திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கொத்தம்பட்டி குண்டாற்றுப் பாலம் அருகில் வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்துகிடப்பதாகவும், ஜம்புநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பொன்னுசங்கம்பட்டி கிராமத்தில் ராயனேரி பாலத்தின் அடியில் மற்றொரு வாலிபர் பலத்த வெட்டுக்காயங்களு டன் இறந்துகிடப்பதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இருவரது உடல்களையும் மீட்ட போலீசார், அவர்களது உடல்களை துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/trichy_30.jpg)
முதற்கட்ட விசாரணையில், இறந்துபோன இருவரும் தஞ்சாவூர் மாவட்டம் நெடுவக்கோட் டையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதில் ஒருவர் காத்தலிங்கம் மகன் பிரபு என்பதும், ஜம்புநாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்துகிடந்தவர் இளங்கோ வன் மகன் ஸ்டாலின் என்பதும் தெரியவந்தது.
ஒரத்தநாடு பகுதியிலுள்ள ஒரு பாலத்தின் அடியில் ரத்தக் கறையைக் கண்டு போலீசார் மோப்ப நாய், கைரேகை நிபுணர்களைக் கொண்டு சோதனை நடத்தியதில், துறையூர் பகுதியில் கொலைசெய்யப்பட்டு இறந்து கிடந்த இருவரையும், ஒரத்தநாடு பகுதியில் கொலை செய்து துறையூர் பகுதியில் குற்றவாளிகள் வீசிச் சென்றது தெரியவந்தது.
இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்தனர் போலீசார். ஹரி, சூர்யா என்ற அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், கொலைக்கான காரணம் தெரியவந் துள்ளது.
பிரபு கார் ஓட்டுநர், திருமணம் செய்து விவாகரத்து ஆகி தனியாக வசித்து வந்திருக்கிறார். அப்பகுதி யிலுள்ள ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில் அவரது உறவினர்கள் பிரபுவைக் கண்டித்துள்ளனர். பலமுறை எச்சரித்தும் பிரபு அந்தப் பெண்ணுடன் இருந்த தொடர்பை விட மறுத்ததால், பிரபுவையும் அவரது நண்பர் ஸ்டாலினையும் அந்தப் பெண்ணின் உறவினர் களான ஹரி, சூர்யா, விஸ்வநாதன் ஆகியோர் அழைத்துச்சென்று கொலைசெய்து, பிணத்தை திருச்சி மாவட்டம் துறையூரில் வீசிச்சென்றது தெரியவந்தது. காவல்துறையினரைக் குழப்பு வதற்காக திட்டமிட்டு பிணத்தை வேறு, வேறு இடங்களில் வீசிச் சென்றுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை ஓரிரு நாட்களில் ஒரத்தநாடு காவல்நிலையத்திற்கு மாற்றப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கொலை செய்யப் பட்டவர்கள், கொலையாளிகள் அனைவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்த வாலிபர்களுக்கும் ஏற்கனவே அந்தப் பெண் ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம்தான் கொலையில் சென்று முடிந்திருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-05/trichy-t_0.jpg)