ck

(95) கலை உலக திராவிடம்!

"நல்ல எழுத்தாளர்கள் இல்லாத திரைப் படங்கள் கேப்டன் இல்லாத கப்பல்கள் போல் பயணிப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஒரு நல்ல படம் வெற்றியடையும்போது... அது திரைத்துறையில் பல புதியவர்களை உருவாக்குகிறது. தயாரிப்பாளர்களுக்கு ஊக்கம் தருகிறது. வியாபாரங்கள் சற்று விறுவிறுப்படைகிறது. வியாபாரத் தரகர்கள் சுறுசுறுப்படைகின்றனர். "அண்ணே... போனவாரம் வந்த அந்தப் படம் வசூல் அமர்க்களம். அதனால நம்ம படத்தை இப்ப ரிலீஸ் பண்ணுனா நாலு காசு பார்க்கலாம்'' என உற்சாகமாகப் பேசி, ஆறேழு வியாபாரமாகாமல் கிடக்கிற படங்களைத் தூசுதட்டி எடுத்து, அதை... இதைச் சொல்லி விநியோகஸ்தர்களையோ, தியேட்டர் அதிபர்களையோ அழைத்து படத்தை பார்க்க வெச்சு, ரிலீஸ் பண்ணிவிடுவார்கள். இப்படி அஞ்சாறு படங்கள் ரிலீஸாகி இரண்டு நாளோ, மூன்று நாளோ ஓடும். சில படங்களுக்கு முதல்நாள், முதல் காட்சிக்குப் படம் பார்க்க ஆள் வராமல் "ஷோ' நடத்த முடியாமல் போனதும் உண்டு. அதுக்கப்புறம் பழைய பல்லவிதான். "எந்தப் படமும் ஓடமாட்டேங்குது... வாங்க ஆள் வரமாட் டேங்கிறாங்க. தியேட்டர் கிடைக்கமாட்டேங் குது'' எனப் புலம்புவாங்க. இது எதுவரைக்கும்....? "டூரிஸ்ட் பேமிலி', "டிராகன்' போன்ற நல்ல படம் மறுபடி நல்லா ஓடுறவரைக்கும். இது எதைக் காட்டுது? நல்ல படங்கள் எப்பவும் நல்லாத்தான் ஓடும். குப்பைகளை இடையில் கொட்டி வழித்தடங்களை அடைக்கிறது யார்? சிந்திக்க வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத பல நன்மைகளை திரைப் படங்கள் தமிழ் மாநில மக்களுக்கு செய்திருக்கின்றன. அதை வரலாற்றில் இடம்பெறும் வண்ணம் பதிவு பண்ண வேண்டியது அவசியம்.

Advertisment

ஜெய்சங்கர், எனது எழுத்து -இயக்கத் தில் தயாரான "போக்கிரி பொன்னம்மா' படத்தில் நாயகனாக நடித்தார். அது முழுக்க, முழுக்க மசாலா படம். அதில் ஸ்ரீப்ரியா நாயகி. அவரது கதாபாத்திரம் சூப்பர். பஜாரில் சிறு, சிறு கடை நடத்துவோருக்கு தினமும் மொத்தமா காய்கறி வாங்கி, அதை சில்லறை... சில்லறையா விற்கிற வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், பலகாரக்கடை நடத்துவோர், கையேந்தி பவன் நடத்துவோர் இவர்களுக்கு மீட்டர் வட்டிக்கு கடன் கொடுக்கும் வட்டிக்கடை நடத்துபவர் ஸ்ரீப்ரியா. ஜெய்சங்கர் தன் அண்ணனுக்கு பயந்து வாழ்பவர். இவர் அப்பாவி, அண்ணனோ படுபாவி. தம்பி, சிறு தவறு செய்தாக்கூட சவுக்கால் அடிப்பார்.

