cc

(39) இது... என் கதை!

"வாழ்க்கையில நீங்க சாதிச்சுட்டதா, வெற்றியடைஞ்சுட்டதா நினைக்கக்கூடாது. மத்தவங்க அதை உணரும்போதுதான் அந்த வெற்றிக்குப் பெருமை. குறிப்பா, என்புள்ள ஜெயிச்சுட்டான் என்கிற அடக்கமான பெரு மிதம் பெற்றவர்களுக்கு உண்டாக வேண்டும். அதுதான் நியாயமான வெற்றி, உங்கள் திறமைக்கான வெற்றி!

நான் சிறு வயதிலிருந்தே பல தலைவர் களுடன் பழகியதை உங்களோடு பகிர்ந்திருக் கிறேன். நான் சினிமாவில் ஜெயிக்க வேண்டுமென்று இலங்கையிலிருந்து வந்தேன். என் முதல் படமே வாத்தியார் எம்.ஜி.ஆரின் "புதிய பூமி' படத்தின் கதாசிரியர் என்கிற பெருமையை எனக்குத் தந்தது.

Advertisment

அண்ணாவுடன் நான் பழகிய அனுபவத்தை எழுதியிருக்கிறேன். எம்.ஜி.ஆருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். கலைஞருடன் கருத்து களை பகிர்ந்திருக்கிறேன். பெருந்தலைவர் காம ராஜருடன் பழகியிருக்கிறேன். எல்லா பிரபலங்களு டனும் பழகியதை எழுதிவரும் என் கதை என்ன?

புங்குடு தீவு... இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் உள்ள பல தீவுகளில் அதிகமாகப் பேசப்படும் குட்டித் தீவு. என் தந்தையாரின் பூர் வீகம் இந்த தீவுதான். இந்தத் தீவிலிருந்து கோடியக் கரை பதினாலு மைல்கள். யாழ்ப்பாணம் சுமார் பன்னிரெண்டு மைல்கள். இந்த தீவிலிருந்து, நான் பிறந்த காலங்களில் இரண்டு கடல் கடந்து படகுகளில் பயணித்துதான் யாழ்ப்பாணம் போகமுடியும். இந்த தீவில் விவசாயம் செய்பவர்கள், காங்கேயம் காளை களைத்தான் பயன்படுத்துவார்கள். அதேபோல் உயர் படிப்பு படிப்பவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு வந்துதான் படித்திருக்கிறார்கள்.

எனது தந்தையார் வள்ளங்களில் போய்த்தான் டீச்சர்ஸ் டிரெயினிங் படித்து, தன் பத்தொன்பதாவது வயதிலேயே ஒரு பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியராக பணியாற்றிய போது, தன் சொந்த முயற்சியில் கணேச வித்யாசாலை என்ற கல்விக் கூடத்தைக் கட்டியிருக்கிறார். என் சித்தப்பா குமாரசாமி, சித்தி அங்கயற்கண்ணி ஆகியோரும் ஆசிரியர் களே! என் தந்தையார் ஈழத்திலிருந்து "இந்து போர்ட்' நடத்திய பல பாடசாலைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பில் அமர்ந்து பல அரிய சேவைகளை செய்து யாழ்குடா நாட்டில் நற்பெயர் பெற்றவர். தன் உறவுகள் படித்து முன்னேற வேண்டும் என பாடுபட்டவர். அந்தக் காலத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்த என் தந்தையார் இந்தியா வுக்கு வந்து, பல காங்கிரஸ் மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார். அதன்பின்னால் ஜாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியுள்ளார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கீழ்த்தட்டு மக்களுக்காகப் போராடினார். பின்னர் நகரமன்றத் தலைவரானார். என் மாமா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் "வித்வான்' பட்டம் பெற்று ஸ்கத்தா கல்லூரியில் விரி வுரையாளராக பணியாற்றினார். பல மாணவர் களின் முன்னேற்றத்துக்கு இவர் காரணமாக இருந்தார். பண்டிதர் ஆறுமுகம் எனக்கு இன்னொரு சித்தப்பா. இவர் இலக்கியத்தில் பல சாதனைகள் படைத்தவர். என் அப்பா வின் தம்பி குமாரசாமி, அவர் மனைவி அங்கயற்கண்ணி. இவருடைய சித்தப்பா ஏர்அம்பு மாஸ்டர். இவர் மகள்தான் மதிவதனி. (விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் துணைவியார்)

