திருச்சி மாவட்டம் மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மணப்பாறை உடையார் காலனி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகள்கள் இருவரையும் ஒருவருக்குத் தெரியாமல் ஒரு வரை, கேசவன் காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், தங்கை யைக் காதலிப்பது அக்காவுக்குத் தெரியவந்த நிலையில், அக்கா, 1 வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படு கிறது. அவளது தங்கை மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 11ஆம் வகுப்பு படித்துவந்த போது, கடந்த ஆண்டு ஜூன் மாதம், அவளை கேசவன் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாலதியின் பெற்றோர், மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கேசவன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை யினர் கைது செய்ததோடு, கேசவனை போக்சோவில் சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த கேசவன், கோவையில் ஒலிபெருக்கி ஒப்பந்தப் பணி களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

dd

இந்நிலையில், கடந்த செவ்வாயன்று மாலதிக்கு 12ஆம் வகுப்புக்கான இறுதித் தேர்வு முடிவடைந்தபின்னர், பள்ளியை விட்டுப் புறப்பட்ட மாலதி, தனது தோழிகளுடன் ஊர் சுற்றிவிட்டு வீட்டிற்கு மாலை 4 மணி அளவில் திரும்பியுள்ளார். அப்போது மாலதியை செல்போனில் தொடர்புகொண்ட கேசவன், அவரைப் பள்ளிச் சீருடையை மாற்றி விட்டு வருமாறு கூறியுள்ளார். பக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்குச் செல்வதாக பெற் றோரிடம் கூறிவிட்டு கேசவனைச் சந்திக்க வந்த மாலதியோடு, சிறிது தூரம் காதலோடு பேசிக்கொண்டே நடந்து சென்றவர், திடீ ரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உடல் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மாலதியை, அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், இரவு 9 மணி அளவில் மணப்பாறை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில், அடையாளம் தெரியாத ஓர் ஆண் பிணம் ஒன்றை ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றினர். பிணத்தின் அருகே கண் டெடுக்கப்பட்ட செல்போனில் இருந்த போன் நம்பர்களின் மூலம், அங்கே பிணமாகக் கிடப்பது கேசவன் தான் என்பது தெரியவர, அவரது தந்தை அடையாளம் காண்பித்து உறுதிப்படுத்தினார். தற்போது கேசவனின் மரணம் தற்கொலையா அல்லது வேறு யாரேனும் கொன்று தண்டவாளத்தில் வீசியுள்ளனரா என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisment