cc

(4) "நீங்க மலையாளியா?'' கலைஞரிடம் கேட்ட ஷாலினி!

ல்லாதவன் சொல்லாம எடுத்தா திருட்டு!

சொல்லிட்டு எடுத்தா சோஷலிஸம்!

Advertisment

இல்லாதவன் பொல்லாதவனா ஆகும்போதுதான் சோஷலிஸம் நடைமுறைக்கு வரும்!

"மைக்கேல் ராஜ்' படத்தின் கதைப்படி... அப்பாவியான மைக்கேல் ராஜை (ரகுவரனை), திவாகர் (சரத்பாபு) ட்விஸ்ட் பண்ணுகிற இடத்தில் வரும் வசனம் இது.

"இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிச்ச வசனம்' எனக் குறிப்பிட்டு, இந்த வசனத்தையும் மேடையில் சொன்னார் கலைஞர்.

Advertisment

"ஏழாவது மனிதன்' படத்தில் மிகவும் தன்மையான; அமைதியான கதாபாத்திரத்தில் நடித்த ரகுவரனை எப்படி இந்த "டைனமிக்' கதாபாத்திரத்தில் போடத் துணிந்தீர்கள்? இந்தக் கதையில் ரஜினியோ, கமலோ நடித்திருந்தால் இன்னும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்குமே?

-இப்படித்தான் பலரும் என்னிடம் கேட்டார்கள்.

அவர்கள் கேட்டதுபோல; சொன்னதுபோல நடந்திருந்தால் இன்னும் பெரிய வெற்றிப்படமாக இருந்திருக்கலாம். ஆனால்... "ரஜினி படம்' ... "கமல் படம்" என்று பேசப்படுமே தவிர, என்னுடைய படமாக பேசப்பட்டிருக்காது.

அதுமட்டுமல்ல... ரகுவரனை "மைக்கேல்ராஜ்'-ஆக நான் மாற்றியதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.

"ஏழாவது மனிதன்' படத்தின் ஒளிப்பதிவாளர் தர்மா, ஒருநாள் ரகுவரனை அழைத்துக்கொண்டு வந்து என்னிடம் அறிமுகப்படுத்தினார். அவரை நான் ஏவி.எம்.மிற்கு அழைத்துச் சென்று, சரவணன் சாரிடம் அறிமுகப்படுத்தினேன். அத்துடன் நான் கதை எழுதிய "ஒரு மனிதனின் கதை' தொலைக்காட்சித் தொடரிலும், வேறு சில படங்களிலும் ரகுவரன் நடிப்பதற்கு உதவியாக இருந்தேன்.

அப்போதெல்லாம் நேரம் கிடைக்கும் போதெல்லாம்... சிறுவயது கமல் என்னிடம் பலமொழிக் கதைகள் குறித்தும், பிறமொழிப் படங்கள் பற்றியும் பேசுவார். அதுபோலவே... ரகுவரனும் என்னிடம் பேசுவார்; விவாதிப்பார். அப்படிப் பேசுகையில் ரகுவரனை நான் உற்றுக் கவனிப்பேன். அவருக்குள், மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்று இருப்பதாக உணர்ந்தேன்.

cc

திடீரென ஒருநாள், "சார்... இப்ப நான் பண்ணிக்கிட்டிருக்கிற கதாபாத்திரங்களுக்கு மட்டும் தான் லாயக்கா? ஒரு ஹீரோவுக்கான மெட்டீரியல் என்னிடம் இல்லையா?' எனக் கேட்டார்.

கமல் இதுபோல ஒருமுறை என்னிடம் கேட்டது, எனக்கு சட்டென ஞாபகத் துக்கு வந்தது. கமல் கேட்ட கேள்விக் கான பதிலை நான் சொல்லு வதற்கு முன்பு, கமல் "அரங்கேற்றம்' ஆகிவிட்டார். ரகு வரனுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வர வில்லை.

ஆனால்... "ரகுவரன் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால், உலக நாயகனுக்கு நிகராக வரமுடியும்' என என் உள்மனம் அன்றே சொன் னது. அதனால் "மைக்கேல் ராஜ்' கதையை ரகுவரனிடம் சொன்னேன். படுகுஷியாக; வித்தியாசமான நாயகனாக அதில் அறிமுகமானார். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் வேறு பரிமாணத்தைக் கொடுத்தார். அந்த கதாபாத்திரத்தை அவர் தன் ஆழ்மனதுக்குள் அனுப்பி, ஜீரணித்து வெளிக்கொண்டுவந்தார்.

"மைக்கேல் ராஜ்' படத்திற்காக எனக்கும், ரகுவரனுக்கும் பல விருதுகள் வந்திருக்க வேண்டும். ஆனால் பெரிய படங்களைத் தயாரிக்கும் பிரபல தெலுங்கு கம்பெனி, இந்தப் படத்தை தயாரித்திருந்ததால்... படத்தை விருதுகளைத் தரும் கமிட்டிகளுக்கு அனுப்ப அவர்களுக்கு நேரமில்லை.

"மைக்கேல்ராஜ்' படத்தில் பிரபல நட்சத்திரங்களுடன் "ஃபிலிம் இன்ஸ்ட்டி டியூட்'டில் படித்த சிலரும் நடித்திருந்தனர். சப்-கலெக்ட்டராக பணியாற்றிய சொர்ணவேல் என்கிற என் நண்பரும் இந்தப் படத்தில் நடித்தார்.

இந்த இடத்தில் நான் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்...

