ss

(58) அஸ்திவாரமும்... அலங்காரமும்!

மாந்த தயாரிப்பாளரை காப்பாற்றப் போய், நான் பட்ட பாடு. ஒரு மிகப்பிரபலமான திரைப்பட கம்பெனியில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அந்த தயாரிப்பாளர் இந்தியாவிலிருக்கும் அத்தனை மொழிகளிலும் படங்களைத் தயா ரித்து புகழ்பெற்றவர். ஒருதடவை அவர் மும்பை பயணத்தை முடித்து வந்தபோது அளவுக் கதிகமான மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். அதற்கான காரணத்தை அவரே சொல்ல ஆரம்பித்தார்.

Advertisment

அன்று இந்தி திரையுலகில் முடிசூடா மன்னர்களாக விளங்கிய கதாசிரியர்களிடம் ஒரு கதையைக் கேட்டு, அது பிடித்துப்போகவே அவர்களுக்கு மொத்த தொகையையும் கொடுத்து, திரைக்கதையை டைப் செய்து ஒரு பவுண்ட் புத்தகமாக வாங்கி வந்ததை சாதனை யாக எண்ணி மகிழ்ந்தார். அந்த காலகட்டத்தில் அப்படியொரு கதையை எழுதி வாங்கி வருவது பெரும் சாதனைதான். ஏனெனில், தொடர்ந்து வெள்ளிவிழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் கொடுத்த எழுத்தாளர்கள். அவர் களின் திரைக்கதை அவ்வளவு சுவாரஸ்யமாக வும், விறுவிறுப்பாகவும் இருக்கும். எல்லா தயாரிப்பாளர்களும், கதாநாயகர்களும் அந்த எழுத்தாளர்களின் கதைகளை வேண்டி விரும்பி, காத்திருந்து பெறும் நிலை. அவர்களிடம் வாங்கி வந்த கதைபுக்கை எப்போதும் கையி லேயே வைத்திருந்தார் நமது தயாரிப்பாளர். அந்தக் காலகட்டத்தில் அந்த எழுத்தாளர்களின் ரசிகனாக நானும் இருந்தேன். ஆதலினால் நம் தயாரிப்பாளரின் கையிலிருந்த கதை என்ன வாயிருக்கும் எனத் தெரிந்துகொள்ள வேண்டு மென்ற ஆவல் எனக்குள் இருந்தது. அதை நானே கேட்டால் நன்றாக இருக்காது என்ற நாகரிக எண்ணத்தினால் மவுனமாக இருந்தேன்.

ஆனால் இரண்டு நாட்கள் கழித்து தயாரிப் பாளரே என்னை அழைத்தார், சென்றேன். முதலில் அந்தக் கதையை, தான் பல தடவைகள் படித்துவிட்டதாக சொல்லி, கதையின் கருவை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு அந்த டைப் செய்யப்பட்ட புத்தகத்தை என்னிடம் தந்து படித்துப் பார்த்துவிட்டு அபிப்பிராயம் சொல்லும்படி கேட்டார். நானும் அதை வாங்கிப்போய் என் அறையில் அமர்ந்து பெரும் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் படித்து முடித் தேன். பெரும் அதிர்ச்சி... மீண்டும் படித்தேன். அதிர்ச்சி இரண்டு மடங்கானது. நமது தயாரிப்பாளரை கதை சொல்லி ஏமாற்ற முடியாது. கதைகளை தீர்மானிப்பதில் அவர் வல்லவர். அவர் எதற்காக இந்தக் கதையை வாங்கி வந்துள்ளார். எனக்கு குழப்பமாக இருந்தது.

அதற்குள் அவரே என் அறைக்கு வந்தார். "படிச்சு முடிச்சாச்சா?' எனக் கேட்டார்.

Advertisment

"ஆமா'' என்று சொன்னேன். அபிப்பிராயம் எதுவும் சொல்லவில்லை. அவரே பேசட்டும் என அமைதி காத்தேன்.

"பத்து தடவைக்கு மேலே படிச்சேன். கதை சொல்லும்போது இருந்த சுவாரஸ்யம் படிக்கும்போது ஏற்படவில்லை... அதனால் உன்னை படிக்கச் சொன்னேன்'' என்றார்.