ck

ஒருநாள் வேலைக்காரர்கள் இல்லாததால், தம்பி ஜெய்சங்கரை கூப்பிட்டு தனக்கு பிராந்தி இரண்டு பாட்டில் வாங்கி வரச்சொல்லி பணம் கொடுத்து அனுப்புகிறான் அண்ணன். பஜாருக்கு வந்த அப்பாவி ஜெய்சங்கரை... ஒத்தையா, ரெட்டையா ஆடவச்சு பாட்டில் வாங்கக் கொண்டுவந்த பணத்தை பறித்துவிடுகிறார்கள் சூதாடிகள். இது அண்ணனுக்குத் தெரிஞ்சா சாவடிச்சிடுவான். என்ன பண்ணுவதென தெரியாமல் பயந்து நடுங்கி நிற்கும் ஜெய் சங்கரை ஸ்ரீப்ரியா வட்டிக்கடைக்கு அழைத்து வந்து பணம் கடன் வாங்கிக் கொடுத்து உதவி செய்கிறான் ஒரு புரோக்கர். குறிப்பிட்ட தேதியில் ஜெய்சங்கர் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் ஸ்ரீப்ரியா, அவன் பங்களாவுக்குப் போய் அண்ணன் என்று தெரியாமல் ஜெய்சங்கர் அண்ணனிடம் கலவரம் செய்கிறாள். அண்ணனுக்கு ஸ்ரீப்ரியா மீது மோகம் ஏற்படுகிறது. தம்பி வெளியே போயிருந்தவன், வீட்டில் நடப்பது தெரியாமல் உள்ளே வர... அண்ணன் கோபமே படாமல், ஸ்ரீப்ரியாவிடம் கடன் வாங்கினியா எனக் கேட்க, பயந்து... பயந்து உண்மையைச் சொல்கிறான். அண்ணன் வட்டியோடு சேர்த்து பணத்தை ஸ்ரீப்ரியாவுக்கு கொடுத்தனுப்புகிறான். அவள் போனதும் தம்பியைக் கூப்பிட்டு ஸ்ரீப்ரியாவை "தோட் டத்து பங்களாவுக்கு கூட்டிக்கிட்டு வா, உனக்கு என்ன வேணும் னாலும் தர்றேன்'னு ஆசை காட்டுகிறான். ஜெய்சங்கரும், ஸ்ரீப்ரியாவிடம் பேசி அழைத்துப் போகிறான். அண்ணன் தன் எண்ணத்தை ஸ்ரீப்ரியா விடம் நிறைவேற்ற முனைகிறான். ஸ்ரீப்ரியா அண்ண னை நையப்புடைத்து ஒரு தூணில் கட்டி வைத்து விட்டு, ஜெய்சங்கரை தேடுகிறாள். அவனைக் காணோம். நடந்ததை எல்லாம் பார்த்து பயந்த பயந்தாங்கொள்ளி ஜெய்சங்கர், வீட்டை விட்டு ஓடி விட்டான். ஸ்ரீப்ரியா தன் வீட்டுக்கு வந்து தன் வேலையை செய்து முடித்து படுக்கப்போனால், அவள் படுக்கையறைக்குள் குறட்டைச் சத்தம் கேட்கிறது. தேடிப் பார்த்தால்... கட்டிலுக்கு கீழே தன்னை மறந்து, குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்கிறான் ஜெய்சங்கர். அவனது அப்பாவித்தனம் அவளுக்குப் பிடித்துவிடுகிறது. அண்ணன்கிட்டேயிருந்து என்னைக் காப்பாத்த உன்னாலதான் முடியும், அதனால நான் இங்கேதான் இருப்பேன் என பிடிவாதம் பிடிக்கிறான். இதன் தயாரிப்பாளர் கே.என்.சுப்பையா. எட்டாயிரம் அடிவரை தயாராகியிருந்த படம் அவர் மறைவினால் அப்படியே நிறுத்தப்பட்டது.

Advertisment

இந்தப் பட ஷூட்டிங்கிற்கு ஹைதராபாத் வந்த ஜெய்சங்கர், ஆந்திரா முதல் வரை சந்தித்து வெள்ள நிவா ரண நிதியாக பத்தாயிரம் ரூபாய் வழங்கினார். அதை ஆந்திரா பத்திரிகையாளர் கள் ஏகமனதாக பாராட்டி னார்கள். நானே மலைத்துப் போய் நின்றேன். இது வேறு மாநிலம்... ஜெய்சங்கர் தெலுங்குப் படங்களில் நடித்தவரல்ல... நடிக்க முயற்சி செய்தவருமல்ல. அந்தக் காலகட்டத்தில பத்தாயிரம் என்பது பெரும் பணம்.

