ss

(78) சாதியை விடு! சாதித்து விடு!

ண்ணா என்ற உதயசூரியனின் ஒளி, எம்.ஜி.ஆர். என்ற சந்திரன் மீது பட்டு பிரகாசித் ததைப் போல, பொழுதுபோக்கு சாதனமாக விளங்கிய தமிழ்த் திரையுல கைப் பொருள் பொதிந்த கலைப்படைப்பு களாக மாற்றி, ஏழைபாளைகள், தட்டி தொட்டி களுக்கான பல்கலைக்கழகங்களாக ஆக்கி வைத்தது அண்ணாவின் கழகமே. கதைகளும், வசனங்களும், பாடல்களும் பாமர மக்களுக்கான உரிமைகளைப் பேசின. பகுத்தறிவையும், மொழிப்பற்றையும், சமநீதி, பெண் விடுதலை போன்ற விஷயங்களை குடிசைவாழ் மக்களிடம் எடுத்துச் சென்று மாநிலத்தின் ஆட்சி மாற்றத்துக்கே வழிகோலின என்றால் மிகையாகாது. அந்த அறிவாசானின் தரிசனத்தோடும், அவரால் ஒளிபெற்ற சந்திரன் கரம்பட்டும் கலையுலகம் வந்த நான், அந்த வழியைப் பின்பற்றினேன்.

என் முதல் கதையே மூடநம்பிக்கைகளை வளர்த்துவிட்டு, யாருக்கோ நோய் என்றால் அவங்க மீது நம்பிக்கையுள்ள, அன்புள்ள இன்னொருவர் குளிகைகளைச் சாப்பிட்டால் நோயாளி குணமாவார் என்று பொய்சொல்லி வயிறு வளர்க்கும் பூசாரி வாழும் ஒரு குக்கிராமத்தில், மருத்துவம் படித்த டாக்டர் ஒரு மருத்துவமனை அமைத்து, மக்களின் மூடநம்பிக்கையைப் போக்கி, தீமையை அகற்றி அந்த மக்களுக்கு விடியலைக் காட்டுவார்.

Advertisment

இப்படி என் படங்களின் கதையிலோ, வசனங்களிலோ சமூக சிந்தனை இல்லாமல் இருக்காது. அதைவிட முக்கியமான விஷயம் காரைக்குடி ராமசுப்பையா அவர்களின் மகன் என்பதாலும், கவிஞர் கண்ணதாசனால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டவர் என்ற காரணங்களும், நண்பர் எஸ்.பி.முத்துராமனை நான் இயக்குநர் ஆக்குவதற்கான அடித்தளங்கள். தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களின் புதல்வரை என் "மைனர் மாப்பிள்ளை' படத்தின் இசையமைப்பாளர் ஆக்கியது, செல்வபாரதியை என் உதவியாளராக இணைத்துக்கொண்டது, இளையகம்பனை ஆரம்ப நாட்களிலேயே பல பாடல்களை எழுத வைத்தது, கிளாமர் கிருஷ்ணமூர்த்தியை தயாரிப் பாளர் ஆக்கியது, எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய மாடக்குளம் தர்மலிங்கத்தை விஜயகாந்த் நடித்த "ஏமாறாதே ஏமாற்றாதே' என்ற படத்தில் மூலம் தயாரிப்பாளர் ஆக்கியது... இப்படி நான் செய்த பல நல்ல காரியங்களுக்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கும்.

அதேபோல் புதிது, புதிதாக கதைக்கான கருவையோ, முடிச் சையோ உருவாக்கிவிட்டால் அதை நான் வேலை செய்யும் கம்பெனி யிலோ, அல்லது என்னோடு வேலை செய்யும் உதவியாளர் களிடம் சொல்லி அபிப்பிராயம் கேட்பேன். அப்படி ஒரு கதைக் கரு...

மனைவி, கணவனை பலபேர் முன்னிலையில் தடிகொண்டு தாக்குவாள். இதனால் அவள்படும் துன்பங்கள்... என ஒரு தெலுங்குத் தயாரிப்பாளரிடம் சொன்னேன்.

Advertisment

ss

"எப்படி அது வரவேற்கப் படும்' என்றார்.

சற்று யோசித்து விட்டுச் சொன்னேன். "கணவன் ஒரு தொழிற்சங்கவாதி. அந்த முதலாளியின் காரில் மோதப் பட்டு, ஒரு தொழி லாளி இறக்கிறான். இந்த தொழிற்சங்கவாதியான கணவன், அந்த இறந்த தொழிலாளியின் உடலைச் சுமந்துவந்து முதலாளி அலுவலகம்முன் வைத்துப் போராடுகிறான். இதனால் கலவரம் வெடிக்கிறது... போலீஸ் வரவழைக்கப்படுகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவள் மனைவி. போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும் கணவனை லத்தியால் தாக்குகிறாள். அவன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டுகிறது...''

தயாரிப்பாளர் சொன்னார், "சூப்பரா இருக்கு... உடனடியாக ஆரம்பிக்கலாம்' என்று.

