ட்சிக்கு எது நல்லதோ அதைச் செய்வதைவிட, கட்சியில் தனக்கான இடத்தை நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்வதிலும், கட்சியில் தனக்கெதிராக யாருடைய சுண்டுவிரலும் நீண்டுவிடக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பதே, ‘மிகத் தெளிவான அரசியல்’ எனத் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் பலரும் கடைப் பிடித்து வருகின்றனர். ‘தனக்குப் போட்டி யாக யாரும் வந்துவிடக்கூடாது.. தன்னை மீறி யாரும் வளர்ந்துவிடக்கூடாது’ என்பதிலேயே குறியாக உள்ளனர். மாநில அளவிலோ, மாவட்ட அளவிலோ, ஒன்றிய அளவிலோ கட்சியைத் தன் பிடிக்குள் ளேயே வைத்தி ருக்கவேண்டும் என்ற சுயநலத்தின் வெளிப் பாடாகவே இதனைக் கருத நேரிடுகிறது. விருதுநகரிலும் கூட ஆளும் கட்சியான தி.மு.க. வில் இத்தகைய ஒரு போக்கு உள்ளது.

dmk

விருதுநகர் கிழக்கு ஒன்றி யச் செயலாளராக செல்லப் பாண்டியன் இருக்கிறார். விபத் தினால் பாதிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ‘கஜினி சூர்யா’ போல், நினை வாற்றலில் பலவீனமாக இருக்கிறார். தொடர்ந்து இவரைக் கிழக்கு ஒ.செ.வாக வைத்திருப்பதற்குக் காரணம், முக்கிய பிரமுகரின் உறவினர் பினாமி ஒ.செ.யாக இருந்து வருவதுதான். அருப்புக்கோட்டை தொகுதிக்குள் வரும் விருதுநகர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ‘சுறுசுறு’ இளைஞர்கள், ‘செயல்படாத செல்லப் பாண்டியனை ஏன் பெயரளவுக்கு ஒ.செ.வாக கட்சி இன்னும் வைத்திருக்கிறது? எனக் கேள்வி எழுப்புவது, கேட்க வேண்டியவர்களது காதில் விழவே இல்லை.

விருதுநகர் வடக்கு ஒன்றியச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஆவுடையம்மாளுக்கு ‘கட்சியில் கிழக்கு- வடக்கு தெரியாது’ என்கிறார்கள், அவரை நன்கறிந்தவர்கள். ”தனக்கென்று செல்போன்கூட இல்லாத ஆவுடையம் மாள் எப்படி விருதுநகர் வடக்கு ஒன்றியத்தைக் கட்டிக்காத்து கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்தமுடியும்?” என வடக்கு ஒன்றிய தி.மு.க.வினர் ஆதங்கப்பட, ஆவுடையம்மாளைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். அந்த எண்ணில் ஆவுடையம்மாளின் மகன் காந்தி லைனில் வந்தார். "அம்மா வெளியே போயிருக்கிறார். வந்ததும் பேசச் சொல்கிறேன்''’என்றார். அடுத்து ஆவுடையம்மாள் நமது லைனுக்கு வரவில்லை.

விருதுநகர் மேற்கு ஒன்றியச் செயலாளராக இருக்கிறார், விருதுநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன். விருதுநகரைப் பொறுத்த மட்டிலும், அவர் மட்டுமே இங்கு ‘ஆல்-இன்-ஆல்’, அதற்காகவே ஆவுடையம்மாள் போன்றவர்கள், ஒ.செ. ஆக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் தனது எதிர்பார்ப்பை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

"எனது நிரந்தர அடையாளம் தி.மு.க. தொண்டன் என்பதுதான். எப்போதைக்கும் தொண்டன் என்ற அடையாளம் தான், உடன்பிறப்புகள் அனைவருக்கும் ‘சொத்தும் -கெத்தும்’ ஆகும். எந்நாளும் கழகம் வென்றிட மேலும் மேலும் வலிவும் பொலிவும் சேர்ப்பீர்'!’

தி.மு.க. தலைவர் சொல்வ தென்ன? சில மாவட்டங் களில் கட்சி நிர்வாகிகள் செய்வதென்ன?

Advertisment