(69) அரசியலில் அடுத்த வாரிசை வளர்க்காத எம்.ஜி.ஆர்!
நான், பெப்சி தொழிலாளர்களின் குடியிருப்புக்காக ஐம்பது ஏக்கர் நிலமும், தொழிலாளர்கள் ஸ்டுடியோ, மருத்துவமனை, பள்ளிக்கூடம் கட்ட பதினைந்து ஏக்கர் நிலமும் இரு பத்திரங்களாக கொடுக்கும்படி கலைஞ ரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு அசந்துபோய்விட்டேன். "குகா... நீ கேட்பது புது விஷயம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தொழிலாளர்கள் ஸ்டுடியோ கிடையாது. ஆகவே தனியாக பத்திரம் தரப்பட்டால்... அதுவே பிற்காலத்தில் பிடிக்காதவர்கள் பிரச் சினை செய்யலாம். ஆனால் ஒரே பத்திரத்தில் பிரித்து எழுதித் தரச் சொல்கிறேன். ஐம்பது ஏக்கர் குடியிருப்புக்கு, பதினைந்து ஏக்கர் கலைக்கூடத்துக்கு என பெற்றுக்கொண்டு அறுபத்தைந்து ஏக்கருக்கும் வருடா வருடம் அறுபத்தைந்தாயிரம் குத்தகை பணத்தை ஒரே நேரத்தில் கட்டுங்கள்'' என்றார்.
என்ன தொலைநோக்குப் பார்வை கலை ஞருக்கு. அதேபோல் பதினான்கு வருடங்களாக குத்தகைப் பணம் அறுபத்தைந்தாயிரத்தை கட்டி வருகிறார்கள். அதுமட்டுமல்ல, தேர்தல் வரப் போகுது என அறிவிப்பு வந்ததும்... என்னை அழைத்து மிகவும் வருத்தத்தோடு "படாதபாடு பட்டு கலைஞர் திரைப்பட நகருக்காக உழைத்தாயே குகா... ஆட்சி மாற்றம் வந்தால்...?'' அவர் முடிக்குமுன் "அப்படி வராது, ஒருவேளை வந்தால்... நிலத்தை எடுக்க முடியாது. ஒரு பெரிய படப்பிடிப்புத் தளத்தைக் கட்டி முடித்து, இருபத்து மூன்று சங்க பிரதிநிதிகளையும் அழைத்துப் போய் கணபதி ஹோமம் நடத்தி விட்டேன். தேர்தலுக்கு முன் படப்பிடிப்பும் நடத்திவிடுவோம். ரஜினியிடம் பேசியிருக் கிறேன்'' எனச் சொன்னதும், கலைஞர் பாராட்டியதோடு "குடியிருப்புக்கு ஹட்கோ வங்கி பணம் ஐநூறு கோடி கடன் தர, அதை வீடுகள் கட்டிய பின் மாநில கூட்டுறவு சங்கம் மாதா மாதம் தொழிலாளர்களிடம் இன்ஸ்டால்மென்ட்டை வசூல் செய்து கட்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதே, அதையும் ஆரம்பித்துவிட முடியுமா?'' என கேட்டார்.
நான் தயங்கினேன். பின்னால் அம்மா அரசு வந்தது. நான் பெப்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன். ஆனால் அம்மா அரசு எனக்கொரு கடிதம் அனுப்பியது. "ஹட்கோ வங்கியில் உங்கள் ஒப்பந்தப்படி பணம் பெற்று குடியிருப்பு கட்டுங்கள், ஆனால் மாநில கூட்டுறவு சங்கத்தில் தொழிலாளர்களிடம் மாதா மாதம் பணம் வசூல் பண்ணி ஹட்கோவுக்கு கட்ட ஆள் பலமில்லை, ஆகவே நீங்கள் வேறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்' என அதில் இருந்தது.