"வேற ஒரு தமிழ்ப்பட வேலை இருக்கு, முடிச்சிட்டு முழு ஸ்கிரிப்டோட வருகிறேன்'' என்று சொல்லி கிளம்பி விட்டேன். அதை நான் வேலைப்பளு காரணமாக மறந்தேவிட்டேன். சில மாதங்கள் கழித்து, இதே கதை தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடுவதாக பேசப்பட்டதால், படத்தைப் போய் பொதுமக்களோடு தியேட்டரில் பார்த்தேன். சத்தியமாகச் சொல்லுகிறேன் அந்தக் கதையை நானே எழுதி இயக்கியிருந்தால்கூட அவ்வளவு பிரமாதமாக பண்ணியிருக்க முடியாது. பின்னர் அந்த தயாரிப்பாளரே, அந்த படத்தின் தமிழ் மொழி உரிமையை எனக்குத் தந்தார். ஏவி.எம். நிறுவனம் தயாரித்து, விஜயகாந்த் -ராதிகா நடித்திருந்த "தர்ம தேவதை' படத்தைப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், பக்கத்தில் அமர்ந்திருந்த சரவணன் சாரிடம், "யார் வசனம் எழுதியது?' என்று கேட்க... என் பெயரை சரவணன் சார் சொன்னதும், "இந்த பையன் ஆரம்பத்திலிருந்தே நல்லா எழுதுறான்' என பாராட்டினாராம். இது நடந்தது பல வருடங்களுக்கு முன்னால்.

கடந்த மூன்று, நான்கு ஆண்டு களாக நான் "முரசொலி' போன்ற கழக பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுகிறேன். இதனைப் பாராட்டிய பிரபல ஐ.ஏ.எஸ். ஆபீஸர் எனக்கு எழுதிய கடிதம் அற்புதம்.

தற்போது "லிங்கம் காத்த முத்து' என்ற கதையை எழுதி வருகிறேன். அந்தக் கதையில் பிற்படுத்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த நாயகன், ஒரு ஊரையே உண்மையான சமத்துவபுரமாக நடத்தி வருகிறான். போலீசுக்கே அந்த ஊரிலே வேலையே இருக்காது. எவனும் தப்பான காரியத்தை நினைக்கத் தயங்குவான். அந்த ஊருக்கு ஸ்ரீராம் சாஸ்திரிகள் என்ற பக்கத்து ஊர் பிராமணர் ஓட்டமும் நடையுமாக காத்தமுத்து வைத் தேடிவருகிறார். பெயரை கேள்விப்பட்டி ருக்கிறாரே தவிர, ஆளைப் பார்த்ததில்லை. ஊர் மத்தியில் ஒரு மரத்தடியில் செருப்புத் தைத்து கொண்டிருப்பவரைக் காட்டி "இவர்தான் காத்த முத்து' என கூட்டிவந்தவர் அறிமுகம் செய்ய... ஸ்ரீராம் தயங்குகிறார்.

"என்ன சாமி... ஏதா வது தனியாக பேசணுமா?'' என காத்தமுத்து கேட்க, "ஆமா'' என்றும், "இல்லை'' என்றும் மாற்றி, மாற்றி தலையாட்ட...

"சரி, சாமி... வந்த விஷயத்தைச் சொல்லுங்க'' எனக் கேட்க...

"பக்கத்து ஊர் எம்.எல்.ஏ., காலேஜ் போன தன் மகளை கடத்திப் போய்விட்டதாகவும் போலீஸில் நான் ஏழை பிராமணன்ங்கறதுனால கேஸ் எடுக்கமாட்டேங்கிறாங்க'' என்றதும்...

காத்தமுத்து, "பாத்தீங்களா சாமி, சட்டம் கூட பொருளாதார நிலையைத்தான் பார்க்குது... ஜாதியை இல்லை. நானும், நீங்களும் இப்ப ஒரே ஜாதி... ஏழை ஜாதி'' எனச் சொன்னதும் சாஸ்திரிகள் வியந்து பார்க்கிறார்.

"சாமி, நீங்க வீட்டுக்குப் போங்க, அந்த எம்.எல்.ஏ.வே உங்க பொண்ணை எந்த டேமேஜும் இல்லாமல் கொண்டுவந்து விடுவாரு'' எனச்சொல்லி அனுப்பி வைக்கிறார். இரண்டு மூன்று நாட்கள் கழித்து சாஸ்திரிகள், தன் மகளோடும் மூட்டை முடிச்சுகளுடனும் வந்து காத்தமுத்து முன் நிற்க...

"என்ன சாமி... இப்ப என்ன பிரச் சனை?''

"உங்க உதவியை நான் நாடி வந்ததுனால நம்ம ஜாதிக்காரங்க எனக்கு வேலை தர்ற தில்ல. அதுதான் உங்க ளுக்கு நன்றி சொல் லிட்டு... வேற ஊருக்கு கிளம்பிட்டோம். என்ன இருந்தாலும் நாங்க வந்தேறிங்கதானே சாமி''.

"சாமி நீங்க சம்மதிச்சா, நான் செருப்பு நிறைய தைச்சுத் தர்றேன். நீங்க அதை வியாபாரம் பண்ணுங்க. லாபத்துல ஆளுக்குப் பாதி''

"ஓகோ... இதுதான் குலக்கல்வியா? ஆரம்பிச் சிடுவோம்.''

"கடைக்கு என்ன பெயர் சாமி''

"பிராமணாள் காலணி விற்பனை நிலையம்''

இது கதையின் ஒரு பகுதி. நக்கீரனில் என் கட்டுரை மூலமாக இப்படி கதைக் களங்களும் வரும்... பயனிருந்தால் கேட்டே எடுத்துக் கொள்ளுங்கள்!

(திரை விரியும்)

படம் உதவி: ஞானம்

ss