நடிகர் பாண்டியராஜன், "பாட்டி சொல் லைத் தட்டாதே' என்ற ஏவி.எம். படத்தின் வெற்றிக்குப் பின்னால் புகழ் ஏணியில் ஏற ஆரம்பித்துவிட்டார். அடுத்து என் "அட்ரா சக்கை... அட்ரா சக்கை', "மனைவிக்கு மரியாதை', "பேத்தி சொல்லை தட்டாதே' போன்ற படங்களில் என் இயக்கத்தில் நடித்தார். "மனைவிக்கு மரியாதை' படத்தை இராம.நாராயணனுக்காக எழுதி இயக்கினேன். முதல் பிரதியை எண்பத்து மூன்று லட்சங்களில் நான் முடித்துக் கொடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இடையில் சின்னப் படங்கள் சரியாக ஓடாத நிலை ஏற்பட்டது. இராம.நாரா யணன் நேரில் வந்து "சேலம், மதுரை, திருச்சி மூன்று ஏரியாக்களை நீங்கள் எடுத்துக்கொள்ளுங் கள்' எனச் சற்று பலவந்தப்படுத்தி தந்துவிட்டு... நாற்பது லட்சத்துக்கு, எனக்கு மீதியெல்லாம்' எனச் சொல்லிவிட்டுப் போனார். என்னால் நட்பு காரணமாக மறுக்க முடியவில்லை. நானே படத்தை முடித்து ரிலீசுக்கு ஏற்பாடு செய்தேன். பாண்டிய ராஜனுக்கு கொஞ்ச பணத்துக்கு "செக்'கை கொடுத்துவிட்டு ரிலீஸுக்கு ஏற்பாடு செய்தேன். படம் சுமாராகத்தான் ஓடியது. ஏழு வாரங்கள்... ஆனால் நல்ல நற்ஹழ் ஈஹள்ற் பாண்டியராஜன், குஷ்பு, மணிவண்ணன், வடிவேலு எனப் பலர்.

சில மாதங்கள் கழித்து பாண்டியராஜன் என்னைப் பார்க்க வந்தார். "செக்' தொகையில் அறுபது சதவீதமே ரிலீஸின்போது கொடுக்க முடிந்தது. மூன்று ஏரியாவும் விற்க முடியாமல் எனக்கு நஷ்டமே ஏற்பட்டது. அதையும் பாண்டியராஜன் அறி வார். "மீதி பணத்தைக் கேட்கத்தான் வந்திருக்கிறார்' என நான் எண்ணி னேன். அதைப்பற்றி அவர் பேசவே இல்லை. போகும்போது, நான் கொடுத்திருந்த "செக்'கை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு "அண்ணே... அடுத்த படத்தை சீக்கிரமா ஆரம் பிங்க'ன்னு சொல்லிவிட்டுப் போனார். இப்படிப் பட்ட நல்லவர்களும் சினிமாவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ck

நான் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் திரையுலக திராவிட நாடு சென்னைதான். என்.டி. ராமாராவ், ஏ.நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, ஷோபன் பாபு, ராஜ்குமார், உதயகுமார், சத்யன், பிரேம்நசீர் போன்ற நாலு மொழி நாயகர்கள், நாயகிகள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சென்னையில்தான் வசித்தார்கள். நான்கு மொழிப் படங்களும் சென்னையில்தான் தயாராயின. திரையுலகைப் பொறுத்தவரை சென்னை திராவிட நகராகத்தான் இருந்தது. இதில் எந்தப் பிரச்சினை யும் எழுந்ததில்லை. ஒற்று மையாகவும், ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் இருந்தார்கள். பல இந்திப் படங்களும் இங்கே உரு வாகின. கன்னட மக்கள் பெங்களூருவில் தமிழர் களை தாக்குகிறார்கள், தமிழ்ப் படங்களை ஓட விடாமல் தடுக்கிறார்கள் என்றெல்லாம் சொல்கிறார் கள். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் வீடு, கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில்தான் இருந்தது. காலை அந்தப் பகுதியில் நடைப்பயிற்சி செய்வார். அவரை திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய படம் "வேடன் கண்ணப்பா'. இதனை தயாரித்து ராஜ்குமாரை கதாநாயகனாக அறிமுகம் செய்தவர் ஏவி.எம். அவர்கள்.

அன்றுபோல் கலையுலக திரைப்பட நகராக... திராவிட நகராக சென்னை தொடர்ந்து இன்றுவரை நீடித்திருந்தால் திராவிடநாடு உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். தமிழிலிருந்துதான் தென்னிந்திய மொழிகள் உருவாகின என்பது வரலாற்று உண்மை. திராவிடம் என்பது வெறும் கற்பனையல்ல... நிஜம்! அரசியலுக்காக, தாங்கள் கட்சி நடத்தவேண்டும் என்பதற்காக திராவிடம் இல்லை எனச் சொல்வது வேதனை தரும் விஷயமாகும்.

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்