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் 1961-62-ல் புதுமுக வகுப்பில் நான் படித்துக்கொண்டிருந்தபோது... என் தமிழ்ப் பேராசிரியர் மா.கி.தசரதன், விரிவுரையாளர் மு.பா.பாலசுப்ரமணியம், இஞபஆசவ பேரா சிரியர் ச.ராமலிங்கம், பாளையங்கோட்டை யைச் சேர்ந்த டஐவநஒஈஆக ஆசிரியர்... அத்தனைபேர்களும் என்னிடம் மிகுந்த நேசத்தோடு பழகுவார்கள். அதில் ராமலிங்கம் அவர்கள் என்னைத் தனது "மனித தெய்வம்' என்ற நாடகத்தில் நடிக்க வைத்தார். நாடகத்திற்கு அறிஞர் அண்ணா தலைமை யேற்றார். அந்தச் சமயத்தில் ராமலிங்கத் திற்கு சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனால் ஆசிரியப் பணி காரணமாக அவரால் வரமுடியவில்லை. அவரால்தான் நான் அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றேன். நான் சீக்கிரமே திரையுலகில் பிரபலமாகிவிட்டேன். என்னைப் பார்க்க ராமலிங்கம் அடிக்கடி சென்னை வருவார். காஞ்சியில் நடந்த பல விழாக்களுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்துச் சென்று கௌரவித்தார். நான் பலமுறை ராமலிங்கம் அவர்களை சினிமாவில் பணியாற்ற அழைத்தும் அவரால் வரமுடியவில்லை. பணி ஓய்வுக்குப் பின் வந்தார். "மைக்கேல்ராஜ்' படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பொறுப்பை ராம லிங்கத்திடமும், சப்-கலெக்டராக பணியாற்றிய சொர்ணவேலிடமும் ஒப்படைத்தேன். கிட்டத் தட்ட... ஒருமாத காலம்... என் அலுவலகத்திலேயே தங்கியிருந்து பணியாற்றினார் ராமலிங்கம். படப்பிடிப்பின் போதும் கலந்துகொண்டு பணியாற்றினார்.

cc

அதனால்தான் "மைக்கேல்ராஜ்' படத்தின் டைட்டிலில் அவர்கள் இருவர் பெயரையும் "திரைக்கதை அமைத்தவர்கள்' எனப் போட்டு மனநிறைவு அடைந்தேன்.

நான் இயக்கிய "மைக்கேல்ராஜ்' வெற்றிப் படம், நான் ஒரு கதாசிரியன் என்ற வகையில் எனக்கு நூறாவது படமானது. நூறு நாட்களைத் தாண்டி ஓடிய இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவை ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடத்தினோம். கலைஞர் தலைமையில் நடந்த விழாவில் கவிஞர் சுரதா, வலம்புரி ஜான், கவிஞர் மு.மேத்தா, உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

தான் ஹீரோவாக நடித்த படம் பெரும் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில்; இந்த விழாவின் போது படத்தின் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கைக்கடிகாரம் பரிசளித்து, அனைவரையும் அசரவைத்தார் ரகுவரன்.

குழந்தை பேபி ஷாலினிக்கு சுவா ரஸ்யமான கதா பாத்திரம்... அதை மிகச்சிறப்பாகச் செய்திருந்தார். விழா மேடையில் கலைஞ ரின் அருகில் சென்று பேசிக்கொண்டிருந்த ஷாலினி, "மசஈகஊ... நீங்க மலையாளியா?'' எனக் கேட்டார். அவ் வளவு துறுதுறுப்புடன் இருப்பார் ஷாலினி. உடனே கலைஞர், என்னிடம் "அந்தக் குழந்த என்ன கேக்குது பாத்தீங்களா?'' என்று சிரித்தார்.

கலைஞர் சிறப்புரையாற்றியபோது... அந்த சோஷலிஸ வசனம் உட்பட சில வசனங்களைக் குறிப்பிட்டார். அப்போது மண்டபமே கைதட்டல்களால் ஆர்ப்பரித்தது, அரங்கம் அதிர்ந்தது.

"குகநாதனின் தமிழ்ப்பணியும், திரையுலகப் பணியும் தொடரவேண்டும்'' என வாழ்த்திப் பேசினார் கலைஞர்.

இந்த விழாவில் என் தாயார் ராஜேஸ்வரி அம்மாள் கலந்துகொண்டார். என் தந்தையாரின் மறைவுக்குப் பிறகு, எந்த சினிமா நிகழ்ச்சிகளுக்கும் போகாத என் தாயார் கலந்துகொண்டது என் நூறாவது படமான "மைக்கேல் ராஜ்'லின் நூறாவது நாள் விழா மட்டுமே. அத்துடன் எனது தம்பிகள் வரதன், ஆனந்தன் இருவரும் இணை தயா ரிப்பாளர்களாக பணியாற்றிய படம் இது. கலைஞர் என்னை வாழ்த்திப் பேசியபோது என் தாயாரின் கண்கள் பனித்துப் போனது மகிழ்ச்சியால்.

அடுத்த கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால்...

மிகச் சிறுவயதிலேயே என் தூக்கத்தைக் கெடுத்த ஒரு நடிகையைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்...

அந்த நடிகை.....?

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

அண்ணாவின் இரு மொழி!

அறிஞர் அண்ணா அவர்கள் அழகிய தமிழில், அடுக்கு மொழியில் மேடைகளில் பேசுவார். ஆனால் வீட்டில் அண்ணாவுடன் கேஷுவலாக பேசிக்கொண்டிருக் கையில்... சென்னையின் பூர்வாங்க மக்களுக்கே உரிய சென்னை பாஷையில் பேசுவார். இருவித பேச்சையும் கேட்க சுவையாக இருக்கும்.