எண்ணையும், எழுத்தையும் உருவாக்கி, நம்முடைய நாகரிக வளர்ச்சியின் அடிப்படையாக இருந்த ஆதிக்குடிகளான பழங்குடி மக்கள், தங்களுடைய மருத்துவ அறிவுக் குறைபாட் டால், சில கட்டுப்பாடுகளைத் தங்களுக்குள் ஏற்படுத்தி, மருத் துவர் பரிந்துரையில்லாமல் கருத்தடை மாத்திரைகளை எக்கச் சக்கமாகச் சாப்பிட்டு, குழந்தைச் செல்வமின்றி தங்கள் இனத்தைத் தாங்களே அழித்து வருகின்ற அதிர்ச்சித் தகவலை பழங்குடியினச் செயற்பாட்டாளர்கள் சமீபத்தில் வெளியிட்டதால், அதுகுறித்த நிலவரத்தை அறிய களத்தில் இறங்கினோம்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வெள்ளிமுடி, சங்கரன்குடி, பரமன்கடவு, திருப்பூர் மாவட்டத்தில் கருமுட்டி மற்றும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தாயன்னன்குடி, இடமலைக்குடி உள்ளிட்ட ஆனைமலைத் தொடர்களில், முதுவர் கள், காடர்கள் மற்றும் மலை மலசர் உள்ளிட்ட கானகப் பழங்குடி யினர்கள் வசிக்கின்றனர். ஒரே தட்டில் சோறு உண்ணும் இளந்தாரிகள், திருமணமான பெண்கள் தலையில் மூங்கில் சீப்பி, வேற்று ஆட்களை அனுமதிக்காத கிராமம், மலையாளமும், தமிழும் கலந்த தனித்த மொழி, இயற்கை விவசாயம், இளந்தாரிக் கூடம் என பிறப்பு முதல் இறப்பு வரை தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் இந்த முதுவர்கள்.
"இங்கு முட்டுவீடு என்பதுதான் பெரும் பிரச்சனை. ஊரின் ஒதுக்குப் புறத்திலுள்ள இந்த முட்டுவீட்டில்தான் மாதவிலக்கு ஆன பெண்கள் தங்க வைக்கப்படுவார்கள். எந்த ஆடவரை யும் பார்க்காது ஐந்து நாட்களும் அங்கேயே தங்கி, தானாகச் சமைத்துச் சாப்பிட்டு வெளிவருவதை வழக்க மாகக் கொண்டிருக்கின்றார் கள். பிரசவப் பெண்களும் அங்கு தங்கி பிரசவம் பார்க்க வேண்டுமென்பது அவர்களுக்குண்டான நியதி. போதிய மருத்துவ அறிவு கிடைக்காத தால், மாதவிலக்கு நாட்களில் சுகா தாரமான துணிகளைப் பயன்படுத்தா மல், ஒரு தடவை பயன்படுத்திய அதே துணிகளை வருடந்தோறும் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த முட்டுவீட்டில் தலைக்கு மேலாக குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்ட மூங்கில்களில் அந்த துணிகளை தொங்கவிட்டு அடுத்தடுத்த மாதங்களில் பயன்படுத்துகிறார்கள். அந்த சுகா தாரமற்ற துணிகளால் கேன்சர் உள் ளிட்ட பல நோய்கள் உருவாகக்கூடும்.
இதே வேளை, இந்த மாத விலக்கை, வேதனையான விஷயமாகக் கருதி, இதனைத் தள்ளிப்போடுவதற் காக "கான்ட்ராசெப்ட்' என்ற மாத்தி ரையைப் பயன்படுத்தப் பழகியிருக் கிறார்கள். இதனால் மலட்டுத்தன்மை அதிகரிக்கிறது. அதை உறுதிப்படுத் தும்விதமாக, கடந்த மூன்று ஆண்டு களில் இவர்களிடையே ஒரேயொரு குழந்தைதான் பிறந்துள்ளது. மருத்துவ விழிப்புணர்வுக் குறைபாட் டால் இந்த பழங்குடிகள் தங்களது இனத்தைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்'' என்கிறார் பழங் குடியினச் செயற்பாட்டாளர் ஒருவர்.
பொதுவாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், முந்தைய வருடக் கணக்கெடுப்பைவிட, புதிய கணக் கெடுப்பில் குறிப்பிட்ட சமூகத்தினர் 5 சதவிகித அளவில் எண்ணிக்கை முன்னேற்றம் அடைந்தால் அது ஆரோக்யமான வளர்ச்சியாகக் கருதப்படுகின்றது. எனினும், 10 சதவிகித வளர்ச்சியே சரியான வளர்ச்சி எனப்படுகின்றது. கடந்த மக்கள்தொகைக் கணக் கெடுப்பை விட தற்போது இந்த பழங்குடிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகக் காணப்படுகின்றது. குறிப்பாக, சங்கரன்குடியில் கடந்த கணக்கெடுப்பின் போது 28 குடும்பமாக இருந்தவர்கள், தற்பொழுது 19 குடும்பமாகவும், பரமன்கடவில் இருந்த 30 குடும்பம், 21 ஆகவும், சின்கோனாவில் வசித்த 34 குடும்பம், தற்பொழுது 21 ஆகவும், வெள்ளிமுடியில் இருந்த 50 குடும்பம், தற்பொழுது 34 ஆகவும் சுருங்கியுள்ளது. இதே வேளையில், மருத்துவத்திற் காக ஏறக்குறைய 26 கி.மீ. பயணித்து வால்பாறைக்கு வந்தால் மட்டுமே மருத்துவம் கிடைக்கும். இல்லையென்றால் மலையின் மறுபக்கத்தில் பயணம் செய்தால் இடுக்கி மாவட்டத்தை அடைந்துதான் மருத்துவம் பார்க்க முடியும் என்பது இவர்களது துரதிர்ஷ்டம்.
பழங்குடியினச் செயற்பாட்டாளரான தன்ராஜ், "ஆனைமலைத் தொடர் மற்றும் அதனை ஒட்டிய கேரள வனப்பகுதியில் வாழும் முதுவர் பழங்குடிகளுக்கு ஏற்பட்டுள்ள இச்சிக்கல் மிகவும் துரதிஷ்டவசமானது. பொதுவாக பழங்குடிகள், தங்கள் குழந்தைகளையே செல்வங்களாகக் கருதுவர். ஆனால் இன்றுவரை தொடரும் கட்டுப்பாடான பழமைவாதச் செயல் களாலும், அரசுகளின் புரிதலற்ற நவீனத் திணிப்புகளாலும், குழந்தைப்பேறு குறைபாட்டால் வாரிசு களின்றி பரிதாபச் சூழலில் கானகப் பழங்குடிகள் உள்ளனர். வெளியே சொல்ல முடியாத சூழலும், பயமும் அவர்களைக் கவ்விக்கொண்டிருக்கிறது. இச்சிக்கல் முதுவர் மட்டுமின்றி, காடர், மலை மலசர் போன்ற சமூகங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. பூர்வக்குடிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அபாயம் குறித்து வனத்துறை, வருவாய்த்துறை, சுகா தாரத் துறையினருக்கு தெளிவாக ஆதாரங் களின் அடிப்படையில் புகார்களைத் தெரிவித் துள்ளோம். ஆனால் இப்பிரச்சனையைத் தீர்க்கும் விதத்தில் இதுவரை நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
தமிழக அரசு இப்பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி மூத்த பெண் ஐ.ஏ.எஸ்., மானிடவியல், மருத்துவத் துறை மற்றும் பழங்குடியினச் செயற்பாட்டாளர் அடங்கிய குழுவை அமைத்து, இங்குள்ள வனக் கிராமங்களில் முழுமையாக, அதே நேரத்தில் அம்மக்களின் கண்ணியம் பாதிக்கப்படாத வகையில் ஆய்வு செய்து, அழிந்துவரும் கானகப் பழங்குடிகளைப் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு, இதை நிச்சயம் செய்துதரும் என்ற நம்பிக்கை பழங்குடிகளுக்கும், எனக்கும் உள்ளது'' என்கிறார்.
படங்கள்: விவேக்