குளம் கிராமத்திலுள்ள யாரையாவது ஒருவரைப் போட்டுத் தள்ளத் திட்ட மிட்டிருந்த நிலையில்தான் செப்.-13 அன்று மது வாங்கிக்கொண்டு திரும்பிய அப்பாவித் தோட்டத் தொழி லாளியான சங்கரசுப்பிர மணியை மூர்க்கத்தோடு வெட்டிச் சாய்த்தவர்கள் அவரது தலையை தனியே வெட்டியெடுத்து கொத்தங் குளம் சுடுகாட்டிலுள்ள மந்திரத்தின் சமாதியில் வைத்து தங்களின் சபதத்தை முடித் திருக்கிறார்கள்.

murder

நிகழ்வுகளைனைத்தையும், பழிவெறியாக்கிய அந்தப் பிரிவினர், சங்கரசுப்பிரமணி கொலைக்குப் பழி வாங்கும் பொருட்டு, அவரைக் கொன்ற பாணியில் அடுத்த இரண்டு நாளில் பதிலடியாய் செப் 15 அன்று மாரியப்பனைப் பொலி போட்டிருக்கிறார்கள். இதில் ஆரம்ப மோதலில் ஒரு பிரிவைச் சார்ந்தவரின் கொலையில் தொடர்புடையவர் மாரியப்பன் என்பதால் அவரை கணக்குப் போட்டுத் தீர்த்த வர்கள், சங்கரசுப்பிரமணியன் தலையை வெட்டியெடுத்துச் சென்று மந்திரம் உடலைப் புதைத்த இடத்தில், வைத்ததைப் போன்று பதிலுக்கு மாரியப்பனின் தலையை, சங்கரசுப்பிர மணியை வெட்டிக் கொன்ற இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

ஒரு பிரிவினரின் கொலையில் தொடர்புடையவர் மாரியப்பன் என்று சொல்லப்பட்டாலும், அந்தச் சம்பவத் திற்குப் பின்பு மாரியப்பன் எதிலும் தொடர்பில்லாமல் ஒதுங்கியே இருந்தவர்தான், வேவு பார்த்து உயிருக்கு உயிர் என்ற கணக்கில் தீர்க்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். இப்படி இரண்டு தரப்பினரின் பழிவெறி 2012-லிருந்து தொடர்ந்து வந்திருக்கிறது என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

அண்மையில் நடந்த இரண்டு கொலைகளால் கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளம், கீழ்ச்செவல் போன்ற அக்கம் பக்க கிராமங்களில் பதட்டம் பரவியதால் கட்டுப்படுத்தவும் மேலும் விளைவுகள் ஏற்படாமலிருக்க அத்தனை கிராமங்களும் போலீசின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றளவும் பதற்றம் தணிந்தபாடில்லை. பதற்றத்தையும் பீதியையும் தவிர்க்க இரண்டு பிரிவு கிராம மக்களிடமும் பேசிய எஸ்.பி. மணிவண்ணன், மோதல் போக்கைக் கைவிடுமாறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

நடந்த கொலைகள் தொடர்பாக இரண்டு தரப்பிலுமாக சிவா, மொட்டை சிவா, பேச்சிமுத்து, ஐயப்பன், வேல்முருகன், மகாராஜா, பாண்டி, பிரபாகரன் அரவிந்த என பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து நாம் நெல்லை மாவட்ட எஸ்.பியான மணிவண்ணனிடம் பேசியதில், "பழிக்குப் பழியாகக் கொலைகள் நடந்திருக்கு. டே லைட் மர்டர்கள் காவலைப் பலப்படுத்தியுள்ளதால் நிலைமைகள் தற்போது கட்டுக்குள் இருக்கின்றன. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தரப்பில் 10 பேர், மற்றொரு தரப்பில் 8 பேர் என்று மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்'' என்றார்.

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முன்னேறிய நிலையில் மனிதன் விண்ணையே அரசாட்சி செய்துகொண்டிருக்க, மோதும் அரிவாள்களின் ஓசைகள் இன்னமும் அடங்காமல் தலையெடுப்பதுதான் விபரீதம்.