எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ. திட்டம் மூலம் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் தங்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கிக்கொள்வதற்காக ஆண்டு தோறும் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பள்ளிகளுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொடுத்துவருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வத்தலக்குண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலுள்ள 200-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கு உபகரணங்கள் வாங்குவதற்காக இந்த ஆண்டு மத்திய- மாநில அரசுகள் பணம் ஒதுக்கியிருக்கின்றன. இந்நிலையில் கடந்த மாதம் சேலத்தைச் சேர்ந்த கார்த்திகா என்டர்பிரைஸஸ் மூலமாக மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் என்று கூறி ரூ 25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை இறக்கி வைத்துவிட்டு அதற்கான செக்கையும் வாங்கிச் சென்றுவிட்டனர்.
எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென கொரோனா தடுப்புப் பொருட்கள் வாங்கியதற்காக 25 ஆயிரம் வாங்கிச்சென்றது குறித்து தலைமை ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியும் முணுமுணுப்புகளும் எழுந்துள்ளன.
இதுசம்பந்தமாக தலைமை ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது, “"மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளுக்குக் கொடுக்கக்கூடிய நிதியில் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை தாங்களே வாங்கிக்கொள்ளலாம் என்பதுதான் விதிமுறை. அப்படி இருக்கும்போது சேலத்தைச் சேர்ந்த கார்த்திகா எண்டர்பிரைசஸ் மூலமாக ஒவ்வொரு பள்ளிக்கும் 25,000 ரூபாய் மதிப்புள்ள கொரோனா உபகரணங்களைக் கொண்டு வந்து கொடுத்தனர். இத்தகைய விஷயங்கள் முறையாக டெண் டர் விடப்பட்டுச் செய்யப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் டெண்டர் விட்டதற்கான சான்றுகள் இல்லை.
பில்லில் 5 லிட்டர் சானிடைசர் 2250 ரூபாய் என எட்டு கேனுக்கு 18 ஆயிரம் ரூபாய் போட்டிருக்கிறார்கள். அதோடு மாஸ்க், டப்பா, சொலிசன், கேன்வாஸ் உள்பட நான்கு பொருட்களுக்கு 7 ஆயிரம். இப்படி கொடுக்கப் பட்டுள்ள தடுப்பு உபகரணங்கள் தரமாகவும் இல்லை. தரமான கம்பெனியின் சானிடைசர் 5 லிட்டர் கேன் விலை 700 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை இருக்கிறது. சானிடைசரி லேயே மிகப்பெரிய ஊழல் நடந் திருப்பது தெரிகிறது. இப்படிப் பட்ட பொருட்களை வாங்க மாட்டோம் என்று சில தலைமை ஆசிரியர்கள் எதிர்ப் புத் தெரிவிக்க, CEO செந்தில் முருகன் அந்த பொருட்களை யெல்லாம் வாங்கி வைத்துவிட்டு ரூ 25 ஆயிரத்திற்கான செக்கை கொண்டுவந்து கொடுக்கவேண் டும் என மிரட்டி அனைத்து தலைமை ஆசிரியர்களிடம் செக்கை வாங்கினார்.
இதைக் கண்டுகொள்ளா மல் இருப்பதற்காக பெரும் பாலான தலைமை ஆசிரியர் களுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயி ரம் வரை லஞ்சம் கொடுத்திருக் கிறார்கள். CEO மற்றும் RMS ஆபீசில் பணிபுரியும் அலு வலர்களுக்கும் ஒரு கணிசமான தொகை போய்ச்சேர்ந்திருக்கிறது. இதுபோல் தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் 25 ஆயிரம் ரூபாய்க்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக 45 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டதில் பல கோடி ஊழல் நடந்திருக்கிறது. ஏற்கெனவே விளையாட்டுப் பொருட்கள், நூலகப் புத்தகங்களை 15 ஆயிரத்திலிருந்து 45 ஆயிரம் வரை கொடுத்துவிட்டு பில் வாங்கிச்சென்றிருக்கிறார்கள். அதிலும் கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடித்து இருக்கிறார்கள் அப்படி இருக்கும்போது இந்த கொரோனாவிலும் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்திருக்கிறார்கள்'' என்று கூறினர்
இது சம்பந்தமாக சேலத்தை சேர்ந்த கார்த்திகா எண்டர்பிரைசஸ் உரிமையாளர் பாபுவிடம் கேட்ட போது, "ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள தலைமையாசிரியர்கள் பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்களை சரிவர வாங்கிப் போடுவதில்லை. அதை கருத்தில் கொண்டுதான் அரசு அந்தப் பொருட்களை டெண்டர் விட்டு வாங்கிக் கொடுக்கச்சொல்லியிருக்கிறது. டெண்டர் எடுத்தவர்கள் என்ற முறையில் கொரோனா உபகரணங் களையும் மற்ற பொருட்களையும் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு மட்டுமே நான் டெண்டர் எடுத்திருக்கிறேன். வேறு சிலர் மற்ற மாவட்டங்களில் எடுத்திருக் கிறார்கள்''’என்றவரிடம், "எதற்காக தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஈஊஞ உள்பட அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுக்கிறார்கள்” என்று கேட்டதற்கு, "இதெல்லாம் ஆடித்தள்ளுபடி மாதிரி. ஏதாவது கமிஷன் கொடுத்தால் தானே பேசாமல் இருப்பார்கள். அதனாலதான் கொடுக்கிறோம்''’ என்று கூறினார்
இதுசம் பந்தமாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியான (CEO) செந் தில்முருகனிடம் கேட்டபோது... "கொரோனா உபகரணங்கள் பள்ளிகளுக்கு கொடுத்திருக் கிறார்களா? அதற்கு செக்கும் கொடுத்தார்களா? அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எதுவானாலும் நேரில் வாங்க பேசிக்கொள்ள லாம்''’ என்று கூறி லைனை கட் செய்துவிட்டார்.