Advertisment

புங்குடு தீவு... விவசாயம், கல்வி, வியாபாரம் மூன்றிலும் புகழ்பெற்ற மனிதர்களை தந்திருக் கிறது. பக்தியிலும் அத்தீவின் மக்கள் முன்னணி யில் இருக்கிறார்கள். அங்குள்ள கண்ணகி அம்மன் கோயில் தற்போது உலகப்புகழ் பெற்று விளங்குகிறது. அண்மையில் எண்பது கோடி களுக்கு மேல் செலவு செய்து கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தி னார்கள். அந்தக் கோவில்தான் என் பத்தாவது வயதில்... என் தமிழ்ப்பற்றுக்கான விதை விதைக் கப்பட்ட இடம். என் வித்வான் மாமா ஆறு முகம் அவர்கள் கண்ணகி அம்மன் கோவில் வீதியிலேயே மாபெரும் சிலப்பதிகார விழா ஒன்றினை நடத்தினார். பத்து வயதில் அந்த விழாவுக்கு என் தந்தையாருடன் நானும் போயிருந்தேன். இந்தியாவிலிருந்து பல முக்கிய பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். அதில் மூவரின் பேச்சு என்னை கிறங்கடித்தது. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள், பேராசிரியர் அ.ஞானசம்பந்தம் அவர்கள், (பிற்காலத்தில் இவர் மகன் பச்சையப்பன் கல்லூரியில் என் வகுப்புத் தோழன்), மூன்றாவது கி.வா.ஜகன் நாதன் அவர்கள். இம்மூவரின் பேச்சைக் கேட்டுத்தான் எனக்குள் முதல் மொழி மயக்கம் ஏற்பட்டது. தமிழ் பேசினால் இவர்களைப் போல் பேசிப் பழகவேண்டும் என முடிவு செய்தேன். இங்கு வந்த பின்தான் இந்த மூவரும் தமிழுக்கு ஆற்றியுள்ள சேவை களைத் தெரிந்து கிறங்கி நின்றேன்.

இங்கே சமய அரங்குகளில், கம்பன் கழகங் களில் பிரபலமாக விளங்கும் இலங்கை ஜெய ராஜ், என் மாமா வித்வான் ஆறுமுகம் அவர் களின் சிஷ்யன் ஆவார். கம்பன் கழகம், சிவ நெறிக் கழகங்கள், சைவ சித்தாந்த அமைப்பு களை இலங்கையில் உருவாக்கி வளர்த்தெடுத் தவர்களில் வித்வான் ஆறுமுகம் அவர்களுக்கு பெரும் பங்குண்டு. புங்குடு தீவை பூர்வீகமாகக் கொண்ட பலபேர் இலங்கையின் பெரும் பணக் காரர்களாகவும் இருக்கிறார்கள். திரைத்துறை யில் முன்னூறு படங்களுக்கு மேல் பணியாற்றிய நான், அந்தத் தீவைச் சேர்ந்தவனே! அந்தத் தீவில் அன்றும் ஒரு தியேட்டர் கிடை யாது, இன்றும் ஒரு தியேட்டர் கிடையாது. ஆனால் இன்று, பல நூறு படங்களை இந்தியாவிலிருந்து வாங்கி இலங்கை முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தராகவும், பல தியேட்டர்களின் உரிமையாளராகவும் விளங்கும் ஆரூரான் அவர்கள் என் உறவினர்... புங்குடு தீவை பூர்வீகமாகக் கொண்டவர். லைகா நிறுவனத்தின் நிர்வாகி ரவியும் நம்மவர், புங்குடு தீவைச் சேர்ந்தவர். இப்படி பல துறைகளில் உலகப் புகழ்பெற்ற பலர் புங்குடு தீவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க... என் தாத்தா சின்னத்தம்பி அவர்கள், பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்தார். இவரின் மாணவன்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள். இது என் தாய்வழி உறவு. அதுபற்றி அடுத்த அத்தியாயத் தில் எழுதுகிறேன்!

(திரை வளரும்)

படம் உதவி: ஞானம்

____________

நட்புக்கும் உண்டு நன்றிக்கடன்!

