மிழர்களின் முக்கியமான பண்டிகை பொங்கல். இந்தப் பண்டிகையின் போது மஞ்சளும் இஞ்சியும் வரித்துக்கட்டப்பட்ட புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைய லிடுவதோடு, அதில் தோகை மலர்ந்த கரும்புகளையும் வைப்பது தமிழர் மரபு. அதனால்தான் 2016 முதல் தமிழ்நாடு அரசு பொங்கல் பணம் மற்றும் பொங்கல் பரிசுகளுடன் இனிக்கும் கரும்பையும் இலவசமாக வழங்கி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசிலில் ‘கரும்பு குட்டையாக இருக்கிறது, ‘சப்பையாக இருக்கிறது’ என்பது போன்ற புகார்கள் கிளம்பியதால், இந்த ஆண்டு முதல் கரும்பை வழங்கவேண்டாம் என்று முதலில் அரசு முடிவெடுத்தது.

ff

இதனிடையே கடலூர் மாவட்டம் மதனகோபாலபுரத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன், பொங்கல் பரிசுகளுடன் கரும்பையும் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தார். இந்த சூழலில்தான் முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசாக மக்களுக்கு கரும்பையும் வழங்க உத்தரவிட்டார். இதற்காக 72 கோடியே 32 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒரு கரும்புக்கு 33 ரூபாய் என விலையும் நிர்ணயம் செய்யப்பட்டது. பொங்கல் கரும்பு வழங்க அரசு உத்தரவிட்ட சூழலில், டிசம்பர் 29-ஆம் தேதி கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்கள் இருக்க மாட்டார்கள். கூட்டுறவுத் துறை, வேளாண்துறையினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு கொள்முதல் செய்வார்கள்''’என்றார். அவர் சொன்னது போலவே இரண்டு துறையினரும் கிராமங்களுக்குச் சென்று கரும்புகளைத் தேர்வு செய்தார் கள். எல்லாம் முடிந்தபிறகு இப்போது கமிசன் கேட்டு சிக்கலை உண்டு பண்ணுகிறார்களாம்.

சிக்கலில் மாட்டிக்கொண்டவர்களில் ஒருவரான அந்த விவசாயி, நம்மிடம் மனம் திறந்தார். “ "எங்க ஊருக்கு காஞ்சிபுரத்தில் இருந்து வந்த அதிகாரிகள், விவசாயிகளிடம் "கரும்பு வாங்கிக்கொடுங்க. ‘ஆறடிக்கு மேல கரும்பு நல்லா திடமா இருக்கணும். கரும்புக்கு ரூ.17.25 உங்களுக்கு வந்துடும், அதைவிடக் விலை குறைச்சிப் பேசி, லாபத்தை எடுத்துக்கங்கன்னு ஆசை காட்டினாங்க. நானும் விவசாயிகளிடம் ரூ.16.00, 16.50, 17.00க்குன்னு பேசி முடிச் சேன். என் கொல் லைக் கரும்பையும் ரேட் பேசினாங்க. நான் தான் விவசாயிகள்ட்ட சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, பேங்க் பாஸ் புக் உள்ளிட்ட ஆதாரங்களை யும் வாங்கி அனுப்பி னேன். கடலூர் மாவட் டத்துக்குள்ள அனுப்புன கரும்புக்கு விலைன்னு தலா 22 ரூபாய் போட்டிருக்காங்க. சென்னைக்கு அனுப் புன கரும்புக்கும் 22 ரூபாய்தான் போட் டிருக்காங்க. ஆனா காஞ்சிபுரத்துக்கு அனுப்புனதுக்கு மட்டும் குறைவா 18.60 ரூபாயும், ராணிப்பேட்டை கரும்புக்கு 21 ரூபாயும்னு இஷ்டத்துக்கு ரேட் பிக்ஸ் பண்ணியிருக்காங்க.