அதன் பின்பும் நான் அமைதி காத்தால் அது நம்பிக்கைத் துரோகம் என எண்ணி, ஒரே வரியில் பதில் சொன்னேன். "இது கதையா தெரியல... உதவியாளர் கதையை அழகா உங்க கிட்ட சொல்லியிருக்காங்க'' என்று சொன்னேன்.

அவர், "நான் எப்படி ஏமாந்தேன்...' என வருத்தப்பட்டார். ஷூட்டிங் ஆரம்பிக்கிறதாக வாக்குறுதி கொடுத்துட்டு வந்துட்டேனே என உணர்ச்சிவசப்பட ஆரம்பித்துவிட்டார்.

"இருக்கிற குறைகளைச் சொல்லி, வேறு கதை கேட்கலாமே'' என அபிப்பிராயம் சொன்னேன்.

ss

"அப்படின்னா நான் ஜட்ஜ்மெண்ட் இல்லாதவனா என்ற எண்ணம் தோன்றுமே'' என்றார்.

"அதுக்காக சரியில்லாத கதையை பட மாக்கி பல லட்சங்கள் நஷ்டப்படக்கூடா தல்லவா? அதை நீயே என்னோடு பம்பாய் வந்து, அவங்ககிட்ட சொல்லணும்'' என்றார்.

அவரின் இக்கட்டான சூழ்நிலையை நன்றாகப் புரிந்துகொண்ட நான் மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டேன்.

பம்பாய் சென்று தாஜ் ஓட்டலில் தங்கி னோம். மாலை, எழுத்தாளர்கள் மகிழ்வோடு வந்தார்கள். "யார், யார் நடிக்கலாம், எப்ப ஷூட்டிங்' என வந்ததும் கேள்விகளோடு ஆரம்பித்தனர்.

நம்மாளு சட்டென என்னை, தன் கம்பெனி கதாசிரியர் என அறிமுகப்படுத்தி... "ஸ்கிரிப்ட்ல சில சந்தேகங்கள் கேட்டாரு, அதனால அவரையே கூட்டிக்கிட்டு வந்துட் டேன். நீங்களும் அதைக் கேளுங்க'ன்னு சர்வசாதாரணமா என்னை பணயம் வச்சாரு.

எனக்கு கொஞ்சம் ஆட்டம்தான், இருந்தா லும் தைரியத்தை வரவழைச்சுட்டு "நான் உங்க ஃபேன். எல்லா படங்களையும் பார்த்திருக் கேன்...'' என ஆரம்பித்தேன். அதுக்கு பலன் கிடைக்கல.

"முதல்ல உங்க சந்தேகங்களைக் கேளுங்க'' என்றனர்.

"இது உங்க ஸ்கிரிப்ட் மாதிரி தெரியலியே'' என்றேன். தொடர்ந்து சற்று கலவரமான வாக்குவாதம். ஆனாலும் நான் என் கேள்விகளை ஆணித்தரமாக கேட்டு, "இது உறுதியான வெற்றிக்கான கதையும் அல்ல, திரைக்கதையும் உங்கள் வழக்கமான புதுமை கலந்ததும் அல்ல' என்றேன்.

ஒருவர் எழுந்து வந்து என்னை கட்டி யணைத்து முதுகில் பாராட்ட தட்டுவதுபோல் "யு ஆர் பிரிலியண்ட்' எனச் சொல்லி பளார், பளாரென ஓங்கி அடித்தார். நான் பல்லைக் கடித்து வலியைத் தாங்கிக்கொண்டேன். எப்படியும் நம் தயாரிப்பாளர் அந்தக் கதையை எடுத்து நஷ்டப்பட்டுவிடக்கூடாது என்பது என் நோக்கமாயிருந்தது.

அடுத்த கதாசிரியர் சற்று மரியாதையாக என்னைப் பாராட்டி கைகுலுக்குவது போல் கையை நசுக்கினார்.

பின்னர் அனைவரும் டீ குடித்தோம். வேறு கதை பார்க்கலாம் என முடிவெடுத்தோம். அதன்பின் சற்று சகஜமாக என்னிடம் பேசிய அவர்கள் என்னை, "பம்பாய் வந்து தங்கினால் நன்றாக சம்பாதிக்கலாம்' என்றனர்.