அதைப்பற்றி கவலைப்படாமல் நான் மாற்று ஏற்பாடு செய்ய ஆரம்பித்ததும்... நமது கூட்டுறவு சங்க தேர்தலை அறிவித்து, என்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் செய்து, எல்லாவற்றை யும் முடக்கிவிட்டனர். அம்மா மறைவுக்குப் பின், பதவிக்கு வந்தவர்கள் இன்னொரு படப் பிடிப்புத் தளம் கட்ட ஐந்து கோடி நன்கொடை வழங்கியதோடு, அங்கேயே கால்கோள் விழா நடத்தி கலைஞர் திரைப்பட நகரில் எம்.ஜி.ஆர். படப்பிடிப்புத் தளம், ஜெயலலிதா படப்பிடிப் புத் தளம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தினர். இன்றைய தலைவர் செல்வமணி, சாமிநாதன், சண்முகம் ஆகியோர் கடுமையாக உழைத்தனர். இன்று அந்த படப்பிடிப்புத் தளத் தில் ரஜினி, விஜய், அஜித் என எல்லா பிரபலங்களின் படங்களுக்கும், பிறமொழிப் படங்களுக்கும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகின்றன.
ஆனால் மறுபடியும் கலைஞரின் கழக அரசு மாண்புமிகு ஸ்டாலின் தலைமையில் வந்ததும் நான் பெரும் பெரும் கனவுகள் கண் டேன். நேரில் நான் முதல்வரை சந்தித்தபோது, பையனூர் குடியிருப்பை கவனியுங்கள் எனச் சொன்னேன். செல்வமணி பலமுறை சந்தித்து, தற்போது ஒரு அரசாணை பெற்றிருக்கிறார். இனி தொழிலாளர்கள் குடியிருப்பு வேலைகள் நடக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. கலைஞர் திரைப்பட நகரம், முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான அரசின் அரவணைப்போடு உலகத்தரம் வாய்ந்த திரைப்பட நகராக மலரும் என்பது உறுதி.
நாடகப் பள்ளியில் படித்த காலத்திலிருந்து ஜெயலலிதாவை நான் நன்கு அறிவேன். அதன்பின் என் முதல் படத்திலிருந்து பல படங்களில் நாங்கள் ஒன்றாகப் பணியாற்றி னோம். அவரின் பலமே விரைவாக, பிறர் வியாக்கியானம் பண்ண முடியாத அளவுக்கு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது. அதிகம் வாசிக்கும் பழக்கமுள்ள அவரின் ஆங்கிலப் புலமை அதிசயிக்கத்தக்கது. அவரிடம் இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸே கிடையாது. தனிமைதான் அவரின் பலவீனம். அதைத் தவிர்க்க எண்ணித்தான் அவர் வலையில் சிக்கிய மீனாகிவிட்டார். தனிமை யை அவர் பலமாக மாற்றியிருப்பாரே யானால்... மறக்க முடியாத மாநில முதல்வராகி யிருப்பார். எம்.ஜி.ஆர். போல் தோல்வியை சந்திக்காத முதல்வராக இருந்திருப்பார். ஜெயி லுக்குப் போகும் நிலையும் வந்திருக்காது. தற்போது வரலாறு எப்படி இருக்கிறது?
காங்கிரசை தமிழகத்தில் அண்ணா வீழ்த்தினார்.
கலைஞரை, எம்.ஜி.ஆர். வீழ்த்தினார்.
ஜெயலலிதாவை கலைஞர் வீழ்த்தினார்.
அண்ணாவின் பலம் அறிவு, எழுத்தாற் றல், பேச்சாற்றல், தோழமைத் தொடர்பு.
கலைஞரின் பலம் அவரின் ஓய்வறியா உழைப்பு. அவரால் முடியாதது எதுவுமே இல்லை என்று சொல்லுமளவு எல்லா துறைகளிலும் துணிச்சலோடு ஈடுபடுவது. வெற்றியையும், தோல்வியையும் சமமாகக் கருதுவது.
