cc

(51) கணித்தது.... கனிந்தது!

ஜெயா, ஜெயசுதா, சத்யப்பிரியா, ராஜலட்சுமி போன்ற பல புதுமுகங்களை நான் அறிமுகம் செய்த நாட்களில், ஏவி.எம். ஆவிச்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஒருவர் என்னைச் சந்தித்தார். உடன் ஒரு இளம்பெண். "இவள் சினிமாவில் நடிக்க விரும்புகிறாள். "நீங்க வந்து சொன்னா... குகநாதன் சார் படத்துல எனக்கு சான்ஸ் கிடைக்கும்னு நம்புறா. அதனால் இவளை அழைச்சிட்டு வந்தேன்...' என தயங்கித் தயங்கி அந்த ஆசிரியர் சொன்னார்.

வந்திருந்த பெண்ணை ஏற இறங்கப் பார்த்தேன். ஊஷ்ல்ழ்ங்ள்ள்ண்ஸ்ங் ங்ஹ்ங்ள், ப்ண்ற்ற்ப்ங் ள்ட்ர்ழ்ற், க்ஷன்ற் ஜ்ஹள் ஸ்ங்ழ்ஹ் ப்ங்ஹய்.... "இவ்வளவு ஒல்லியா இருக்கீங்களே... நல்லா. சாப்பிட மாட்டீங்களா?'' எனக் கேட்டேன்.

Advertisment

அந்தப் பெண் தமிழில் பதில் சொன்னாலும்கூட அந்த மொழிநடையில், அவர் மலையாளி என்பதை புரிந்து கொண்டேன். "இப்போ படப்பிடிப்பில் இருக்கும் நான் சம்பந்தப்பட்ட படங்கள்ல நல்ல வேஷங்கள் எதுவும் இல்ல. நீங்கள் இரண்டு மூணு மாதங்கள் காத் திருப்பதாக இருந்தால், அடுத்த படத்துல வேஷம் தந்து... நானே சினிமாவில் அறிமுகம் செஞ்சு வைக்கிறேன். அதுக்குள்ள நல்லா சத்தான உணவுகளைச் சாப்பிட்டு கொஞ் சம் உடம்பை தேற்றவேண்டும்'' என்றேன். மகிழ்ச்சியோடு விடைபெற்றுப் போனார்கள்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து தன் அப்பாவை அழைத்துக்கொண்டு அந்தப் பெண் வந்தார். இந்தமுறை அப்பா பேசினார். "சில மலையாளப் படங்கள்ல என் பொண்ண நடிக்கக் கேட் கிறாங்க, ஆனா... உங்க படத்தில் அறிமுகம் ஆவதற்குத்தான் என் பொண்ணு விரும்புறா. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா... நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டா, மத்தவங்களுக்கு பதில் சொல்லவும், உங்க படப்பிடிப்பு தொடங்கும்வரை காத்திருக்கவும் உதவியா இருக்கும்' என்றார்.

cs

Advertisment

அவர் சொன்ன விஷயங்களுக்குள் சொல்லப்படாத ஒரு விஷயம் ஒளிந்திருப்பதை நான் புரிந்துகொண்டேன். ஆகவே உடனேயே ஒப்பந்தம் தயார் செய்யச் சொல்லி, கூடவே சம்பள அட்வான்ஸாக ஒரு தொகையும் கொடுத்தேன்.

நான் அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணியில் இருந்தபோது என்னைப் பார்க்க ஒரு இளைஞர் வந்தார். அன்பாகப் பேசிய அவர், ஒரு வேண்டுகோளுடன் வந்திருப்பதைப் புரிந்து கொண்டேன். ஒரு கதையை மிக நேர்த்தியாகச் சொன்னார். பொறுமையாக கேட்டேன். கதை சற்று மலையாள பாணியில், வித்தியாசமாகவும் இருந்தது. "இந்தப் படத்தை நானே இயக்கித் தயாரிக்கப் போகிறேன்' என்று சொன்னார். நான் மனப்பூர்வ மாக வாழ்த்தினேன். மிகுந்த தயக்கத்துடன் தன் வேண்டுகோளை வைத்தார். "கதாநாயகியாக புதுமுகத்தை அறிமுகம் செய்ய விரும்புறேன். நீங்க ஒப்பந்தம் செஞ்சு வச்சிருக்க புதுமுகத்தை என் படத்துக்கு விட்டுத்தர முடியுமா?' எனக் கேட்டார்.

அவரின் பேச்சும், நம்பிக்கையும் சொன்ன கதையும் மிகவும் பிடித்திருக்கவே, நான் சற்றும் சிந்திக்காமல் சம்மதித்தேன். "இந்தப் பெண் பெரிய நடிகையாக, குணச்சித்திர நடிகையாக வருவார் ' என்கிற கணிப்பையும் அவரிடம் சொன்னேன்.

