டந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில்தான் ஒரு தொகுதி யில்கூட தி.மு.க. வெற்றிபெற முடியவில்லை. அ.தி.மு.க. மாஜி எஸ்.பி. வேலுமணியின் கரன்சி பாய்ச்சல்தான் தி.மு.க. தோல்விக்கு காரணம். கூடவே தி.மு.க.வில் இருந்த கோஷ்டிப் பூசலும், தி.மு.க.வின் சில நிர்வாகிகள் அ.தி.மு.க. வேலுமணியின் பாக்கெட்டுக்குள் பதுங்கியதும் தோல்விக்கு வழிவகுத்தது.

mm

அந்தவகையில் அ.தி.மு.க. வேலுமணி குடும் பத்துடன் தொடர்பிலிருப்பவர் என கோவை உ.பி.க்களால் குற்றம்சாட்டப்படுபவர் கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மருத மலை சேனாதிபதி. உட்கட்சி தேர்தலில் கட்சிப் பதவிகள் வழங்குவதில் ஊழல், முறைகேடு நடந் துள்ளதாகவும் இவர் மீது தலைமைக்கு புகார் மனுக்கள் சென்றுள்ளன.

இந்த நிலையில் அவ மரியாதையாக அவர் பேசிய டெலிபோன் உரையாடல், கட்சித் தலைமையையே கொதிக்க வைத்துள்ளது.

கோவை மாவட்டத்தி லுள்ள அரிசிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த கணேசன். அங்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தைத் திறப்பதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தேதி வாங்கித்தருமாறு மா.செ.வான மருதமலை சேனாதிபதியை நேரில் சந்தித்திருக்கிறார். அப்போது சேனாதிபதி mmஅவரிடம் "அமைச்சரெல்லாம் வரமாட்டார், நீயே போய் திறந்துக்க'' என கூறியிருக்கிறார். இதனால் கோபமுற்ற அரிசிபாளையம் கணேசன் அவருக்கு நெருக்கமான சிலரிடம் மா.செ. சேனாதிபதி பற்றி விமர்சனம் செய்திருக்கிறார். இந்தத் தகவல் சேனாதிபதிக்குப் போயுள்ளது.

இதற்கிடையே ஓரிரு நாட்களுக்கு முன்பு அரிசிபாளையம் கணேசனை, போனில் தொடர்பு கொண்ட சேனாதிபதி, "நீ என்னைப் பற்றி ஐந்து இடத்தில் தவறாக பேசியிருக்கிறாய். இந்த மாவட்டச் செயலாளர் பதவி என் ...க்குச் சமம்' என்றும் சில அச்சிலேற்ற முடியாத அநாகரிகமான வார்த்தைகளா லும் விளாசியிருக்கிறார். தி.மு.க. தலைமையையும், அமைச்சர் செந்தில்பாலாஜியையும் நேரடியாகச் சீண்டிப்பார்க்கும் வகையில் இவரது பேச்சு அமைந் துள்ளது. விஷயம் வில்லங்கமான நிலையில், "அவர்தான் பேசினார் நூறு சதவிகிதம் உண்மை'' என்கிறார் அரிசிபாளையம் கணேசன். "அது என் குரலே இல்லை'' என மறுக்கிறார் சேனாதிபதி.

"மக்கள் நம்மை நேசிக்குமளவுக்கு எளிமையாகப் பழகவேண்டும், கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை அரவணைத்து அன்புடன் பழகவேண்டும்... இப்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாவட்ட கழக நிர் வாகிகளுக்கு சென்ற கூட்டத்தில்தான் வகுப்பெடுத் தார். ஆனால் அதையெல்லாம் மறந்து ஒரு சீனியர் கட்சி நிர்வாகி ஊராட்சி மன்ற தலைவரையே கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இத்த கைய டங் ஸ்லிப்புகளைத் தவிர்க்க, கோவை மாவட்ட தி.மு.க.வைப் புனரமைப்பதோடு மாநில அளவிலான சீனியர் நிர்வாகி ஒருவரின் நேரடி வழிகாட்டுதலும் அவசியம்' என்கிறார்கள் மூத்த உ.பி.க்கள்.

Advertisment