ffஎங்க ஊர்ல மட்டும் 1லட்சத்து 30 ஆயிரம் கரும்பை அவங்களுக்கு வாங்கிக்கொடுத் தேன். வேற மாவட்ட அதிகாரிங்க மூலமாவும் அரசுக்கு கரும்பை வாங்கிக்கொடுத்தேன். இதுக்காக விவசாயிகள் கணக்குல கரும்புக்கு 22, 21, 18.00 ரூபாய் வீதம் கரும்பு சைஸுக் குத் தக்கபடி அக்கவுண்டல பணத்தைப் போட் டுட்டாங்க. பணம் எல்லாம் பைசல் ஆன நிலையில், இப்ப கரும்புக்கு 4 ரூபாய் 25 பைசா வீதம் கமிஷன் வாங்கிக் கொடுன்னு எங்க ஊர் சொசைட்டியின் செக்ரட் டரி மூலமா, அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கறாங்க. நான் போய் விவசாயிங்ககிட்ட கேட்டா, ‘நாங்க கஷ்டப்பட்டோம். அதிகாரிகள் வந்து தண்ணி பாய்ச்சினாங்களா?, சோலை கழிச்சாங் களா? அவங்களுக்கு எதுக்கு கமிஷன் காசு கொடுக்கனும்? அவங்க பேர்ல உனக்கு கமிஷன் கேட்கிறியா? ன்னு சண்டைக்கு வர்றாங்க. இப்படி யாக விவசாயிகளையும் ஏமாத்தி, அரசாங்கத்தையும் ஏமாத்தி, இந்த அதி காரிங்க கொள்ளைக்காசு பார்த்துக்கிட்டு இருக்காங்க''’என புலம்பினார்.

கருப்பஞ்சாவடியைச் சேர்ந்த விவசாயி குமரகுரு நம்மிடம், "என் னோட கரும்புகளைப் பார்க்க சென்னை கொளத்தூர்ல இருந்து அதிகாரிங்க வந்தாங்க. கரும்புக்கு 21 ரூபாய்னு பேசினாங்க. நான் 600 கட்டு, 550 கட்டுன்னு ரெண்டு லோடு கரும்பை வெட்டி அனுப்பினேன். ஒரு கரும்பு 14.00 ரூபாய்னு கணக்கு போட்டு என் அக்கவுண்டுக்கு பணம் போட்டிருக்காங்க. ஆனா என்கிட்ட கரும்பு வாங்கிட்டு போனவங்க அக்கவுண்ட்ல இருந்தோ, கூட்டு றவுத்துறை அக்கவுண்டல இருந்தோ பணம் வரல. எங்க ஊரைச் சேர்ந்த வேற ஒருவருடைய அக்கவுண்ட்ல இருந்துதான் பணம் போட்டிருக்காங்க. அவரோட அக்கவுண்டில், கரும்புக்கு 21 ரூபாய் வீதம் போட்டுட்டு, அவர் அக்கவுண்டிலிருந்து கரும்புக்கு 14 ரூபாய் வீதம் கணக்குபண்ணி எனக்கு அனுப்பிருக்காங்க. அதாவது ஒரு கரும்புக்கு 7 ரூபாய் வீதம் கொள்ளையடிச்சிட்டாங்க. ஏற்கனவே நொந்து போயிருக்கும் எங்களிடம் கமிஷன் கேட்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது''’என்றார் வேதனையோடு.

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் கே.பாலசுப்ரமணியத்திடம் விளக்கம் கேட்டோம். ”" விவசாயிகளுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தொகை கிடைக்க வேண்டும். விவசாயிகள் தரப்பிலிருந்து புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.

அதிகாரிகள் கமிஷன் கேட்டு, கரும்பு விவசாயி களின் மனதில் கசப்பை ஏற்றலாமா? தி.மு.க. அரசிலும் திருந்தாத அதிகாரிகள், கமிஷன் என்ற பெயரில் விவசாயிகளிடம் வழிப்பறி செய்யலாமா?

-சுந்தரபாண்டியன்