நான் ஒப்பந்தம் செய்துவைத்திருந்த புதுமுக நடிகை... சுமித்திரா. அவரை தன் படத்திற்கு விட்டுத்தரச் சொன்னவர் டைரக்டர் பசி துரை.

மறுநாளே சுமித்திரா, தன் தந்தையாரோடு வந்து மனப்பூர்வமாக நன்றி சொல்லிப் போனார். அதன்பின் துரை அவர்களும், சுமித்திராவும் எனக்கு நல்ல நண்பர்களானார்கள். அவர்களின் முதல் படமான "அவளும் பெண்தானே' படமும் வெற்றிபெற்றது. சுமித்திரா என் பல படங்களில் பின்னாளில் நடித்தார்.

எனது "மாங்குடி மைனர்' படத்தை வாங்கி நல்ல லாபம் பார்த்த தயாரிப்பாளர் கே.என். சுப்பையா அவர்கள், நான் அடுத்து தயாரித்த "முயலுக்கு மூணு கால்' படத்தையும் வாங்கினார். சுருளிராஜன். விஜயபாபு, நிஷா, தங்கவேலு, வி.கே.ராமசாமி, அசோகன், சச்சு, மனோரமா, சத்யப்பிரியா, வெண்ணிறஆடை மூர்த்தி, ப.த.ராமச்சந்திரன், சரோஜா இப்படி அன்றைய நகைச்சுவை நடிகர்கள் நடித்த வண்ணப் படம். வெறும் ஐந்துலட்ச ரூபாய்க்குத்தான் இந்தப் படத்தை அவர் வாங்கினார். படத்திற்கு ஒரு வில்லன் நடிகர் தேவைப்பட்ட சமயம்... என் நண்பரான அன்றைய பிரபல டான்ஸ் மாஸ்டர் தங்கப்பன் ஒரு நாள் என் அலுவலகம் வரும்போது ஒரு இளைஞனை அழைத்துவந்தார். இவர் தெலுங்கு இசையமைப் பாளர் வேணுவின் மகன் என அறிமுகப்படுத்தி னார். உடனே நான் அந்த இளைஞரைப் பார்த்து "உங்களுக்கு நடிக்கும் ஆர்வம் உண்டா?'' எனக் கேட்டேன். அவர் தங்கப்பனை பார்த்தார். அவர் சிரித்துக்கொண்டே, "அதுக்குத்தான் அழைச்சுக் கிட்டு வந்தேன்'' என்றார். அவர் பெயர் பானுசந்தர். இப்பவும் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கி றார். "முயலுக்கு மூணுகால்' படத்தில் அறிமுகமான பானுசந்தர், தொடர்ந்து பாலுமகேந்திரா படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றார்.

"முயலுக்கு மூணு கால்' பட உச்சகட்ட காட்சியில் யானை, ஒட்டகம், குதிரை, கழுதை, சைக்கிள், கார் நந்ஹற்ங் இப்படி பல வாகனங்கள் மீதும், மிருகங்கள் மீது ஒவ்வொரு நடிகரும் அமர்ந்து ஒருவரை ஒருவர் துரத்தும் காட்சி ஹைதரபாத்தில் படமாக்கப்பட்டது. அங்கே நடத்துகொண்டிருந்த ஒரு சர்க்கஸ் கம்பெனியின் மிருகங்களை வாடகைக்குப் பேசி அழைத்து வந்து படமாக்கினோம். இதனை வேடிக்கை பார்க்க ஆயிரம் பேர் கூடிவிட்டனர். அதனால் தங்கவேலு ஏறிவந்த கழுதை மிரண்டு அங்கு மிங்கும் ஓடி, கலாட்டா பண்ண ஆரம்பித் தது. வெண்ணிற ஆடை மூர்த்தி நன்றாக சோசியம் சொல்லக் கூடியவர். இந்த கிளைமாக்ஸ் காட்சியில் அவர் யானையில் ஏறி துரத்தவேண் டும். அவர் ஆச்சரியத்தோடு ஒரு விஷயத்தை சொன்னார். தன் சொந்த ஜாதகத்தின்படி அந்த மாதத்தில் யானை சவாரி செய்யும் பயன் இருந்த தாகவும், அது எப்படி நடக்கும் என தான் சிந் தித்ததாகவும், அது இந்த படப்பிடிப்பின் மூலம் நடந்துவிட்டதாகவும் சொன்னார். ஆனால் இப்படி நடந்தது, நிறைவேறியது என்றும் சொன்னார். இத்தனை நகைச்சுவை நடிக -நடிகையரை வைத்து, பத்தொன்பது நாட்களில், ஐந்து லட்சத்துக்குள் முடித்துக் கொடுத்தேன். "முயலுக்கு மூணு கால்' படம், சன் தொலைக் காட்சியில் அந்த நாட்களில் அதிக தடவை ஒளிபரப்பு செய்யப்பட்ட படமாக இருந்தது.