அதில் ஒருவர் சொன்னது என் நினைவில் இன்றும் நிற்கிறது.'When tomatoes are coming from Madras and selling like apples, you are a real apple... if you come to Bombay you can make lakhs' Fu\ôo. Sôu ùNôuú]u... "Me coming to cinema is not for money. I am much more comfortable in Madras".

இருப்பினும் பல ஹிந்திப் படங்களை நான் எழுதினேன், வெற்றியும் பெற்றேன். ஆனால் அங்கேயே தங்கி வேலை செய்ய நான் விரும்பியதே இல்லை.

ஒரு நல்ல தயாரிப்பாளரை நஷ்டப்பட விடாமல் காப்பாத்தின திருப்தி என் மனதில் இருந்தது.

ss

இதேபோல் ஏவி.எம்.மில் சரவணன் ஸார் அநேகமாக எந்தக் கதையை யாரிடமிருந்து வாங்கினாலும் அதை என்னி டம் சொல்லி அபிப்பிராயம் கேட்பார். சில கதைகளில் ஓட்டைகளை அடைக்கச் சொல்வார். ஒரு புதிய படம் ஆரம்பிக்க எண்ணி, ஒரு புதிய டீமை அழைத்து ஏற்பாடுகள் செய்தார். ஒரு கதைய தேர்வு செய்தபின், என்னை அழைத்து அந்த கதாசிரியரை எனக்கு அறிமுகப்படுத்தி விட்டு, கதையை கேட்கச் சொன்னார். பக்கத்து அறையில் அமர்ந்து கதையைக் கேட்டு முடித்து... சாப்பாட்டு நேரமானதால் ஸாரிடம் சொல்லாமல் வீட்டுக்கு வந்துவிட்டேன். வீடு வந்து சேருவதற்குள் போன் வந்தது. "என்ன பசியா?'' என்றார் சரவணன் ஸார். "சாப்பிட்டவுன் கிளம்பி வாங்க'' என்றார். நான் மறுநாள் வருவதாகச் சொல்லி சமாளித்தேன்.

மறுநாள் போகாமலிருக்க முயற்சி பண்ணினேன்... முடியவில்லை. நேராகப் போனேன். "கதை சரியாக இல்லை'' என தைரியமாகச் சொன்னேன்.

"சரிப்படுத்திக் குடுங்க'' என்றார். வேண்டா வெறுப்பாக தலையாட்டிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன்.

இரண்டு, மூன்று நாட்கள் சமாளித்தேன், முடியவில்லை. சரவணன் ஸாரும் விடவில்லை. போய் அவர் முன் அமர்ந்தேன். வழக்கம்போல் திருத்தப்பட்ட திரைக்கதையோடு நான் வந்திருப்பதாக எண்ணினார் ஸார். நான் வெளிப்படையாகப் பேசினேன்.

"ஸார்... எந்தக் கோணத்திலும் இந்தக் கதை யை திருத்த முடியவில்லை. ஒரு விஷயம் கூட மனதைக் கவருவதாகவோ, புதுமையாகவோ இல்லை. இது படமாக்க ஏற்ற கதை அல்ல. அதே எழுத்தாளர்கிட்ட வேற கதை கேளுங்க'' எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

ஆனால் அந்தக் கதையை எடுத் தார்கள்... படம் ஓடவில்லை. இதேபோல் இரு கதைகள்... நான் வேண்டாமென்று சொன்னேன், ஆனால் படம் எடுத்தனர். பெரும்நஷ்டத்துக்கு ஆளானார்கள். இதில் நான் பெருமைப்பட எதுவும் இல்லை. ஆனால் தயாரிப்பாளர்கள் நஷ்டப் பட்டால் சினிமா துறைக்கு நல்லதல்ல. அதுமட்டுமல்ல, ஒரு படம் வெற்றியடைய வேண்டு மானால் நல்ல கதைதான் அஸ்திவாரம். மற்றதெல்லாம் அலங்காரமே!

அடுத்து.. .ரஜினி...!

(திரை விரியும்)