எம்.ஜி.ஆரின் பலம் மனிதநேயம். பசி என்ற நோய் பரவாமல் தடுத்து நிறுத்தி, வந்தவருக்கெல்லாம் வயிறார உணவளித்து, தன் கரங்களில் ஊழல் வியாதியின் கறை படியாமல் கடைசிவரை வாழ்ந்து முடித்தது.
ஜெயலலிதாவின் பலம் தன் கட்சிக்கு பல புதியவர்களைக் கொண்டுவந்து, முகவரி தந்து... பல புதியவர்களை அமைச்சர்களாக் கியது. தன் காலத்திலேயே இன்னொருவரை முதல்வராக்கிக் காட்டியது. ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு தைரியமாக முன்னுரிமை வழங்கியது. சுருக்கமாகச் சொல்லவேண்டு மானால்... ஜெயலலிதாவின் ப்ஹள்ற் ற்ங்ய்ன்ழ்ங் அவர் கட்சியான அண்ணா தி.மு.க., அம்மா தி.மு.க. ஆக மாறிவிட்டது என்றே சொல்லலாம். பல பழைய கூடாரங்கள் காலியாகின்றன. ஒருசில புதிய கூடாரங்கள் உருவாகி வருகின்றன.
இந்தியாவுக்கே இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தேவையோ என மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். 1967இல் அண்ணாவும் அவர் தம்பிகளும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் மூலமாகவும், மொழிப் போராட்டத்தின் பலத்தினாலும் சாமானியர்களின் அரசு அமைந்தது. அதில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டது, கலைஞர் தாக்கப்பட்டது, அரிசி விலை உயர்வு, அரியலூர் ரயில் விபத்து, பல கட்சிகளின் கூட்டணி அனைத்தும் வெற்றிக்கு வித்திட்டன.
அண்ணா மறைவுக்குப் பின் அண்ணாவின் கொள்கைகள் மறக்கப்பட்டதாகவும், ஊழல் பெருகிவிட்டதாகவும் எம்.ஜி.ஆர். பேச ஆரம் பித்ததால்... அவர் பொருளாளர் பதவி பறிக்கப் பட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கொதித்தெழுந்தனர். அவர்களே புதிய கட்சியை ஆரம்பித்து எம்.ஜி.ஆரை தலைவர் என்றார்கள். அ.தி.மு.க. உதயமானது. அண்ணாயிசம், கொடியில் அண்ணா படம், தாங்கிப் பிடிக்க மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திண்டுக்கல் இடைத்தேர்தல் கடடியங்கூற... 1977இல் எம்.ஜி.ஆர். முதல்வரானார். அன்று முதல் அவர் உயிரோடு இருந்தவரை அவரே முதல்வர். இதுவே எம்.ஜி.ஆரின் பலத்தை நிரூபித்தது. அவரின் பலவீனம் கட்சிக்குள் அடுத்த வாரிசை தயார்பண்ணாமல் விட்டது. அவர் மக்களை எஜமானர்கள் என நம்பினார்.
எம்.ஜி.ஆர். எப்போதும் திரையுலகிற்குள் அரசியலை கொண்டுவந்தது கிடையாது. அவர் மறைவுக்குப் பின் திரையுலகுக்குள் அரசியல் நுழைந்தது. இது கட்சிகளின் பலவீனத்தைக் காட்டுவதாக நான் நினைக்கிறேன்.
சமுதாய சீர்திருத்தத்துக்காக சமநீதி நிலைக்க, பகுத்தறிவு வளர படங்கள் பயன்பட லாம். ஜாதிகளை வளர்க்க, கட்சிகளை வளர்க்க, சமுதாயங்களை பிளவுபடுத்த, ஒரு மதத்தின் துதி பாட படங்கள் தயாரிக்கப்படுவது பலவீனமான செயலாகும். கலை என்பது மக்கள் வாழ்வின் ஒளியாக மலரவேண்டும் என்பதே என் எண்ணம்.
(திரை விரியும்)