cs

"முயலுக்கு மூணு கால்' படம் முடிந்ததும், அடிதடி நிறைந்த பெண்கள் ஆக்ஷன் படம் எடுக்க ஒரு கதையை தயார் செய்தேன். ஸ்ரீபிரியா, ஜெய்சங்கர், சுருளிராஜன் ஆகியோரை ஒப்பந்தம் செய்தேன். படத்திற்குப் பெயர் "போக்கிரி பொன்னம்மா'. கதை பற்றிய அபிப்பிராயத்தை தெரிந்துகொள்வதற்காக கே.என்.சுப்பையாவிடம் சொன்னேன். அவர் அபிப்பிராயம் எதுவும் சொல்லாமல் படத்தை விலைபேச முற்பட்டார்.

"மாங்குடி மைனர்', "முயலுக்கு மூணு கால்' ஆகிய முதல் இரு படங்கள் எனக்கு லாபம் இல்லை. வாங்கிய சுப்பையாவிற்குத்தான் லாபம். அதனால் இப்படத்தை கொடுக்க விரும்பவில்லை. ஆனால் அவர் விடுவதாக இல்லை. இறுதியாக முதல் பிரதிக்கு ஒரு விலையை நிர்ணயித்து... அதற்கு மேல்வரும் லாபத்தை ஆளுக்குப் பாதியாக எடுக்க லாம் எனச் சொன்னார். நானும் வழக்கம்போல் சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். ஹைதராபாத் சாரதி ஸ்டூடியோவில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி; ஒன்பதாயிரம் அடி வளர்ந்து விட்டது. படம் சுப்பையா செட்டியாரின் நடய பிலிம்ஸ் பெயரில் தயாரிக்கப்பட்டது. எடுத்தவரைக்கும் எடிட் பண்ணிப் பார்த்தோம். தயாரிப்பாளர் உட்பட படம் பார்த்த அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. நான் மளிகைக்கடை செட் சாமான்கள், ஸ்டுடியோ வாடகை... இவற்றிற்கெல்லாம் படப்பிடிப்பு முடியும் சமயத்தில் முழுப்பணத்தை யும் தருவதாக முன்பணம் கொடுத்து, தேவையானதை வாங்கிவந்தோம். அந்தளவுக்கு ஹைதராபாத்தில் எனக்கு செல்வாக்கு இருந்தது.

எடுத்த வரைக்கும் ஒன்பதாயிரம் அடி படம் பார்த்து திருப்தியடைந்த சுப்பையா செட்டியார், சென்னை போய் பணம் அனுப்புவதாகச் சொல்லிக் கிளம்பினார். யார் கெட்ட நேரமோ... அவர் சென்னை சேர்ந்ததும், பல பிரச்சினைகள் தலையெடுத்தன. ஒரு முதல்வரின் பினாமியாக செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு. ஏறத்தாழ அந்த சமயத்தில்தான் ஜெமினி லேப் ஸ்டுடியோவை விலைக்கு வாங்கியிருந்தார் சுப்பையா. பத்திரிகைகளில் இவர் பெயரும், பல யூகங்களும் தலைப்புச் செய்தியாகப் போடப்பட் டன. இந்த சிக்கல்களால்... ஹைதராபாத் கடன் களை நானே அடைத்து விட்டு, சென்னை திரும்பினேன்.

படம் அவர் பெய ரில் எடுக்கப்பட்டதால், நான் அதைத் தொடர்ந்து எடுத்தால்; பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என என் வக்கீல்கள் அறிவுறுத்தியதால் "போக்கிரி பொன்னம்மா' கிடப்பில் போடப்பட்டது.

"போக்கிரி பொன்னம்மா' எடுத்துக்கொண்டி ருந்த நேரத்தில்... சிவாஜி ஸாரிடம் ஒரு அருமை யான கதையைச் சொல்லி... அவரை ஹைதாரபாத் அழைத்துப்போய் கே.என்.எஸ். சுப்பையா செட்டியாருக்காக "ஜெயித்துக் காட்டுகிறேன்' என்ற படத்தை மூன்று நாட்கள் ஷூட்டிங் நடத்தினேன். செட்டியாருக்கு ஏற்பட்ட பினாமி பிரச்சினை காரணமாக இதுவும் நிறுத்தப்பட்டது. படங்கள் மட்டுமல்ல அவர் ஜெமினி ஸ்டூடியோவுக்குள் கட்ட ஆரம்பித்த பெரிய ஹோட்டலும் நிறுத்தப்பட்டது. இப்போதும் அந்த முடிக்கப்படாத பெரிய கட்டிடத்தை பார்க்க முடியும்.

(திரை விரியும்)

படம் உதவி: ஞானம்