ஏவி.எம்.மில் நான் சேர்ந்த போது என்னிடம் அனைவருமே நன்றாகப் பழகினார்கள். ஏவி.எம். முருகன் என் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டி, எனக்குத் தனி யாக ஒரு அலுவலக அறையை ஒதுக்கித் தந்தார். அதனருகே உதவி இயக்குநர்கள் அலுவலக அறை இருந்தது. அதில் லஷ்மிநாராயணன், மூர்த்தி, சண்முகம், எஸ்.பி.முத்து ராமன் போன்ற ஏவி.எம். உதவி இயக்குநர்கள் இருப்பார்கள். நான் அடிக்கடி அவர்களோடு போய் பேசு வேன். அவர்களில் எஸ்.பி.முத்து ராமன் அவர்கள் என்னோடு அன்பாகவும் உரிமையுடனும் பழகு வார். நான் எடுத்தெறிந்து பேசுவது, பிடிக்காத ஒன்று நடந்தால் சண்டை போடுவது என நடந்துவந்த என்னை அறிவுரை சொல்லி மாற்றியவர் எஸ்.பி.எம். நான் திரைக்கதை வச னம் எழுதிய "எங்க மாமா' படத்தில் இணை இயக்குநராக எஸ்.பி.எம். பணியாற்றியதனால், எங்கள் நட்பு அதிகமானது. திரையுலகில் எனக் குக் கிடைத்த முதல் நண்பர் முத்து ராமன்தான். என்னை தயாரிப்பாள ராக்க அப்பச்சி முடிவு செய்ததும், டைரக்டர் பெயரை எழுதித் தரச் சொன்னார்.

c

நான் எஸ்.பி.எம். பெயரை எழுதிக் கொடுத்தேன். செட்டியார், முத்துராமன் படித்து விட்டு "வேற டைரக்டர் பெயரைச் சொல்லுங்க' என்று கேட்டார். நான் புட்டண்ணா கனகல் என்று சொன் னேன். டபுள் ஓ.கே. என்றார் அப்பச்சி. அந்தப் படத்தில் முத்து ராமன் இணை இயக்குநராக பணியாற்றியதால் எங்கள் நட்பு அதிகமானது. ஆனால் மனதுக்குள் அப்பச்சி ஏன் இவர் பெயரை அடித்தார் என்ற கேள்வி மட்டும் நிலைத்து நின்றது. ஏவி.எம். "காசேதான் கடவுளடா' நாடகத்தை படமாக்க முடிவு செய்து, அதை எழுதிய சித்ராலயா கோபுவையே இயக்குநராகப் போட்டார். உடனே முத்துராமன் ஏவி.எம்.மிலிருந்து விலகுவதாக செட்டியாரிடம் ராஜி னாமா கடிதத்தைக் கொடுக்க, இதை தெரிந்துகொண்ட நான், அந்தக் கடிதத்தை திருப்பி வாங்கி விட அப்பச்சியிடம் எவ்வளவோ போராடினேன், அது நடக்க வில்லை. அதற்காக முத்துராமனை ஊருக்குப் போகவிட மனமில்லை. அதனால் என் கம்பெனியில் சேர்த்துக்கொண்டேன். அப்பச்சி அவர்கள் முத்துராம னைப் பற்றி எடுத்தமுடிவு சரியல்ல என்று என் மனம் சொன்னது. ஆகவே எப்படியாவது அவரை ஒரு வெற்றிப்பட இயக்குநராக மாற்றிக் காட்ட வேண்டும் என முடிவெடுத்து புது யூனிட்டை உருவாக்கி படத்துக்கு "கனிமுத்து பாப்பா' என பெயர் வைத்தேன். படப்பிடிப்பை ஏவி. எம்.மில் நடத்த அப்பச்சி ஒப்புதல் தரவில்லை. ஆகவே பரணி ஸ்டுடியோவில் ஆரம்பித்தேன். இதை அப்பச்சி கண்டு கொள்ளவில்லை. என் நட்பை அவர் அறிவார். படம் பெரும் வெற்றி. அடுத்து "பெத்த மனம் பித்து' மாபெரும் வெற்றி. அனைவருக்கும் 1 பவுன் மோதிரம் அணிவித்தேன், தியேட்டர் ஆபரேட் டர்களுக்கு சங்கி- பரிசளித்தேன். தொடர்ந்து ஐந்து படங்கள் என் கம்பெனியில் பண்ணினார் எஸ்.பி.முத்துராமன். அதன்பின் அவரை ஏவி.எம்.சரவணன் ஸாரிடம் ஒப்படைத்துவிட்டேன். என் நட்புக்கான நன்றியை செய்துவிட்டதாக ஒரு மன நிம்மதி!